About Us

Cinema has been passion. It was my desire to write that propelled me to cinema. Since my childhood I have been writing lots of short stories. It was this that brought me from ThiruthuraiPoondi to Chennai. Many of my stories have appeared in many magazines, journals and weeklies.

Over a 10 of novels titled Vendumadi Nee Enakku, Mansukkul Varalama, Kudimagan, Sarasu and Soundarya have been published by many publications. Having started my career as PRO in 1992, I was sincerely executing my task as a bridghe between the film personalities, production house with the media personnel. I should thank my mentor Diamond Babu who mentored me in this profession. I worked with him for many films starting from Rajnikanth starrer Mannan till Sivaji Ganesan’s son Prabhu’s 100th film Rajakumaran.

My passion for cinema helped me execute my work with utmost sincerity and decication. For over years, I worked as PRO for Tamil Film Producers Counil during which my work was appreciated highly. It was exactly during this period that I got acquanited with producer V Sekar and started to work for hiS Thiruvalluvar Kalaikoodam, which set a new trend in Tamil cinema producing a host of low-budget films that went on to become blockbusters. I worked for films including Koodi Vaazhnthal Kodi Nanmai, Viralukatha Veekam, Alukku Oru Asai, Veettoda Mappillai and Namma Veetu Kalyanam. Also with Durairaj’s Mass Movie Makers, I worked as publicist for several films including Thenkasi Pattanam, Paarai, Gambheeram, Sathurangam. Also Jagan’s Kodambakkam starring Nandha is in the list.

I executed my work with utmost satisfaction for Pankaj Mehta’s films including Maaran, Aaha Ethanai Azhagu, Pugaippadam and Ochayi, besides a host of films which includes half-a-dozen which are currently under-production.  Besides I am working as publicist for many film personalities, actresses and music directors in Tamil cinema.

Some of the awards and accolades that came my way are:

1. 2003 Dinakaran Award for best PRO

2. 2007 – MGR-Sivaji Academy award for best PRO

3. Kannadasan Award

I co-ordinated many a star nite shows, celebrity cricket matches besides the mega protests organised by Tamil film fraternity for Cauvery issue

I reiterate that if given an opportunity to serve for your organisation, I will execute the work with utmost sincerity and your satisfaction bringing my experience and dedication.



ஜி‌.பா‌லன்‌, தி‌ரை‌ப்‌பட  மக்‌கள்‌ தொ‌டர்‌பா‌ளர்‌

தமிழ்த் திரையுலகில் திரைப்பட மக்கள் தொடர்பாளராக, பத்திரிகையாளராக, எழுத்தாளராக, இயக்குனராக இருக்கும் ஜி. பாலன், 1965 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வடசங்கந்தி கிராமத்தில் பிறந்தவர்.

இவருடைய தந்தை பெயர் கோபாலகிருஷ்ணன். தாயார் பெயர் நாகரத்தினம். இவருக்கு சண்முக சுந்தரம் என்கிற அண்ணனும், நமசிவாயம் என்கிற தம்பியும் உள்ளனர். அதே போல வைரக்கண்ணு என்கிற அக்காவும், ராஜலட்சுமி என்கிற தங்கையும் உள்ளனர்.

வடசங்கந்தி கிராம பஞ்சாயத்து பள்ளியில் ஐந்தாவது வரை படித்த பாலன், ஆரியலூர் கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பை முடித்தார். எடையூர் அரசினர் உயர் நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்றவர், அதன் பிறகு சினிமா கனவுகள் மனதில் எழ சினிமா உருவாகும் இடமான சென்னைக்கு புறப்படலானார்.

விவசாய குடும்பத்தைச் சேர்ந்த பாலனுக்கு சினிமாவில் தெரிந்தவர்கள் யாரும் இல்லை. உதவி இயக்குனராக சேர்ந்து திரைத் தொழிலைக் கற்றுக் கொள்ள பெரும் போராட்டம் நடத்த வேண்டி இருந்தது. திரை உலகில் முதலில் நுழைந்துவிட்ட வேண்டும் என்று பல வருடப் போராட்டத்திற்கு பிறகு திரைப்பட மக்கள் தொடர்பாளர் பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களிடமும், அவரது மகன் டைமண்ட் பாபு அவர்களிடமும் உதவியாளராக சேர்ந்தார்.

1991 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த மன்னன் படத்தில் வேலைப் பார்க்கத் தொடங்கியவர், தொடர்ந்து பிரபுவின் நூறாவது படமான ராஜகுமாரன் படம் வரை உதவி மக்கள் தொடர்பாளராக அவர்களிடம் வேலைப் பார்த்தார்.

1994 ஆம் ஆண்டு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக திரு.கே.ஆர்.ஜி. அவர்கள் பொறுப்பேற்ற போது, அங்கு மக்கள் தொடர்பாளராக வேலை பார்க்கத் தொடங்கினார். பல தயாரிப்பாளர்களை நேரில் சென்று சந்தித்து தயாரிப்பாளர் சங்கத்தில் அவர்களை உறுப்பினராக சேர்த்தவர் இவர். தயாரிப்பாளர் சங்கத்தின் வளர்ச்சியிலும், முன்னேற்றத்திலும் ஒரு தொழிலாளியாக இருந்து உழைத்தவர் இவர்.

இவரை கவுன்சிலின் பில்லர் என்று உரிமையோடு அழைப்பார் திரு.கே.ஆர்.ஜி.அவர்கள்.

திரு வி.சேகர் தனது திருவள்ளுவர் கலைக்கூடம் சார்பில் தயாரித்து இயக்கிய விரலுக்கேத்த வீக்கம், கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, வீட்டோட மாப்பிள்ளை, நம்ம வீட்டுக் கல்யாணம், ஆளுக்‌கொ‌ரு ஆசை‌, ஏய் போன்ற படங்களுக்கு மக்கள் தொடர்பாளராக வேலைப் செய்திருக்கிறார்.

அதே போல மாஸ் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் திரு எஸ்.எஸ்.துரைராஜ் அவர்கள் தயாரித்த தென்காசிப்பட்டணம், பாறை, கம்பீரம், சதுரங்கம் போன்ற படங்களுக்கு மக்கள் தொடர்பாளராக பணியாற்றி பணியாற்றி இருக்கிறார்.  

பங்கஜ் மேத்தா தயாரிப்பில் சத்யராஜ் நடித்த மாறன், சா‌ர்‌மி‌ நடி‌த்‌த ஆஹா எத்தனை அழகு, சித்திரைச் செல்வன் ஜதி, ஆக்ரா, தலைவன், ரஞ்சித் நடித்த பதவி படுத்தும் பாடு, கே‌.பா‌க்‌யரா‌ஜ்‌ கெ‌ளரவ வே‌டத்‌தி‌ல்‌ நடி‌த்‌த மா‌ணவன்‌ நி‌னை‌த்‌தா‌ல்‌, நந்‌தா‌ நடி‌த்‌த கோ‌டம்‌பா‌க்‌கம், வா‌சன்‌ கா‌ர்‌த்‌தி‌க் நடி‌த்த அய்யன்‌‌, ரா‌ஜே‌ஷ்‌லி‌ங்‌கம்‌ இயக்கிய பு‌கை‌ப்‌படம்‌, திரவிய பாண்டியன் தயாரித்த ஒச்சாயி, புதுமுகங்கள் நடித்த தலை‌எழுத்‌து, தந்‌தி‌ரன்‌, தெ‌ய்‌வம்‌ தந்‌த பூ‌வே‌, என்‌ பெ‌யர்‌ குமா‌ரசா‌மி, ஓடும்‌ மே‌கங்‌களே‌, சா‌மி‌ப்‌பு‌ள்‌ள என ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களுக்கு மக்கள் தொடர்பாளராக பணியாற்றி இருக்கிறார்.

மக்கள் தொடர்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினராகி நான்கு ஆண்டுகள் துணை செயலாளராகவும், ஐந்து ஆண்டுகள் பொதுச் செயலாளராகவும், இரண்டு ஆண்டுகள் பொருளாளராகவும் பதவி வகித்து சங்கத்திற்கும் உறுப்பினர்களுக்கும் உதவியாக இருந்திருக்கிறார்.

திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தை துவக்கி இரண்டு ஆண்டுகள் பொதுச் செயலாளராக செயலாற்றியவர். தற்போதும் துணைச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். 

2003-ம் ஆண்டு தினகரன் நாளிதழ் திரைப்பட விருது வழங்கும் விழாவில் சிறந்த மக்கள் தொடர்பாளருக்கான விருது பெற்றுள் இவர், 
   
2007-ம் ஆண்டின் சிறந்த மக்கள் தொடர்பாளருக்கான எம்.ஜி.ஆர்.-சிவாஜி அகடாமி வழங்கிய விருதும் பெற்றுள்ளார். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்‌வநா‌தன்‌ கரங்‌களா‌ல்‌ கண்ணதாசன் விருது பெற்றுள்ள இவர், திரையுலகம் நடத்தியுள்ள பல்வேறு நட்சத்திரக் கலை விழாக்கள், கிரிக்கெட் போட்டிகள், விருது வழங்கும் விழாக்களுக்கு ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டிருக்கிறார்.

காவிரி நதி நீர் தொடர்பாக திரையுலகமே திரண்டு நடத்திய நெய்வேலியில் நடத்திய போராட்டம், ஒக்கனேக்கல் குடிநீர் திட்டத்திற்கு ஆதரவான போராட்டம், திருட்டு விசி.டி எதிர்ப்புப் பேரணி, உண்ணாவிரதம் என திரையுலகம் நடத்திய பல போராட்டங்களில் கலந்து கொண்டு தனது பங்களிப்பை வழங்கி இருக்கிறார்.

தி‌ருத்‌துறை‌ப்‌பூ‌ண்‌டி‌ கோ.பா‌லன்‌ என்‌கி‌ற பெ‌யரி‌ல்‌ ‌‌பல வார இதழ்களில்     தின இதழ்களில் 60-க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியிருக்கிறார். நினைவெல்லாம் நீதானே, மனசுக்குள் வரலாமா, வேண்டுமடி நீ எனக்கு, குடிமகன், சரசு, சவுந்தர்யா, மனுஷி என இவர் எழுதிய படைப்புகள் புத்தகங்களாக வெளிவந்திருக்கிறது.

குங்குமம், வண்ணத்திரை, சினிமா எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிகைகளில் நிருபராக வேலைப் பார்த்திருக்கிறார். கோடம்பாக்கம் டுடே என்கிற பத்திரிகையையும், இணையதளத்தையும் நடத்திய இவர்

ராஜ் தொலைக்காட்சியில் ஆயிரத்தி ஐநூறு எபிசொடுகளுக்கு மேல் வெள்ளித்திரை என்கிற நிகழ்ச்சியை இயக்கி இருக்கிறார்.

ராசாத்தி’ என்கிற டெலிபிலிம் ஒன்றை கதை எழுதி இயக்கிய இவர், வெள்ளித்திரையில் ஒத்தவீடு, பையன் என இரு மாறுபட்ட திரைப் படங்களை இயக்கி இருக்கிறார்.

ஒத்தவீடு படத்திற்காக ஜெயாடிவி வழங்கிய புதுமுக இயக்குனருக்கான விருது பெற்ற இவர், சினிமா ரசிகர் சங்கம் உட்பட பல அமைப்புகள் வழங்கிய பரிசு கேடயங்களையும், பாராட்டுக்களையும் பெற்றிருக்கிறார்.

இவருக்கு தமிழ்ச்செல்வி என்கிற மனைவியும், மலர்வண்ணன் என்கிற மகனும், மதுபாலா என்கிற மகளும் உள்ளனர்.

குக்கிராமத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்து, ஒரு படைப்பாளியாக தன்னை அடையாளம் காட்ட இவரது நம்பிக்கையும் முயற்சியும் பலமாக இருந்திருக்கிறது. ஏழ்மையாக இருந்தாலும் தான் நினைத்ததை அடைய பல போராட்டங்களை கடந்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.