ஜி.பாலன் மக்கள் தொடர்பாளராக பணியாற்றி வரும் அத்தியாயம் ஆறு, காதல் ஓசை, என் பெயர் குமாரசாமி, ஓடும் மேகங்களே, சாமிப்புள்ள, முன்னவர், மாந்தன், அச்சமின்றி, சண்முகிபுரம், தலக்கோணம், செங்காடு, கொத்தனார், காதல் பிசாசே, ஒத்தவீடு போன்ற படங்களின் தகவல்கள் கீழே வருமாறு
ஓடும் மேகங்களே
சாரா மேகா மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் விஜய் பாரதமணி அதிக பொருட்செலவில் மிகப்பிரமாண்டமாக தயாரிக்கும் முதல் படம் ''ஓடும் மேகங்களே'' இப்படத்தின் திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் என்.ஆர்.என்.செழியன். இவர் அர்ஜூன் நடித்த 'ஓற்றன்' படத்தை இயக்கிய இளங்கண்ணனிடம் அசோசியேட் இயக்குநராக இருந்தவர். இவர் இயக்கும் முதல் படம் இது.
இப்படத்தில் ரஞ்சித், சிவா, சதீஸ் என மூன்று புதுமுகங்கள் அறிமுகமாகின்றனர். அதே போல ரோஷிணி, நட்சத்திரா, மேக்னா ஆகிய மூன்று புதுமுகங்கள் கதாநாயகிகளாக அறிமுகமாகின்றனர். இதில் ரஞ்சித் ஆக்ஷன் ஹீரோவாக நடிக்கிறார். இவர்களோடு ரஞ்சிதா, சேதுவிநாயகம், பாலா உட்பட பலர் நடிக்கின்றனர். நகைச்சுவை வேடத்தில் பிரபல நடிகர் இருவர் நடிக்க இருக்கிறார்.
வெவ்வேறு சூழ்நிலையில் படித்து, ஒரு கார்பரேட் கம்பியூட்டர் நிறுவனத்தில் ஒன்றாக பணிபுரியும் ஆறு இளைஞர்கள் பற்றிய கதை. அதில் அவர்களின் அணுகுமுறை, அலுவலகத்திலும், வெளி உலகிலும், நட்பு வட்டாரத்திலும் எவ்வாறு மாறுபடுகிறது என்பதையும், சமூகவிரோத சக்திகள், படிக்காதவர்கள் மத்தியில் எப்படி ஊடுருவுகின்றன என்பதையும், அதில் காதல் சென்டிமெண்ட், ஆக்ஷன் கலந்து படமாக்குகின்றனர்.
இப்படத்திற்கு ஏவி.எம். ரெக்கார்டிங் தியேட்டரில் வீ.தஷியின் இசையில் ஆறு விதவிதமான பாடல்கள் பதிவு செய்யப்பட்டது. பாடல்களை கவிஞர் கலாபன், பரிணாமன், பரிதி, தாணுகார்த்திக், ஜீவாணி ஆகியோர் எழுதியுள்ளனர். திப்பு, மதுமிதா, பிரசன்னா, பி.சி.சுபீஷ், வினய்தா, சாருலதா ஆகியோர் பாடல்களை பாடியுள்ளனர்.
இப்படத்தின் கதை எழுதி ஒளிப்பதிவு செய்கிறார் மைக்கேல் பிரபு.இ.வி., நடனம் ரமேஷ்ரெட்டி, சண்டைப்பயிற்சி பவர் பாண்டியன். இவர் இன்றைய இளம் முன்னனி நடிகர்கள் பலருக்கு சண்டைப்பயிற்சி அளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கலை வினோத்குமார், படத்தொகுப்பு தங்கவேல், நிர்வாகத் தயாரிப்பு ஏ.நவீன், ஜாய் டாம்னிக், தயாரிப்பு மேற்பார்வை சி.வி.விஜயன், மக்கள் தொடர்பு: ஜி.பாலன்
காதல் ஓசை
உண்மையான உறவுக்கும் பாசத்துக்கும் ஏங்கும் நாயகன், ஆனால் அந்த ஏக்கத்தை தங்கள் சுயநலத்துக்காகப் பயன்படுத்தும் சொந்தங்கள்... இதன் நடுவே ஒரு தென்றலாய் வந்து ஆறுதல் தரும் காதலி... ஒரு அழுத்தமான கதைக்காத ஏங்குபவர்களுக்காகவே வருகிறது காதல் ஓசை திரைப்படம்.
பாவானை ஸ்ரீ கிரியேஷன்ஸ் எனப் புதிய நிறுவனம் சார்பில் கே.பி.இந்திரா கணேசன், சுப்பராயுடு தயாரிக்கும் காதல் ஓசை திரைப்படத்தில் புதுமுகம் ரித்திக் ஹீரோ. காதலியாக வருகிறார் புதுமுகம் ராக்கி. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குபவர் இந்திரா கணேசன்.
கதை என்னங்க கணேசன் என்று இந்திரா கணேசனிடம் கேட்டபோது, "இன்னறைய இளைஞர்களுக்குப் பிடித்தமான படமாக காதல் ஓசை இருக்கும். இது எனது முதல் படம். அனைத்து ரசிகர்களும் தங்கள் குடும்பத்தோடு அமர்ந்து ரசிக்கும் விதத்தில் இப்படத்தை எடுத்திருக்கிறேன்.
தன்னைச் சுற்றிலும் அன்பும் பாசமும் பொழியும் உறவுகளாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறான் நாயகன். ஆனால் அவர்களோ அவனை தங்கள் சுயநலத்துக்காகப் பயன்படுத்துகிறார்கள்.
இந்த நிலையில் அவன் வாழ்க்கையில் வருகிறாள் ஒரு காதலி. ஆனால் அவளுடன் சேர விடாமல் தடுக்கப் பார்க்கிறார்கள் சுயநல சொந்தக்காரர்கள். இந்த சிக்கலைத் தகர்த்து காதலியை எப்படி அடைகிறான் நாயகன் என்பதே காதல் ஓசை படத்தின் கதை.
இந்தப் படம் எடுக்கும்போது நடிகர்களும், டெக்னீசியன்களும், படப்பிடிப்பு நடந்த இடத்தில் இருந்த பொதுமக்களும் கொடுத்த ஒத்துழைப்பு மறக்க முடியாதது..." என்கிறார்.
மணீஷ் இசையில் கவிஞர் விவேகா 5 பாடல்களை எழுதியுள்ளார். அறிவழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சண்டைக்காட்சிகளை பவர் பாஸ்ட் அமைத்துள்ளார். கலை இயக்கம் சுரேஷ் கலோரி. இணைத் தயாரிப்பு சி.வாசுகி தங்கவேல். தயாரிப்பு நிர்வாகம் பி.கார்த்திக், ஏகாம்பரம், மக்கள் தொடர்பு: ஜி.பாலன்
என் பெயர் குமாரசாமி
‘என் பெயர் குமாரசாமி’ படத்திற்காக, நடிகர் ஆர்.பார்த்திபன் பாடிய பாடல்!. வீ.தஷி இசையில் பதிவானது!.
திருநல்லான் பிலிம்ஸ் தயாரிக்கும் படம் ‘என் பெயர் குமாரசாமி’ இந்தப் படத்தில் புதுமுக நாயகன் ராம் கதாநாயகனாக நடிக்க, பிரபல மும்பை நடிகை அந்த்ரா பிஸ்வாஸ் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். யுவா, பப்லு, ரிஷா, யோகி தேவராஜ், பிரபல மலையாள நகைச்சுவை நடிகர் பைஜு இவர்களுடன் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
இப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ரதன் சந்திரசேகர். இப்படத்தில் இடம் பெறும் ஏழு பாடல்களுக்கு வீ.தஷி இசையமைக்கிறார். பாடல்களை யுகபாரதி, நெல்லை பாரதி, தாணு கார்த்திக், தொல்காப்பியன் ஆகியோர் எழுதியுள்ளனர்.
இயக்குநர் ரதன் சந்திரசேகர் எழுதிய
‘வனப்புடை மகளிர் சொல்லும்…
இரு தனப்புடை மார்பும் கொல்லும்…’
எனத் தொடங்கும் பாடலை இயக்குநரும் நடிகருமான ஆர்,பார்த்திபன் பாட, இன்று (12.10.11) காலை சென்னையிலுள்ள கிரண் ஸ்டுடியோவில் இசையமைப்பாளர் தஷியின் இசையில் பதிவானது.
இந்தப் பாடல் குறித்து இயக்குநர் ரதன் சந்திரசேகர் கூறுகையில், “காதலில் ஏமாற்றமடையும் நாயகன் மனம் குமுறி, தெருப் பாடகர்களுடன் இணைந்து பாடுவதாக அமையும் இந்தப் பாடல் முற்றிலும் வழக்கமான பாடலாக அல்லாமல் அமைந்தது.
இப்பாடலை நடிகர் பார்த்திபன் பாடினால் மிகச் சிறப்பாக அமையும் என்று மனதில் பட்டதும், உடனே நேரடியாக சென்று அவரைச் சந்தித்தேன். பாடல் வரிகளைக் கேட்ட மாத்திரத்தில் பாடுவதற்கு ஒப்புக் கொண்டார். மிகவும் ஒத்துழைப்பு தந்து, சிற்பபாக பாடல் உருவாக அவர் காட்டிய ஆர்ரவம் என்னை அவர் குறித்து பெருமிதம் கொள்ளச் செய்துள்ளது…” என்றார்.
இப்பாடலை ஜீவ சாண்டில்யன் ஒளிப்பதிவில் கொடைக்கானலில் படமாக்க உள்ளனர். படத்தொகுப்பு - வி.டி.விஜயன், சண்டைக் காட்சி – சூப்பர் சுப்பராயன், நடனம் – தினேஷ், ரமேஷ்ரெட்டி, மக்கள் தொடர்பு- ஜி. பாலன்.
பார்த்திபன் ஏற்கனவே, அழகி படத்தில் இடம் பெற்ற “ஒரு சுந்தரி வந்தாளாம்…” பாடலை அருண்மொழி, மால்குடி சுபா, மரகதம் ஸ்ரீராம், பிரமிட் நடராஜன், சாதனா சர்கம், உன்னிகிருஷ்ணன் ஆகியோருடன் இணைந்து இளையராஜா இசையில் பாடியுள்ளார். அதே போல அவர் இயக்கி நடித்த பச்ச குதிர படத்தில் சபேஷ் இசையில் சங்கு தாரை.. என்கிற பாடலை பாடியிருக்கிறார். ஷாஜகான் படத்தில் எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் கண்ணாடி பூக்கள் படத்தில் இடம் பெற்ற டை வாசு… என தொடங்கும் பாடலை, தீபிகா, கண்மணி, பறவை முனியம்மா ஆகியோருடன் இணைந்து பாடியுள்ளார். ஜோகன் இசையமைப்பில் உருவான அய்ம்புலன் படத்தில் காதல் என்பது எதுவரை என்கிற பாடலை துரைராஜூடன் இணைந்து பாடியிருக்கிறார்.
அதன் பிறகு இப்போது ‘என்பெயர்குமாரசாமி’ பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்தியாயம் 6
முன்னாள் குழந்தை நட்சத்திரமும், இன்னாள் தெலுங்கு இயக்குநரும், முன்னாள் நடிகை காவேரியின் கணவருமான சூரிய கிரணின் இயக்கத்தில் அத்தியாயம் 6 என்ற பெயரில் வித்தியாசமான கதையமைப்புடன் புதிய படம் தமிழில் தயாராகிறது.
மாஸ்டர் சுரேஷ் என்று சொன்னால் சூரியகிரணை அனைவருக்கும் தெரியும். மெளன கீதங்கள் படத்தில் பாக்யராஜ் - சரிதா ஜோடியின் மகனாக வந்து கலக்கியவர்தான் மாஸ்டர் சுரேஷ்.
பல்வேறு ரஜினி படங்கள், மைடியர் குட்டிச்சாத்தான் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் மாஸ்டர் நடிகராகவே நடித்து அசத்தியவர் சுரேஷ்.
வளர்ந்து வாலிபரானதும் இயக்கப் போய் விட்டார் - இங்கல்ல தெலுங்குக்கு. சூரியகிரண் என்ற பெயரில் 5 படங்களை தெலுங்கில் இயக்கியுள்ள சுரேஷ் முதல் முறையாக தமிழுக்கும் இயக்க வருகிறார்.
அத்தியாயம் 6 என்று இப்படத்துக்குப் பெயர் சூட்டியுள்ளார். இப்படத்தின் கதையில் ஆறு அத்தியாயங்கள் வருகின்றனவாம். அதனால்தான் அத்தியாயம் 6 என பெயர் சூட்டியுள்ளார். ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் ஒரு நிறத்தை முக்கியமாக வைத்துள்ளனராம்.
இப்படத்தில் நாயகியாக சோனியா சூரி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக சுரேஷின் மனைவியான காவேரி நடிக்கிறார்.
காவேரி, சமுத்திரம் படத்தில் சரத்குமாரின் தங்கச்சியாக நடித்தவர். காசி படத்திலும் நடித்துள்ளார். ஏராளமான தமிழ்ப் படங்களில் தலை காட்டியுள்ள காவேரி, சுரேஷை காதலித்து மணந்து கொண்டவர்.
அதேபோல நாயகர்களும் இருவர். ஒருவர் ஹரிநாத். இன்னொருவர் பாலா.
படத்திற்கு மூன்று இசையமைப்பாளர்கள். அற்புதன், சிவன், மோகன் சித்தாரா என 3 பேர் இசையமைத்துள்ளனர்.
படத்தை காவேரியே தயாரிக்கிறார். கண்வருக்கு மனைவி செய்யும் உதவி.
மாந்தன்
சென்னையில் உள்ள ஏவி..எம். ஸ்டுடியோவில் தாய் காப்பியம் பட நிறுவனம் சார்பில் தமிழரசன் தயாரித்து, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் "மாந்தன்". படத்தின் துவக்க விழா படப்பிடிப்புடன் தொடங்கியது.
அங்கு மா இலை தோரணம், வாழை மர தோரணம், நுங்கு கொலைகள், தென்னங் குருத்து என தோரணங்களுடன் கருப்பசாமி கடவுள் படம் பிரமாண்டமாக வைக்கப்பட்டிருந்தது. அதன் எதிரே அவருக்கு படைக்கப்படும் பழங்களும் காய்களும் படையல் பொருட்களும் வித்தியாசமாக இருந்தது. வழக்கமாக படத்துவக்க விழாக்களில் வினாயகர், லட்சமி, சரஸ்வதி படங்களை பயன் படுத்தி அதற்கு அலங்காரம செய்து மந்திரங்கள் படித்து பூஜை செய்வார்கள். இங்கோ அந்த கிராமத்திலிருந்து சென்னைக்கு எல்லை தெய்வங்களை வரவழைத்து அவருடன் பூசாரியையும் வரவழைத்து குலதெய்வம் கோவிலில் கொண்டாடுவது போல வழிபட்டனர்.
விழாவில் பிலிம் சேம்பர் தலைவர் கே.ஆர்.ஜி. செயலாளர் காட்ரகட்ட பிரசாத் ஆகியோர் கலந்துகொண்டு கேமிராவை முடுக்கி வைக்க, இயக்குநர் மாரிமுத்து கிளாப் அடிக்க, இயக்குநர் எழில் "ஆக்ஷன்" என்று கட்டளையிட, சத்யா, புதுமுகம் கன்னல் இருவரும் நடித்த காட்சியை அப்பட இயக்குநர் தமிழரசன் "கட்" என்று சொல்ல ஒரு காட்சியை படமாக்கினர்.
நடிகர் அசோக், சிவகிரி, இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, சசி, எஸ்.பி .ஜனநாதன், சுப்பிரமணியம்சிவா, ஆர்.என்.ஆர்.மனோகர், தயாரிப்பாளர் எம்.காஜாமைதீன், எஸ்.கே. கிருஷ்ணகாந்த், தியேட்டர் உரிமையாளர் சங்க செயலாளர் பன்னீர் செல்வம், விநியோகஸ்தர் சங்க தலைவர் கலைப்புலி சேகரன், ஓவியர் வீர.சந்தானம் உட்பட பலர் கலந்தகொண்டு வாழ்தினார்கள்.
இப்படத்தில சத்யா கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக பக்ரைன் நாட்டில் வசிக்கும் தமிழ்ப்பெண், கன்னல் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் தேவகி, சென்றாயன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு புதியவர் கனி இசையமைக்க பாடல்களை பா.த.மணிமேகலை எழுதியுள்ளார். நடனம்:சஞ்சீவ் கண்ணா, ஒளிப்பதிவு: முத்துக்குமரன், படத்தொகுப்பு: பழனிவேல், கலை: எஸ்.சிவராஜ், சண்டைப் பயிற்சி: ஃபயர் கார்த்திக், இணைத் தயாரிப்பு: செ.ஏழுமலை, தயாரிப்பு மேற்பார்வை: எஸ்.ஆனந்தன், தயாரிப்பு நிர்வாகம்: துர்க்காராவ்.
நட்டு வைத்த மரத்தை கூட பிரிந்து போக நினைக்காத ஒருவன், ஒரு உண்ணதமான காதலுக்காக தன்னை சார்ந்த அனைத்தையும் இழக்கிறான். இனிமையான மகிழ்ச்சியும், வலி மிகுந்த காயமுமே காதல். அதை உன்னதமாக ரசிக்கும் விதத்தில் இயல்பான கதையோட்டத்தில் படமாகிறது. காதல், சுப்பிரமணியபுரம், நாடோடிகள் போன்ற படங்களைப் போல இயல்பும் பரபரப்பும் நிறைந்த படமாக இந்த இந்தப் படத்தை உருவாக்குகிறார் இயக்குநர் தமிழரசன். இவர் எழில், மாரிமுத்து ஆகியோரிடம் உதவி இயக்குநராக இருந்தவர்.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (21.10.2009) சென்னையில் தொடங்கி தொடர்ந்து ஒரு மாதம் இடைவிடாமல் சென்னையை சுற்றி பல இடங்களில் நடக்கிறது. இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு கேரளாவில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் நடைபெற உள்ளது.
சாமிபுள்ள
மேக்ஸ் சினிமாஸ் சார்பில் ஏ.ஜி.லோகநாதன், செந்தில்குமார் இருவரும் இணைந்து தயாரிக்கும் புதிய படம் ‘சாமிபுள்ள’. இப்படத்தின் கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் கே.ரங்கராஜன். இவர் இயக்குநர் சித்திரைச்செல்வனிடம் உதவியாளராக இருந்தவர்.
இந்தப் படத்தில் புதுமுகம் செந்தில்குமார் கதாநாயகனாக அறிமுகமாகி உள்ளார். இக்கொரு நாயகனாக கெளசிக் நடித்துள்ளார். அஷ்மிதா, சீனா என இரு கதாநாயகிகள் நடிக்கின்றனர். மேலும் பாலாசிங், நான் கடவுள் கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் நடிக்கின்றனர். சில பாத்திரங்களில் சாயல்குடி பகுதியைச் சேர்ந்த சிலரையும் நடிக்க வைத்திருக்கின்றனர்.
கிராமத்து மனம் வீசும் இந்தப் படத்திற்கு ஆர்.வேல்முருகன் ஒளிப்பதிவு செய்கிறார். இவர் பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் உதவியாளர் ஆவார். ஜே.கே.செல்வா இசையமைக்க, பாடல்களை நந்தலாலா, டாக்டர் கிருதயா, திரைவண்ணன், கலைக்குமார் ஆகியோர் எழுதி உள்ளனர். எஸ்.பி.பாலசுப்பிரமணியம், அனுராதா ஸ்ரீராம், கார்த்திக், திப்பு, ஷைந்தவி, ஹரிணி ஆகியோர் பாடல்களை பாடி உள்ளனர். காதல் கந்தாஸ், கேசவன் இருவரும் நடனம் அமைத்துள்ளனர்.
நாக்அவுட் நந்தா சண்டைப்பயிற்சி அளிக்க, லான்சி மோகன் படத்தொகுப்பு செய்கிறார். கலை இயக்கம் – குமார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ராமநாதபுரம், தூத்துக்குடி, சாயல்குடி போன்ற இடங்களில் நடைபெற்றது முடிவடைந்தது. தற்போது பின்னணி இசை சேர்ப்பு வேலைகள் நடந்து வருகிறது.
இந்தப் படத்தின் கதைப் பற்றி இயக்குநர் கே.ரங்கராஜன் கூறுகையில், “முப்பது வருடமாக மழை பெய்யாத ஊருக்குள் நடக்கும் ஒரு பசுமையான காதல் கதை. இது ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவானது. மழை பெய்யாத ஊரில் ஒருவன் இருபத்தி ஐந்து வருடமாக குளம் வெட்டுகிறான். தினமும் அவனது வேலையே குளம் வெட்டுவதுதான். மழை பெய்து குளத்தை நிறைத்தா? அவனது நம்பிக்கை வெற்றி பெற்றதா?, அவனது காதலுக்கு யார் குறுக்கே நிற்கிறார்கள் என யதார்த்தமாக, அதே சமயம் சுவராஸ்மான காட்சிகளோடு படத்தை இயக்கி இருக்கிறேன். அனைத்து தரப்பினரும் படத்தோடு ஒன்றி ரசிக்கும் விதமாக படம் இருக்கும்” என்றார்.
முன்னவர்
ஜி பிலிம்ஸ் சார்பில் ஆர்.சந்திரன் தயாரிக்கும் புதிய படம் ‘முன்னவர்’. இப்படத்தின கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் ஆர்.கே.வேல்ராஜ். இவர் இயக்குநர்கள் கே.ரங்கராஜ், ‘தினந்தோறும்’ நாகராஜ், எத்திராஜ், இளஞ்செழியன் போன்றவர்களிடம் துணை, இணை இயக்குநராக பயிற்சி பெற்றவர். இவர் இயக்கும் முதல் படம் இது.
இப்படத்தில் புதுமுகம் சரவணன்.சி., கதாநாயகனாக அறிமுகமாக, அவருக்கு ஜோடியாக கேரளாவைச் சேர்ந்த ரஞ்சுஷா என்பவர் நடிக்கிறார். இன்னொரு கதாநாயகனாக கணேஷ் நடிக்க, அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா நடிக்கிறார். மேலும் ஜெயக்குமார், மதி, தமிழ்மகன், தனலட்சுமி என பலர் நடிக்கின்றனர்.
இப்படத்தின் இசையை புதியவர் நந்தாஜி அமைக்க, பாடல்களை தமிழ்மகன், மகாலட்சுமி எழுதி உள்ளனர். மகிபாலன் ஒளிப்பதிவு செய்ய, பிரான்சிஸ் படத்தொகுப்பு செய்கிறார். கலை – சக்தி நிரஞ்சன், நடனம் – தெய்வேந்திரன், ரமேஷ்ரெட்டி, கருண், சண்டைப் பயிற்சி - ‘மின்னல்’ முருகன், தயாரிப்பு மேற்பார்வை ஏகாம்பரம், தயாரிப்பு நிர்வாகம் - கார்த்திக்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகே உள்ள சிறுவாபுரி பாலசுப்பிரமணியர் கோவிலில் தொடங்கி தொடர்ந்து ஜெகநாதபுரம், செங்குன்றம் பகுதிகளில் இருபது நாட்கள் நடைபெற்றது. அடுத்த கட்டப் படப்பிடிப்பு தற்போது தேனி, கம்பம், மற்றும் மதுரை போன்ற இடங்களில் நடைபெற்று வருகிறது.
இந்த படம் பற்றி இயக்குநர் ஆர்.கே.வேல்ராஜ் கூறுகையில், “நேர்மையான, நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்ள ஒழுக்கம் நமக்கு பெரிய அளவில் உதவுகிறது. அப்படி ஒழுக்கமான வாழ்க்கை இல்லை என்றால் எதிர்காலம் தடம் மாறி போய்விடும். அப்படி ஒழுக்கத்தை போதிக்கும் ஆசிரியரும், அதை உணரும் மாணவர்களும் தங்களது கடமையை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். அப்படி நடக்க தவறினால் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை இந்த ‘முன்னவர்’ படம் சொல்கிறது. இதில் காதல், மோதல், சிரிப்பு, கோபம், தாபம் என எல்லாவகையான உணர்வுகளும் கதையின் போக்கில் காட்சிகளாக அமைந்திருக்கிறது. யதார்த்த படம் என்றாலும் இது ஒரு ஜனரஞ்சக படம்தான்.
ஆசிரியர், மணவர்கள் சம்மந்தப்பட்ட படம் என்பதால் யதார்த்தமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் இருக்க வேண்டும் என்று பெரும்பாலும் இதில் நடிப்பவர்களை பாத்திரத்துக்கு பொருத்தமான புதுமுகங்களாக தேர்வு செய்து நடிக்க வைக்கிறோம். கதையின் தன்மை அடிபடாமல், கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிகர்களை தேர்வு செய்தோம்.
இதில் கதையின் நாயகனாக வெற்றி என்கிற எம்.எஸ்.சி.இரண்டாம் ஆண்டு படிக்கும் கதாபாத்திரத்தில் சரவணன்.சி., கதையின் நாயகியாக எம்.எஸ்.சி.இரண்டாம் ஆண்டு படிக்கும் தேன்மொழி பாத்திரத்தில் ரஞ்சுஷா நடிக்கிறார்கள். அதே போல கிராமத்து இளைஞனாக முருகன் என்கிற வேடத்தில் கணேஷ் நடிக்கிறார். அவருக்கு துணையாக கமலா என்கிற வேடத்தில் ஐஸ்வர்யா நடிக்கிறார். இவர்களோடு ஆசிரியர்களாக மதி, தமிழ்மகன் போன்றோர் நடிக்கிறார்கள்.
இந்தப் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்து இரண்டாவது கட்ட படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. பாடலும் படமும் ரொம்ப யதார்த்தமாக மக்களுக்கு பிடிக்கும் விதமாக உருவாக்கி வருகிறோம். இந்தப் படத்தை பார்க்கும் ஒவ்வொரு ரசிகருக்கும் இந்தப் படம் சரியான வழிகாட்டியாகவும் பொழுதுபோக்கு நிறைந்த படமாகவும் இருக்கும்…” என்றார்
அச்சமின்றி
தமிழ்ப் படம் படத்தில் 'ஓமஹசீயா' என்று பாடி ஆடிய திஷா பாண்டே, அச்சமின்றி எனும் புதிய படத்தில் நாயகியாக நடிக்கிறார்.
ஷாஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஐ.பாதுஷா தயாரிக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் ராஜேஷ் கே.வாசு. இவர் பல தமிழ், மலையாள படங்களில் துணை, இணை இயக்குநராக பணியாற்றியவர்.
ஹீரோவாக புதுமுகம் விநாயகம் அறிமுகமாக, திஷா பாண்டே கதாநாயகியாக நடிக்கிறார். இன்னொரு நாயகியாக பெங்களூர் அழகி ஒருவர் அறிமுகமாகிறார்.
புதியவர் சஜிராம் இசையமைக்கிறார். பி.கே.ராஜா வசனம் எழுத, மணி பிரசாத் ஒளிப்பதிவு செய்கிறார். கலை - வினோத், தயாரிப்பு மேற்பார்வை - இராமகிருஷ்ணன், குட்டிகிருஷ்ணன், செந்தாமரை.
படம் குறித்து இயக்குநர் ராஜேஷ் கே.வாசு கூறுகையில், "அதிகம் படித்து அதிகாரிகளாக வலம் வரும் சிலர், நாகரீகம் என்கிற பெயரில் நம் கலாச்சாரத்தை மறந்து கடமை தவறுவதால் அவர்களும் பாதிப்படைவதோடு, அவர்களின் நல்ல குடும்பத்தின் எதிர்காலம் வழி தவறிப் போகிறது. இதுதான் இந்தப் படத்தின் கரு.
மக்களிடம் இருந்தே இந்தக் கதையை எடுத்திருக்கிறேன். படத்தை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் பக்கத்து வீட்டில் நடந்த சம்பவங்கள் போல, பார்த்த காட்சிகள் போல, படித்த செய்திகள் போல உணர்வார்கள்,"என்றார்.
இப்படத்தின் துவக்க விழா இன்று சென்னையில் உள்ள ஏவி.எம். ஸ்டுடியோவில் பூஜையுடன் விஜயதசமியன்று தொடங்கியது.
திரைப்பட தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன், இயக்குநர் சசிமோகன், விநியோகஸ்தர் சங்க தலைவர் கலைப்புலி ஜி.சேகரன், நடிகர்கள் ரமேஷ்கண்ணா, முத்துக்காளை, சாம்ஸ், இசையமைப்பாளர் வீ.தஷி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு வாழ்த்தினர்.
விழாவுக்கு வந்தவர்களை மக்கள் தொடர்பாளர் ஜி.பாலன், மேலாளர் இராமகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர்.
சண்முகிபுரம்
சத்ய சாய் கிரியேஷன்ஸ் சார்பில் ஏ.லஷ்மண்ராவ், பி.சீனிவாசராவ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் ‘சண்முகிபுரம்’. இந்தப் படத்தில் மனோஜ் கதாநாயகனாக நடிக்க, அவருடன் அந்த்ர விஸ்வாஸ், ஷாதிகா இருவரும் நாயகிகளாக நடிக்க என்.ஆர்.என்.செழியன் டைரக்ஷன் செய்கிறார்.
இந்தப் படத்தின் பாடல் பதிவு ஏ.வி.எம். ஸ்டுடியோவில் உள்ள ‘ஜி’ தியேட்டரில் நேற்று முன்தினம் (ஏப்.16) காலை நடைபெற்றது. இந்த படத்தில் இடம் பெறும் “சொடக்கு போடு சொடக்கு போடு சொர்னாக்கா…. மடக்கி போடு மடக்கி போடு மங்காத்தா…” என்கிற பாடலை நடிகை ஷகிலா பாடினார். அவருடன் இணைந்து பாடகி அமிர்தா, சலோனி இருவரும் சேர்ந்து பாடினார்கள்.
இந்தப் பாடலை பாடலாசிரியர் விஜய்கிருஷ்ணா எழுத, வீ. தஷி இசையமைத்தார். மேலும் பட்டுக்கோட்டை சண்முகசுந்தரம், தாணுகார்த்திக், கவிஞர் கணேசன் ஆகியோர் பாடல்கள் எழுதுகின்றனர்.
இம்மாதம் இறுதியில் படப்பிடிப்பு தொடங்குகிறது. சென்னை மற்றும் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இந்தப் படத்திற்கு கெளதம் கதை எழுத, ஆதி ஒளிப்பதிவு செய்கிறார். பத்ரன் படத்தொகுப்பை கவணிக்கிறார். செந்தாமரை சுரேஷ் நடனம் அமைக்கிறார். ஒரு பாடலுக்கு ஷகிலா நடனம் ஆடுவதோடு, நகைச்சவை கலந்த ஒரு கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்.
தலக்கோணம்
திருப்பதி அருகே அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதி, ‘தலக்கோணம்’. மர்மம்-திகில் கலந்த படங்களின் படப்பிடிப்பு பெரும்பாலும் இங்குதான் நடைபெறும். மிரட்டலான இயற்கைக் காட்சிகள் மிகுந்த பகுதி அது. இப்போது, ‘தலக்கோணம்’ என்ற பெயரில் ஒரு புதிய படம் தயாராகிறது.
கதாநாயகிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலும், கொலை மிரட்டலும் வில்லனால் விடுக்கப்படுகிறது. அந்த மிரட்டல்களில் இருந்து கதாநாயகியை நாயகன் எப்படி காப்பாற்றுகிறான்? என்பதே கதை. இயக்குநர் சமுத்திரக்கனியிடம் பணியாற்றிய கே.பத்மராஜ், இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
இது, திகில்-சஸ்பென்ஸ் கலந்த படம். புதுமுகம் ஜிதேஷ் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். தெலுங்கில் பல படங்களில் கதாநாயகியாக நடித்த ரியா, இந்தப் படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். கோட்டா சீனிவாசராவ், பெரொஸ்கான், கஞ்சா கருப்பு, பாண்டு, சண்மகசுந்தரம், நம்பிராஜ், பாலா, அபிநயாஸ்ரீ உட்பட பலர் நடித்துள்ளனர்
‘பூவே பெண் பூவே’, ‘என்னவோ புடிச்சிருக்கு’, ‘மீண்டும் மீண்டும் நீ’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த இரட்டையர்கள் சுபாஷ்-ஜவகர் இசையமைக்கிறார்கள். பாடல்களை பா.விஜய், எழுதியுள்ளார். யு.கே.செந்தில்குமாரிடம் பணிபுரிந்த ராமலிங்கம் ஒளிப்பதிவு செய்கிறார். ரமேஷ் கலைப்பணியைக் கவனிக்கிறார். ‘பயர்’ கார்த்திக் சண்டைப் பயிற்சியை மேற்கொள்கிறார். மக்கள் தொடர்பு: ஜி.பாலன்
பாடல் காட்சிகள் தலக்கோணம் அருவி, அடர்ந்த காடு, திகைப்பூட்டும் பாறைகளுக்கு நடுவில் படமாக்கப்பட்டுள்ளன. கேரள மாநிலம் சாலக்குடி, அந்தரப்பள்ளி அருவிகளிலும் படப்பிடிப்பு நடந்தது.
தமிழ்-தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் உருவாகி வரும் இந்தப் படத்தை எஸ்.ஜே.எஸ். இண்டர்நேஷனல் சார்பில் திருமலை சிவம் தயாரிக்கிறார். படப்பிடிப்பு கோவை, பொள்ளாச்சி, கோவா ஆகிய இடங்களில் நடைபெற்று முடிந்தது
செங்காடு
எச்.எம்.டி. பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் வி.இராவணன் தயாரித்துள்ள படம் ‘செங்காடு’. இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி உள்ளார் அறிமுக இயக்குநர் ரமேஷ் ராமசாமி.
புதுமுகங்கள் அருண்பிரகாஷ் - ரூபா, சுரேஷ் - நகினா, உத்தம் - விமலா, விக்கி - ப்ரியா என நான்கு ஜோடிகளுடன் முத்துக்கருப்பன், அன்பழகன், வேணுகோபால், ரகுநாத் ஆகியோரும் நடித்துள்ளனர். இதில் ரூபா, ஐந்து தெலுங்கு படங்களில் கதாநாயகியாக நடித்தவர் என்பது குறிப்பித்தக்கது.
இந்தப் படத்திற்கு ஜெரோம் புஷ்பராஜ் இசையமைக்க, பாடல்களை இளையகம்பன் எழுதி உள்ளார். மணி ஒளிப்பதிவு செய்ய, பீட்டர் பாபியா எடிட்டிங் செய்துள்ளார். நிர்மல் நடன அமைப்பில், பூபதி கலை இயக்கத்தில படமாகி உள்ளது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு மண் தோன்றிய காலத்தில் இருந்து இது வரை படப்பிடிப்பு நடத்திடாத தஞ்சாவூர், ஒரத்தநாடு, மன்னார்குடி, வேதாரண்யம் போன்ற பல அழகிய கிராமங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது.
"இது நான்கு நண்பர்களுக்குள் நடக்கும் காதல் கதை. நண்பர்களுக்குள் துரோகம் நடந்தால் அது என்ன மாதிரி விளைவுகளை ஏற்படுத்தும் என்கிற அழுத்தமான திரைக்கதையோடு படம் உருவாகி உள்ளது.
காதல், கவர்ச்சி, நட்பு, பாசம், சென்டிமெண்ட், நகைச்சுவை, என எல்லா உணர்வுகளையும் வெளிப்படுத்தும் படமாக அமைந்திருக்கிறது. மற்ற மொழிகளிலும் வெளியிடுகிற அளவுக்கு இது கமர்சியல் படமாக உருவாகி உள்ளது.
புதிய கோணத்தில் திரைக்கதை அமைத்து சினிமாத்தனம் இல்லாத சினிமாவாக உருவாகி உள்ளது. ஒரு இடத்தில் கூட போர் அடிக்காமல், காட்சிக்கு காட்சி அடுத்து என்ன நடக்கும் என்று யூகிக்க முடியாத சம்பவங்களோடு படு வேகமான திரைக்கதை, பரபரப்பும், விறுவிறுப்பும் கொண்ட காட்சிகள் என எதிர்பாராத க்ளைமாக்ஸ் என படம் ரசிகர்களை இருக்கையில் கட்டிப்போடும் படமாக உருவாகி உள்ளது..." என்று சொன்னார் இயக்குநர் ரமேஷ் ராமசாமி.
புதுமுகங்களை வைத்து படம் இயக்க காரணம் என்ன? என்று அவரிடம் கேட்டதற்கு, "இந்த கதைக்கு யார் நடித்தாலும் சுவராஸ்யம் குறையாது. இதில் கதைதான் ஹீரோ. பிரபல கதாநாயகர்களை தேடிச் சென்று நான்கு கதாநாயகர்களை இணைத்து படமெடுப்பது இந்த காலகட்டத்தில் சாத்தியம் இல்லை. அதனால் புதுமுகங்கள் சரியாக இருக்கும் என்று நினைத்தேன். எல்லோரும் நன்றாக பயிற்சி எடுத்துக் கொண்டு நடித்தார்கள். அவர்கள் புதுமுகங்கள் என்பதை விட அந்தப் பாத்திரத்துக்கு பொருத்தமாக இருந்தார்கள். படமும் பார்ப்பதற்கும் புதுசாக இருக்கும்.
அதே போல யதார்த்தம் இருக்க வேண்டும் என்று கிராமங்களை நோக்கி சென்றேன். அதுவும் படத்திற்கு பெரிய ப்ளஸாக அமைந்திருக்கிறது. கற்பனை கதையாக இருந்தாலும் யதார்த்தம் அதன் அழகு கெடாமல் இருக்கும். இப்போது படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து பின்னணி இசை சேர்ப்பு வேலைகள் நடைபெற்று வருகிறது. இம்மாத இறுதியில் பாடல் இசை வெளியிடுகிறோம். அதன் பிறகு படத்தை வெளியிட திட்ட மிட்டுள்ளோம்..." இவவாறு கூறினார் இயக்குநர் ரமேஷ் ராமசாமி.
காதல் பிசாசே
ட்ரீம் ஆர்ட் கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள படம் 'காதல் பிசாசே'. இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்து டைரக்ஷன் செய்துள்ளார் அரவிந்த். அவருக்கு ஜோடியாக மிதுனா, அனிதா ரெட்டி இருவரும் நடித்துள்ளனர்.
நகைச்சுவை வேடத்தில சந்தானம் நடித்துள்ளார். மேலும் கொட்டாச்சி, கூல் சுரெஷ், ஈஸ்டர், சந்தானபாரதி, வனிதா, புவனா உட்பட பலர் நடித்துள்ளனர்.
படத்தின் பல காட்சிகள் கனடாவில் நடைபெறுவதால், பெரும் பகுதி படப்பிடிப்பு கனடா நாட்டில் நடைபெற்று முடிவடைந்துள்ளது. அதே போல சென்னையிலும், பாண்டிச்சேரி, மும்பை போன்ற இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்துள்ளது.
இந்தப் படத்திற்கு பால் லிவிங்ஸ்டன் ஒளிப்பதிவு செய்ய, பிருந்தன் இசையமைத்துள்ளார். படத்தின் பின்னணி இசையை சபேஷ் முரளி அமைக்கின்றனர். பாடல்களை ஸ்ரீவிஜய், எழுத, நடன காட்சிகளை ரவிதேவ் அமைத்துள்ளார். தங்கவேல் கதை, திரைக்கதை, வசனம் எழுத, மின்னல் முருகன் சண்டைப் பயிற்சி அளித்துள்ளார். கலை- சாபு சிரில் உதவியாளர் சிவா. படத்தொகுப்பு - சுதா. தயாரிப்பு மேற்பார்வை- பொள்ளாச்சி டி.பன்னீர் செல்வம். தயாரிப்பு - அரவிந்த் ரத்தினசிங்கம், ரவி குணசிங்கம்.
கல்லூரியில் படித்து வரும் கதாநாயகன், சாதிக்க வேண்டும் என்கிற கொள்கை உடையவன். அவனை அவனோடு படிக்கும், அவனைப் போலவே லட்சியம் கொண்ட ஒரு பெண் காதலிக்கிறாள். ஆனால் காலம் அவனை ஒரு தாதாவிடம் மோதவைக்கிறது. உயிரை காப்பாற்றும் உன்னத படிப்பை படிக்க வேண்டியவன், உயிரை காப்பாற்றிக் கொள்ள ஆயுதம் பிடிக்கிறான். அதன் விளைவு அவனது எதிர்காலத்தை எங்கே கொண்டு போய் நிறுத்துகிறது, லட்சியமுள்ள அவனது காதலி அந்த பாதையை ஏற்றுக் கொண்டாளா என்பதே படத்தின் கதை. இதை ஒவ்வொரு காட்சியிலும் காதல், மோதல், செண்டிமெண்ட் ஆக்ஷன், காமெடி என கமர்சியல் படமாக உருவாக்கி உள்ளார் இயக்குநர் அரவிந்த்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, பின்னணி இசை சேர்ப்பு வேலைகள் நடைபெற்று வருகிறது. புத்தாண்டு முதல் வாரத்தில் பாடல் இசை வெளிவர இருக்கிறது. அதே போல கடைசி வாரத்தில படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
கொத்தனார்
பி.எம்.பி புரொடக்ஷன்ஸ் சார்பில் எம்.இ.பிரபு, வி.அருள்மொழி இருவரும் இணைந்து தயாரிக்கும் புதிய படம் 'கொத்தனார்'. இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்குகிறார் எம்.இ.பிரபு.
இந்தப் படத்திற்காக வீ.தஷி இசையில் "அடடா... அடடா... அண்ணன் தம்பி நானடா... இன்னிசை பாடி இமயத்தில் நடடா... ஈடில்லா பெருமையோடு வாழடா..." என்கிற வெஸ்டன் பீட்டில் உருவான பாடலை பாடி அசத்தினார் கானா உலகநாதன். இதுவரை கானா பாடல்களையே பாடி வந்த கானா உலகநாதன், முதன் முறையாக வெஸ்டன் இசையில் உருவான ஒரு பாடலை ரசித்துப் பாடியதுடன், பெரு மகிழ்ச்சி அடைந்தார்.
அவரிடம் இந்தப் பாடல் பாடிய அனுபவம் குறித்து கேட்டதும், மகிழ்ச்சி பொங்க கூறியதாவது:
"எனக்கு சிறுவயதிலிருந்தே பாடுவது என்றால் ரொம்ப ஆசை. அப்படி பாடிப் பாடிதான் பாடகரானேன். அதில கானா பாடல்கள் என்னை ஈர்த்தது. கானா பாடல்கள் பெரும் பெயரையும், புகழையும் சம்பாதித்துக் கொடுத்தது. சித்திரம் பேசுதடி படத்தில் "வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்..." பாடலை பாடி நடித்தப் பிறகு, எனக்கு அதிக புகழ் கிடைத்தது. தமிழுலகம் முழுவதும் கானா உலகநாதன் என்று பெரிய அளவில் அறியப்பட்டேன். அதன் பிறகு சில படங்களிலும் பாடியிருக்கிறேன். நடித்திருக்கிறேன்.
இப்போது இந்த 'கொத்தனார்' படத்திற்காக இசையமைப்பாளர் தஷி, ஒரு அருமையான வாய்ப்பை கொடுத்து வெஸ்டன் இசையில் ஒரு பாடலை பாட வைத்திருக்கிறார். இந்த பாடலை டைரக்டர் பிரபு எழுதி இருக்கிறார். கானா பாடலையே பாடி வந்த எனக்கு, இந்தப் பாடலை பாடியது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. நல்ல கருத்துள்ள அருமையான பாடல். எனக்கு இந்தப் பாடல் ஒரு புதிய வரவேற்பையும் அனுபவத்தையும் தருவதோடு, இனி எந்த மாதிரி இசையாக இருந்தாலும், அதற்கும் நல்லா பாடுவேன் என்பதை உணர வைத்திருக்கிறது..." இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இந்தப் படத்தில் புதுமுகம் லண்டன் அர்ஜூனா நடிக்கிறார். ஆதி ஒளிப்பதிவு செய்ய, ரமேஷ்ரெட்டி நடனம் அமைக்கிறார்.
ஒத்தவீடு
விஷ்ஷிங் வெல் புரொடக்ஷன்ஸ் சார்பில் தேவ் குமார் தயாரித்து வரும் படம் 'ஒத்த வீடு'.
இந்தப் படத்தில் புதுமுகங்கள் திலீப்குமார், ஜானவி ஜோடியாக நடிக்க, இவர்களுடன் வடிவுக்கரசி, எம்.எஸ்.பாஸ்கர், திரவிய பாண்டியன், நெல்லை சிவா, இமான், பந்தனா, ராதா, வாமன் மாலினி, மதுரை சரோஜா, சண்முகம், யோகி தேவராஜ் உட்பட பலர் நடித்துள்ளனர்.
பாலு மலர்வண்ணன் இயக்கும் இந்தப் படத்திற்கு வீ.தஷி இசையமைத்துள்ளார். ஸ்ரீரஞ்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கே.இத்ரீஸ், எம். சங்கர் இருவரும் இணைந்து எடிட்டிங் செய்துள்ளனர்.
இந்தப் படம் பற்றி இயக்குநர் பாலு மலர்வண்ணன் கூறுகையில், "கிராமங்களில் ஒத்த வீடு பற்றி நிறைய கேள்விப் பட்டிருப்பீர்கள். அப்படி ஒரு ஒத்த வீட்டில் நடக்கும் சம்பவம்தான் இந்தப் படத்தின் கதை. அந்த ஒத்த வீட்டு தலைமை கதாபாத்திரத்தில் வடிவுக்கரசி, நடித்திருக்கிறார். ஒரு கிராமத்து தாயின் வெள்ளந்தியான மனமும், அதனால் ஏற்படும் விளைவுகளும், பிரிவும், பரிவும் தான் படத்தின் பலமான காட்சிகள்.
வடிவுக்கரசியின் மகனாக கதாநாயகன் திலீப்குமார், மகளாக பந்தனா நடித்திருக்கின்றனர். ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் பாசத்தை பக்கத்து வீட்டில் இருந்து பார்ப்பது போல அவர்கள் வாழ்ந்து காட்டியிருக்கின்றனர்.
திலீப்குமாருக்கு இது முதல் படம் என்றாலும், பல படங்களில் நடித்து நிறைய அனுபவம் வாய்ந்த நடிகர் போல நடித்திருக்கிறார். வில்லிவலம் கிராமத்தில் விநாயகர் கோவிலில் கிரகம் எடுத்து தெருவழியாக வலம் வந்து, அம்மன் கோவிலில் இறக்கி வைக்கும் காட்சி எடுத்த போது, அந்த கிராமத்து மக்கள் அனைவரும் தங்கள் செலவில் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக வந்து நடித்த தோடு அல்லாமல், திலீப்குமாரின் வீரனார் ஆட்டத்தை பார்த்து வியந்து போனார்கள். அந்த பாத்திரமாகவே படத்தில் வாழ்ந்து அந்த கதாப்பாத்திரத்தை வாழ வைத்திருக்கிறார். சண்டைக் காட்சியிலும் இயல்பாக நடித்து படப்பிடிப்பு தளத்தில் கை தட்டலை வாங்கியிருக்கிறார்.
கதாநாயகி ஜானவி, மும்பை அனுபம்கெர் திரைப்படக் கல்லூரியில் பயிற்சி பெற்றவர். வசனங்களை உள்வாங்கிக் கொண்டு, தனது திறமையை நன்கு வெளிப்படுத்தி நடித்திருக்கிறார். திலீப்குமார், ஜானவி இருவரது நடிப்பு திறமையைப் பார்த்து 350 படங்களுக்கு மேல் நடித்த வடிவுக்கரசி, வியந்து, ஆச்சர்யப்பட்டார்.
கதாநாயகனின் பெரியப்பாவாக, சாமியாடி வேடத்தில் எம்.எஸ்.பாஸ்கர் நடித்திருக்கிறார். அவரவர் அவரவர் தெளிவுக்கு தகுந்த மாதிரி வாழ்க்கை நடத்துவது போல, அவரும் அவரது தெளிவுக்கு தகுந்த மாதிரி பேசி வாழும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவர் அறியாத விஷயங்களைப் பற்றி யாரும் பேசினால் அவருக்கு கோபம் வந்து விடும். அப்படி ஒரு போல்டான, கோபக்காரராக நடித்து சிரிக்க வைக்கிறார். அவரை உசுப்பேற்றும் வேடத்தில இமான் நடித்திருக்கிறார்.
ஒச்சாயி படத்தின் தயாரிப்பாளரும், அந்தப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்த வருமான திரவிய பாண்டியன், இந்தப் படத்தில் பசுத் தோல் போர்த்திய புலி போன்ற ஒரு வில்லன் வேடத்தில் நடித்து, அந்தப் பாத்திரத்தை வலிமை படுத்தி இருக்கிறார்.
ஆர்ட் டைரக்டர் சண்முகம், இந்தப் படத்தில் ஒரு கோபக்கார இளைஞராக நடித்திருக்கிறார். புதுமுகம் பந்தனா, ராதா, வாமன் மாலினி, மதுரை சரோஜா என பலர் நடித்திருக்கின்றனர். கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான நடிகர்களை தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கிறேன்.
ஒரிய மொழியில் அறுபது படங்களுக்கு மேல் பணியாற்றிய, ஸ்ரீரஞ்சன் ராவ் என்கிற ஒளிப்பதிவாளரை, இந்தப் படத்தில் பயன் படுத்தி, அவரது திறமையை பயன்படுத்திக் கொண்டேன். அதே போல கேரள அரசின் சிறந்த இசையமைப்பாளருக்கான விருது பெற்ற வீ.தஷியின் இசையில் ஆறு பாடல்கள் படத்தில் இடம் பெறுகிறது. எல்லாமே சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி எழுதப் பட்ட பாடல்கள்.
தானு கார்த்திக் எழுதிய வீரனார் பாடல் பட்டி தொட்டியெங்கும் பேசப்படும். அந்த அளவுக்கு பாடலின் டெம்போ இயல்பாகவே அமைந்திருக்கிறது. எனக்கு தெரிந்து, வீரன் பாற்றிய பாடல் இதுவரை வெளிவந்ததில்லை என நினைக்கிறேன். அதே போல பட்டுக்கோட்டை சண்முகசுந்தரம், வாட்டாகுடி ராஜராஜன், சிங்கப்பூர் சொ.சிவக்குமார், இனியதாசன் போன்றவர்கள் எழுதிய பாடல்களும் பெரிய அளவில் பேசப்படும். ஒரு பாடலை சிங்கப்பூரில் எடுக்க இருக்கிறேன்.
வித்தியாசமான நடனத்தை டான்ஸ் மாஸ்டர் ஈஸ்வர் பாபு, ரமேஷ் ரெட்டிஅமைத்திருக்கின்றனர். பரபரப்பான சண்டைக் காட்சியை ஸ்டண்ட் மாஸ்டர் தேஜா பயிற்சி அளிக்க படமாக்கி இருக்கிறேன்.
கிராமத்து கதை என்பதால், காஞ்சிபுரம் அருகே உள்ள வில்லிவலம் கிராமத்திலும், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வடசங்கந்தி கிராமத்திலும் படமாக்கி இருக்கிறேன்.
மக்களிடம் நான் பார்த்த விஷயங்களை எடுத்து, அதை படமாக்கி இருக்கிறேன். நான் எதையும் கற்பனையாக கொண்டு வரவில்லை. எல்லாமே இங்கிருந்து எடுக்கப்பட்டதுதான். கலை, இலக்கியம் யாவும் மக்களுக்காகத்தானே!.
இந்தப் படம் திரையில் ஓட ஆரம்பிக்கும் போது, முதல் காட்சியிலேயே அந்த கிராமத்துக்குள் சென்று அங்கு தங்கி, அந்தக் கதாப்பாத்திரங்களுடன் பேசி பழகி, வாழ்ந்து, படம் முடியும் போது அந்த கிராமத்தை விட்டு வெளியே வருகிற உணர்வை ஏற்படுத்தும் படமாக ரசிகர்களுக்கு இருக்கும் என நம்புகிறேன்..." என்று கூறினார்.