Tuesday, May 26, 2020

காவல் துறையின் பெருமையை சொல்லும் படம், ‘பச்சை விளக்கு’.


டிஜி திங்க் மீடியா  ஒர்க்ஸ் மற்றும் விண்மீன்கள் பட நிறுவனம் இணைந்து தயாரிக்கும் புதிய படம், ‘பச்சை விளக்கு’. விதி மீறிய காதலும், விதி மீறிய பயணமும் ஊர் போய் சேராது என்பதை விளக்கும் இந்தப் படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார், டாக்டர் மாறன்.

இந்தப் படத்தில் புதுமுகங்கள் ஆதிக் மாறன், ‘அம்மணி’ புகழ் ஸ்ரீமகேஷ் தீஷா, தாரா ஆகியோருடன்  மனோபாலா, இமான் அண்ணாச்சி, நெல்லை சிவா, ‘போஸ்டர்’ நந்தகுமார், விஜய் டிவி புகழ் நாஞ்சில் விஜயன், ராதா, மடிப்பாக்கம் சுரேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர். கன்னட பட உலகில் கதாநாயகியாக நடித்து வரும் ரூபிகா இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துயுள்ளார். நடன இயக்குனர் சிவசங்கர் மாஸ்டர் பாடலுக்கு நடனம் அமைத்து நடித்தும் இருக்கிறார்.

இமான் அண்ணாச்சிக்கு இந்த படம் ஒரு திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கபடுகிறது. அவர் தனது வழக்கமான பாணியில் மிகுந்த நகைச்சுவை கலந்து சாலை பாதுகாப்பு விதிகளை மக்கள் ரசிக்கும்படி சொல்லி இருப்பது இத்திரைப்படத்தின் ஒரு சிறப்பு அம்சமாகும். மேலும் மனோபாலா காமடி வயிறு குலுங்கும்படி சிறப்பாக அமைந்து உள்ளது. நெல்லை சிவா, நாஞ்சில் விஜயன் காமடி காட்சிகள் என்றும் பேசும்படி அமைந்து இருப்பது மேலும் ஒரு சிறப்பாகும்.

இயக்குநர் டாக்டர் மாறன். 
இந்தப் படத்தில் ‘வேதம் புதிது’ பட புகழ் தேவேந்திரன் இசையில் நான்கு பாடல்கள் உருவாகி உள்ளன. பாடல்களை விஜய்சாகர், டாக்டர் கிருதயா, இயக்குநர் டாக்டர் மாறன் ஆகியோர் எழுதி உள்ளனர். பாலாஜி ஒளிப்பதிவு செய்ய, சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பு செய்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி, திருப்போரூர், திருவண்ணாமலை உட்பட பல இடங்களில் நடைபெற்றது.

“காவல்துறை குறித்து எத்தனையோ படங்கள் வெளி வந்திருந்தாலும் அதில் புதுமையான கதையுடன் இந்தப் படம் இருக்கும்” என்கிறார் இயக்குநர் டாக்டர் மாறன்.

“காவல் துறையின் ஒரு பிரிவின் பெருமையை போற்றும் பாடமாக இந்தப் படம் உருவாகி உள்ளது” என்று தெரிவித்துள்ள இயக்குநர் டாக்டர் மாறன், “இந்தக் கருத்தை இதுவரை எந்த மொழியிலும் சொல்லவில்லை” என்கிறார்.

இந்தப் படம் காதலுடன் சாலை பாதுகாப்பை வலியுறுத்தி எடுக்கப்பட்டுள்ளது. உலகில் பிறந்த எவரும் சாலையை  பயன்படுத்தாமல் இருக்க முடியாது. அப்படி சாலையை பயன்படுத்தும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சுவராஸ்யமான படமாக இயக்கி இருக்கிறார், இயக்குநர் டாக்டர் மாறன். இந்தப் படம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து மக்களும் பார்க்க வேண்டிய திரைப்படமாக உருவாகி உள்ளது.

இயக்குநர் டாக்டர் மாறன், எஸ்.ஆர்.எம் பல்கலை கழத்தில் பி.எச்.டி. (Ph.D) படித்து டாக்டர் பட்டம் பெற்றவர். அவருடைய சாலை பாதுகாப்பு ஆய்வறிக்கையின்படி பொதுமக்கள் பலன் அமையும் வகையில் சுவராஸ்யமாக திரைக்கதை அமைத்து படமாக்கி உள்ளார்.

திரைப்பட கல்லூரியிலும் படித்து பட்டயம் பெற்றுள்ள மாறன், ‘இனிய பயணம்’, ‘பொன்னான நேரம்’ என இரு குறும் படங்களை இயக்கி உள்ளார்.

Monday, April 10, 2017

எம்.எஸ்.பாஸ்கருக்கு குவியும் பாராட்டுக்கள்

சமீபத்தில் வெளியான ‘8 தோட்டாக்கள்’ படத்தை  இயக்கியவர்  இயக்குநர்  ஸ்ரீகணேஷ்.  இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தப் படத்தில் நடித்திருந்த நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் கதாப்பத்திரம் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது. திரைப்பட நடிகர்கள், 

இயக்குனராகள், பத்திரிகையாளர்கள், ரசிகர்கள் என பலர் எம்.எஸ்.பாஸ்கர் அவர்களை நேரிலும், தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டும் பாராட்டி வருகின்றனர்.

 இதனால், உற்சாகம் அடைந்த நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், தன்னுடைய கதாப்பாத்திரத்தின் நடிப்பை வெளிக் கொண்டுவர காரணமாக  இருந்த இயக்குநர் ஸ்ரீகணேஷ்  அவர்களை  பாராட்ட  முடிவு செய்து, தனது வீட்டுக்கு அழைத்தார்.

 பட விமர்சனங்களை பற்றி பகிர்ந்து கொள்ள எம்.எஸ்.பாஸ்கர் அழைத்திருக்கிறார் என்று நினைத்து வந்த இயக்குனர் ஸ்ரீகணேஷ், திடீர் என அவர் தங்க சங்கிலி பரிசளித்து பாராட்டியதில் நெகிழ்ந்து போனார்.

Sunday, March 26, 2017

லஷ்மி மேனனின் தந்தையாக சித்ரா லட்சுமணன்

“பாஸ் என்கிற பாஸ்கரன்” படத்தில் நயன்தாராவின் தந்தையாக நடித்த சித்ரா லட்சுமணன், அந்தப் படத்தைத் தயாரித்த வாசன் விஷுவல் வென்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் “யங் மங் சங்” படத்தில் லஷ்மி மேனனின் தந்தையாக நடிக்கிறார்.

பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் தங்கர் பச்சான், ஆர்.ஜே.பாலாஜி, காளி வெங்கட், 'பாகுபலி' பிரபாகர் கலக்கேயா, கும்கி அஸ்வின், இயக்குனர் சி.எச்.நாராயணன மூர்த்தி, ஒளிப்பதிவாளர் ரவீந்தர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்

குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, அம்ரீஷ் இசையமைக்கும்  இப்படத்தை 'முண்டாசுப்பட்டி', 'இன்று நேற்று நாளை' ஆகிய படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய  அர்ஜுன்  இயக்குகிறார்.

கடந்த பதினைந்து நாட்களாக கும்பகோணம் பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் இப்படத்தை கே.எஸ்.சீனிவாசன்-கே.எஸ்.சிவராமன் ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர் .Tuesday, January 17, 2017

தமிழக முதல்வருக்கு இயக்குனரும் நடிகருமான சித்ரா லட்சுமணன் கோரிக்கை


ஒவ்வொரு ஆண்டும்  எம்ஜிஆர் பிறந்த தினத்தன்று அவரது பெயராலே  மா மனிதர்  விருது

தமிழக முதல்வருக்கு இயக்குனரும் நடிகருமான சித்ரா லட்சுமணன்  கோரிக்கை

ஒவ்வொரு ஆண்டும்  எம்ஜிஆர் பிறந்த தினத்தன்று அவரது பெயராலே  மா மனிதர்  விருது ஒன்று தர வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு இயக்குனரும் நடிகருமான சித்ரா லட்சுமணன்  கோரிக்கை வைத்துள்ளார் 

இது குறித்து தமிழக முதல்வருக்கு கடிதம்  எழுதியுள்ள சித்ரா லட்சுமணன் “தமிழ்நாட்டில் மட்டுமின்றி,உலகம் முழுவதும் எங்கெங்கெல்லாம் தமிழர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் எம் ஜி ஆரின் நூற்றாண்டு விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. 

புரட்சி நடிகர் என்றும் புரட்சித் தலைவர் என்றும் தமிழக மக்களால் பாசத்தோடு அழைக்கப்படுகின்ற  எம் ஜி ஆர் அளவிற்கு தமிழக மக்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம் பிடித்த நடிகர்-தலைவர் எவரும் இல்லை. மக்களால் அந்த அளவிற்கு நேசிக்கப்பட்டதால்தான் தமிழ் சினிமாவை முப்பதாண்டு காலமும் தமிழ் நாட்டை பதினொரு ஆண்டு காலமும் அவரால் ஆள முடிந்தது. காலம் அவரது உயிரைப் பறிக்காமல் இருந்திருந்தால் எக்காலத்திலும் , எவராலும் எம்ஜிஆரை ஆட்சிக் கட்டிலில் இருந்து இறக்கியிருக்கவே முடியாது என்பதை எவராலும் மறுக்க முடியாது. 

இன்றும் தமிழக மக்களில்  பலர் தங்களை வாழவைக்க அவதரித்த கடவுளாகவே எம் ஜி ஆர் அவர்களைப் பார்ப்பதால்தான்  பூஜை அறையில் அவரது படத்தை வைத்து வணங்கிக் கொண்டிருக்கின்றனர். 

நான் தயாரித்த ஜல்லிக்கட்டு திரைப்படத்தின் நூறாவது நாள்விழாவிலே கலந்து கொண்டு சிறப்பித்த புரட்சித் தலைவரோடு பல சந்தர்ப்பங்களில் மிகவும் நெருக்கமாக பழகுகின்ற வாய்ப்பை இறைவன் எனக்கு அளித்ததை மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறேன்   

இன,மத,கட்சி வேறுபாடின்றி எல்லோராலும் மதிக்கப்படுகின்ற புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் நினைவாக  ஒவ்வொரு ஆண்டும் சேவை மனப்பான்மையுள்ள ஒரு நல்ல மனிதரைத் தேர்ந்தெடுத்து ” எம்ஜிஆர் மா மனிதர் விருது’என்று பெயரிலே ஒரு விருது தர வேண்டும் என்றும்  அந்த விருது வழங்கும் விழாவை ஒவ்வொரு ஆண்டும் எம்ஜிஆர் அவர்களின் அவரது பிறந்த நாளான  ஜனவரி பதினேழாம் தேதி மிகப்பெரிய விழாவாக தமிழக அரசின் சார்பில் கொண்டாட வேண்டும் என்றும் தங்களை அன்போடு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் ‘என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்

Tuesday, January 12, 2016

மலையாள நகைச்சுவை நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு தமிழில் நடிக்கும் முதல் படம் ‘கொஞ்சம் நடிங்க பாஸ்’.


டி.என்.பிலிம்ஸ் சார்பில் எம்.ஏழுமலை தயாரிக்கும் புதிய படம்கொஞ்சம் நடிங்க பாஸ்’. ’பாலக்காட்டு மாதவன்வெற்றிப் படத்தை இயக்கிய எம்.சந்திரமோஹன், கதை, திரைக்கதை எழுதி இயக்கும் படம் இது.

இந்தப் படத்தில் புதுமுகங்கள் வசந்த், ஜெயசிம்மா, ராஜேஷ், ஐயப்பா பைஜு ஆகியோருடன் புதுமுகம் ரஞ்சனா மிஸ்ரா, கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் ‘நான் கடவுள்ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி, பிரமானந்தம், மயில்சாமி, ஜெயப்பிரகாஷ், ’கயல்தேவராஜ், ஆர்த்தி, தேவதர்ஷினி ஆகியோர் நடிக்க, இவர்களுடன் மலையாள பிரபல நகைச்சுவை நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு முதல் முறையாக தமிழில் நடிக்கிறார். மலையாளத்தில் நூறு படங்களுக்கு மேல் நடித்திருக்கும் சுராஜ் வெஞ்சார மூடு, நடிப்புக்காக தேசிய விருது பெற்றவர்.

உழைப்பாளியின் வியர்வை காயும் முன் அவரது கூலியை கொடுத்துவிட வேண்டும் என்பதுதான் தமிழ் பண்பாடு. ஆனால், அந்த உழைப்பை சுரண்டி ஏமாற்ற நினைக்கும் ஒரு சினிமா தயாரிப்பாளரிடம் சிக்கி தவிக்கும் நான்கு இளைஞர்களின் கதைதான் ’கொஞ்சம் நடிங்க பாஸ்’. நகைச்சுவை மற்றும் சஸ்பென்ஸ் கலந்த படமாக இந்தப் படம் உருவாக இருக்கிறது. 

இந்தப் படத்திற்கு டி.எம்.ஏ.அஜிஸ் இசையமைக்க, சம்சாது ஒளிப்பதிவு செய்கிறார்.

கலை இயக்குநர் ராபர்ட் பால்ராஜ் தலைமையில் பொள்ளாச்சியில் பிரமாண்ட பங்களா செட் அமைத்து அங்கு வருகிற 19 ஆம் தேதி முதல் படப்பிடிப்பு துவங்குகிறது. தொடர்ந்து சென்னை, ஐதராபாத், கேரளா ஆகிய இடங்களில் இரண்டு கட்டமாக படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

Tuesday, November 10, 2015

பரபரப்பும் விறுவிறுப்புமான அதிரடிப் படம் ‘தகிடுதத்தோம்’ரஸ்டிக் டேய்ல்ஸ் என்டர்டெய்மெண்ட் பட நிறுவனம் சார்பில் அஜய் வாசுதேவ் பணிக்கர் தயாரிக்கும் படம் தகிடுதத்தோம்

சூது கவ்வும் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த யோக் ஜேப்பி முக்கிய வேடத்தில் நடிக்க அவருடன் பல விளம்பர படங்களில் நடித்த மும்பை அழகி அலீஸா கான், நாடோடிகள் பரணி, பிரமிட் நடராஜன், எம்.எஸ்.பாஸ்கர், கராத்தே ராஜா, ஆர்யன், கோவை சந்தானம் உட்பட பலர் நடித்துள்ளனர். 

ஜெய் கிருஷ்ணன் இயக்கும் இந்தப் படத்திற்கு அல் ஆலீஜ் இசையமைக்கிறார். டாக்டர் ராஜேஷ்.வி பாடல்கள் எழுத, எம்.ஜி.காளிதாஸ், உன்னி பாலடு இருவரும் ஒளிப்பதிவு செய்துள்ளனர். கே.ஜே.வெங்கட்ரமணன் படத்தொகுப்பு செய்ய, கலை இயக்கம் ராஜா. இணைத் தயாரிப்பு கார்த்திக் கண்டேரி, நவீன், பிரவீன் படிக்கேரியா.

ஒரு அனாதை ஆசிரமத்தின் இடத்தை காலி செய்ய ஐந்து கோடி ஒரு முக்கிய புள்ளிக்கு கிடைக்கிறது. அந்தப் பணம் திடீர் என்று காணாமல் போகிறது. அதை யார் எடுத்திருப்பார்கள் என்கிற விசாரணையில் ஒரு கணவன் மனைவி, ஒரு கேங்க்ஸ்டர் குழு, ஒரு அப்பாவி அனாதை ஆசிரம இளைஞன் ஆகியோரை சந்தேகப்பட்டு விசாரிக்கின்றனர். அந்தப் பணத்தை எடுத்தது யார்? பணத்தின் பின்னணி என்ன? அந்த ஆசிரம இடம் என்ன ஆகிறது? என்பது  கதை.  

ஒவ்வொரு காட்சியிலும் முடிச்சு மேல் முடிச்சு என்று சஸ்பென்ஸ் கலந்த யூகிக்க முடியாத பரபரப்பான திரைக்கதையுடன், விறுவிறுப்பான படமாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஜெய் கிருஷ்ணன். 

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றி பல இடங்களில் நடந்துள்ளது. கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள இயற்கை எழில் சூழ்ந்த பகுதிகளில் பாடல் காட்சிகளை படமாக்கியுள்ளனர்.

Friday, October 23, 2015

வாழ்வியலை சொல்லும் மாற்று சினிமா ‘பையன்’ஏ.டி.எம். புரொடக்ஷன்ஸ் சார்பில் டி.மதுராஜ் தயாரித்திருக்கும் படம் பையன்’. 

இந்தப் படத்தில் கதையின் நாயகனாக புதுமுகம் பைசல் நடிக்க, நாயகியாக புதுமுகம் ராகவி நடித்துள்ளார். பசங்க சிவக்குமார் முக்கிய வேடத்தில் நடிக்க, அவருடன் எம்.எஸ்.பாஸ்கர், அனுமோகன், சித்தன் மோகன், வடிவுக்கரசி, செந்தி, சுரெஷ், உதய்ராஜ், சந்துரு, ரஞ்சன், விஜய்கணேஷ், புலிப்பாண்டி, வி.ஜி.பி.கோவிந்தராஜ், பழனிவேல் கவுண்டர், உமா சங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர்.

பாலு மலர்வண்ணன் கதை எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு சாய்சூரஜ் சந்திரசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். பி.எஸ்.ராகுல் இசையமைக்க, பாடல்களை மதுராஜ், சாகுல், வேணுஜி ஆகியோர் எழுதியுள்ளனர். ரமேஷ் ரெட்டி நடனம் அமைக்க, சேவியர் திலக் படத்தொகுப்பு செய்துள்ளார்.

திருத்துறைப்பூண்டி, வடசங்கந்தி, சேலம், ஈரோடு, பவானி, ஊராட்சிக் கோட்டை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது.

வழக்கமான படம் என்பதை தாண்டி மக்களின் வாழ்க்கையில் இருந்து கதை எடுத்து படமாக்கியுள்ளார் இயக்குனர் பாலு மலர்வண்ணன். இயல்பான காட்சிகளுடன் உருவாக்கியுள்ள இந்தப் படம் ஒரு மாற்று சினிமாவாக, வாழ்வியல் படமாக இருக்கும் என்கிறார் இயக்குநர் பாலு மலர்வண்ணன்.  

பெற்றோரை விட்டு பிரிந்து நிற்கும் பெரியமனிதத்தனம், காதல் முளைக்கும் காலம், நட்பின் புரிதல்கள், தன் சொந்தக் காலில் நிற்க ஆசைப்படும் சுயம் என்றெல்லாம் ஒரு பையன் வாழ்வில் சந்திக்கும் அனுபவங்களை வாழ்வியலாக சொல்லி இருக்கிறேன். இது படம் பார்ப்பவர்களுக்கு தங்களது அனுபவத்தை பெறுவது போல இருக்கும் என்கிறார் இயக்குநர் பாலு மலர்வண்ணன்.