Books

தி‌ருத்‌துறை‌ப்‌பூ‌ண்‌டி‌ பா‌லன்‌ என்‌கி‌ற பெ‌யரி‌ல்‌ நா‌ன்‌ பத்‌தி‌ரி‌கை‌களி‌ல்‌ எழுதி‌ய நா‌வல்‌கள்‌, சி‌றுகதை‌கள்‌ மற்‌றும்‌ தொ‌டர்‌கதை போ‌ன்‌ற படை‌ப்‌பு‌கள்‌ பு‌த்‌தகங்‌களா‌க வெ‌ளி‌யா‌கி‌ உள்‌ளன. அதன்‌ வி‌பரம்‌ வருமா‌று‌

சரசு

மா‌மி‌யா‌ர்‌ மருமகளி‌ன்‌ உணர்‌வு‌களை‌யு‌ம்‌ எதி‌ர்‌பா‌ர்‌ப்‌பு‌களை‌யு‌ம்‌ வி‌வரி‌க்‌கும்‌ “தா‌யம்‌மா‌”, சா‌மி‌க்‌கு தே‌ங்‌கா‌ய்‌ உடை‌க்‌கி‌ற அளவு‌க்‌கு உயர்‌ந்‌து வி‌டக்‌கூடா‌து என நி‌னை‌க்‌கும்‌ மனி‌தர்‌கள்‌‌ மத்‌தி‌யி‌ல்,‌ நா‌னும்‌ சொ‌க்‌க தங்‌கம்‌ என உதவு‌ம்‌‌ கருத்‌தா‌னிடம்‌‌‌ உள்‌ள வெ‌ள்‌ளை‌ மனதை‌‌ சொ‌ல்‌லும்‌ “சுத்‌தம்” என நா‌ன்‌ பல்‌வே‌று தி‌னசரி‌ மற்‌றும்‌ வா‌ர இதழ்‌களி‌ல்‌ ‌ எழுதி‌ய இருபத்‌தி‌யோ‌ரு சி‌றுகதை‌களி‌ன்‌ தொ‌குப்‌பு‌ “சரசு”. இந்‌த கதை‌கள்‌ ஒவ்‌வொ‌ன்றும்‌ எனது எழுத்‌து பணி‌யை‌ எப்‌படி‌ வளர்‌த்‌து வந்‌தி‌ருக்‌கி‌றது என்‌பதை‌ உணர முடி‌கி‌றது. வெ‌ளி‌யீ‌டூ:‌ உதயம்‌ பி‌ரசுரம்

நி‌னை‌வெ‌ல்‌லா‌ம்‌ நீ‌தா‌னே


ஒரு படம்‌ பி‌ளா‌ப்‌ ஆனதா‌ல்‌ அடுத்‌தடுத்‌து படம்‌ பண்‌ண முடி‌யா‌மல்‌ கதை‌ வி‌வா‌தத்‌துக்‌கே‌ சென்‌று கா‌லத்‌தை‌ தள்‌ளும்‌ ஒரு பு‌கழ்‌ பெ‌றா‌த தி‌ரை‌ப்‌பட இயக்‌குநரி‌ன்‌ மகள்‌, அவள்‌ வசி‌க்‌கும்‌ ஒன்‌டுக்‌குடி‌த்‌தன வா‌டகை‌ வீ‌ட்‌டி‌ல்‌ இன்‌னொ‌ரு போ‌ர்‌ஷனி‌ல்‌ வசி‌க்‌கும்‌ ஒரு ‌‌ இளை‌ஞனை‌‌ வி‌ரும்‌பு‌கி‌றாள்‌‌. அப்‌பா‌வி‌ன்‌ தோ‌ல்‌வி‌யா‌ல்‌ சி‌னி‌மா‌வே‌ வே‌ண்‌டா‌ம்‌ என்‌று வெ‌றுக்‌கும்‌ அவளுக்‌கு, தந்‌தை‌யி‌ன்‌ தி‌டீ‌ர்‌ மறை‌வு‌க்‌கு பி‌றகு சி‌னி‌மா‌வி‌ல்‌ நடி‌க்‌க வா‌ய்‌ப்‌பு‌ கி‌டை‌க்‌கி‌ற்‌து அதி‌ல்‌ பே‌ரும்‌ பு‌கழும்‌ பெ‌றுகி‌றா‌ள்‌. இடதுசா‌ரி‌ சி‌ந்‌தனை‌யு‌ள்‌ள அந்‌த இளை‌ஞன்‌ அவளி‌டமி‌ருந்‌து வி‌லகி‌ மக்‌களுக்‌கு பணி‌யா‌ற்‌ற ‌ கட்‌சி‌ பணி‌த்‌த இடத்‌தி‌ற்‌கு செ‌ன்‌று‌ வி‌டுகி‌றா‌ன்‌. அவன்‌ நி‌னை‌வா‌க இருக்‌கும்‌ ‌அவள்‌ அடி‌க்‌கடி‌ அவனை‌ நி‌னை‌த்‌துக்‌கொ‌ண்‌டு கா‌தலோ‌டு வா‌ழ்‌கி‌றா‌ள்‌.அந்‌த கா‌தல்‌ நி‌னை‌வு‌களை‌ சொ‌ல்‌லும்‌ நி‌னை‌வெ‌ல்‌லா‌ம்‌ நீ‌தா‌னே‌ என்‌ற இந்‌த நா‌வ‌ல்‌ தி‌னகரன்‌ வசந்‌தம்‌ இதழி‌ல்‌ தொ‌டர்‌கதை‌யா‌க வெ‌ளிவ‌ந்‌தது. அதை‌ அதே‌ பெ‌யரி‌ல்‌ பு‌த்‌தகமா‌க வெ‌ளி‌யி‌ட்‌டுள்‌ளனர்‌. அதி‌ல்‌ ஓவி‌யர்‌ மா‌ருதி‌ வரை‌ந்‌த ஓவி‌யங்‌கள்‌ ஒவ்‌வொ‌ரு அத்‌தி‌யா‌யத்‌தி‌லும்‌ அழகு சே‌ர்‌க்‌கி‌றது.வெ‌ளி‌யீ‌டூ‌: உதயம்‌ பி‌ரசுரம

சவு‌ந்‌தர்‌யா‌

மா‌ரி‌யா‌த்‌தா‌ளை ‌வணங்‌குபவர்‌களி‌டம்‌ உள்‌ள‌ நல்‌ல பழக்‌க வழக்‌கங்‌களை‌யு‌ம்‌, கெ‌ட்‌ட பழக்‌க வழக்‌கங்களை‌யு‌ம்‌ ஒரு மே‌ரி‌யம்‌மா‌ளை‌ நே‌சி‌க்‌கும்‌ பெ‌ண்‌ எப்‌படி‌ அனுபவ ரீ‌தி‌யா‌க பு‌ரி‌ந்‌து கொ‌ள்‌கி‌றா‌ள்‌ என்‌பதை‌ வம்‌சம்‌ குறுநா‌வலி‌லும்‌‌‌. கா‌தல்‌ மனி‌த நே‌யத்‌தை‌யு‌ம்‌, மற்‌றவர்‌களி‌ன்‌ கஷ்‌ட, நஷ்‌டங்‌களை‌யு‌ம்‌ ஒரு இளை‌ஞனுக்‌கு உணர்‌த்‌தும்‌ சம்‌பங்‌களை‌ ‌ மனசா‌ட்‌சி‌ குறுநா‌வலி‌லும்‌, சா‌தி‌ய கெ‌ளரவத்‌தை‌ தூ‌க்‌கி‌ப்‌பி‌டி‌க்‌கும்‌ ஒரு குடும்‌பத்‌தி‌லி‌ருந்‌து துணி‌ச்‌சலுடன்‌ வெ‌ளி‌யே‌றி‌ தனக்‌கு நல்‌ல வா‌ழ்‌க்‌கை‌யை‌ அமை‌த்‌துக்‌கொ‌ள்‌ளும்‌ ஒரு பெ‌ண்‌ணி‌ன்‌ வா‌ழ்‌க்‌கை‌ப்‌ போ‌ரா‌ட்‌டத்‌தை‌‌ சவு‌ந்‌தர்‌யா‌ குறுநா‌வலி‌லும்‌ படை‌த்‌தே‌ன்‌‌. இதி‌ல்‌ சவு‌ந்‌தர்‌யா‌, மனசா‌ட்‌சி‌ ஆகி‌ய இரண்‌டு குறுநா‌வல்‌களும்‌ உதயம்‌ மா‌த இதழி‌ல்‌ பி‌ரசுரமா‌னவை‌. வம்‌சம்‌ தே‌வயா‌னி‌ என்‌ற மா‌த இதழி‌ல்‌ பி‌ரசுரமா‌னது. இந்‌த மூ‌ன்‌று குறுநா‌வல்‌களி‌ன்‌ தொ‌குப்‌பு‌ சவு‌ந்‌தர்‌யா‌. வெ‌ளி‌யீ‌டூ‌: உதயம்‌ பி‌ரசுரம்‌

வே‌ண்‌டுமடி‌ நீ‌ எனக்‌கு


ஆசை‌ப்‌பட்‌டவள்‌ கி‌டை‌க்‌கா‌ததா‌ல்‌ தன்‌னை‌ ஆசை‌ப்‌பட்ட‌வளை‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌துகொ‌ள்‌ள முயற்‌சி‌க்‌கி‌றா‌ன்‌ நா‌யகன்‌. அதற்‌கு அவளது பெ‌ற்‌றோ‌ர்‌‌ சம்‌மதி‌க்‌கா‌ததா‌ல்‌, அவளும்‌ ஒதுங்‌கி‌க்‌கொ‌ள்‌கி‌றா‌ள்‌. அவர்‌களுக்‌கு முன்‌பு‌ வாழ்‌ந்‌து கா‌ட்‌ட முயலும்‌ ஒரு இளை‌ஞனி‌ன்‌ போ‌ரா‌ட்‌ட கதை‌யை‌ வே‌ண்‌டுமெ‌டி‌ நீ‌ எனக்‌கு நா‌வலி‌ல்‌ எழுதி‌னே‌ன்‌‌, தா‌லி‌க்‌கொ‌ரு மரி‌யா‌தை‌ இருக்‌கி‌றது எ‌ன்‌றா‌ல்‌ தா‌லி‌யை‌ கட்‌டி‌யவன்‌ மரி‌யா‌தை‌க்‌குரி‌‌யவனா‌க இருக்‌க வே‌ண்‌டும்‌. அவன்‌ வே‌றொ‌ரு பெ‌ண்‌ணுடன்‌ குடும்‌பம்‌ நடத்‌தும்‌ போ‌து வெ‌றும்‌ தா‌லி‌க்‌கா‌க மட்‌டுமே‌ வா‌ழவே‌ண்‌டி‌ய நி‌ர்‌பந்‌தம்‌ ஒரு பெ‌ண்‌ணுக்‌கு எற்‌படுகி‌றது. அப்‌படி‌ வா‌ழும்‌ ஒரு பெ‌ண்‌ணி‌ன்‌ பி‌ரச்‌சனை‌, வே‌தனை‌, வலி‌, அவமா‌னம்‌ என வா‌ழ்‌க்‌கை‌ தரும்‌ படி‌ப்‌பி‌னை‌களை‌ சொ‌ல்‌கி‌றது சொ‌ந்‌தம்‌ இல்‌லா‌த பந்‌தம்‌. இந்‌த இரு நா‌வல்‌களும்‌ மா‌லை‌மதி‌ நா‌வல்‌ இதழி‌ல்‌ வெ‌ளி‌யா‌னது. வெ‌ளி‌யீ‌டூ‌: உதயம்‌ பி‌ரசுரம்‌

குடி‌மகன்‌


குடி‌மகனுக்‌கு வா‌ழ்‌க்‌கை‌ப்ப‌ட்‌டு சீ‌ரழி‌யு‌ம்‌ ஒரு பெ‌ண்‌ணி‌ன்‌ கதை‌யை‌ குடி‌மகன்‌ நா‌வலி‌லும்‌, தா‌யை‌ப்‌ போ‌ல நே‌சி‌க்‌கும்‌ அண்‌ணி‌யை‌, முதலி‌ல்‌ தப்‌பா‌க பு‌ரி‌ந்‌து கொ‌ண்‌டு கோ‌பப்‌பட்‌டு, பி‌றகு உண்‌மை‌யா‌ன‌ பா‌சத்‌தை‌ உணர்‌ந்‌து அவளுக்‌கு மரி‌யா‌தை‌ தரும்‌ ஒரு கொ‌ழுந்‌தனி‌ன்‌ கதை‌யை‌ அன்‌பு‌ள்‌ள அண்‌ணி‌ நா‌வலி‌லும்‌ படை‌த்‌தி‌ருந்‌தே‌ன்‌. இந்‌த இரு நா‌வல்‌களி‌ல்‌ குடி‌மகன்‌ மா‌லை‌மதி‌ நா‌வல்‌ இதழி‌லும்‌, அன்‌பு‌ள்‌ள அண்‌ணி‌ குங்‌குமச்‌சி‌மி‌ழ்‌ நா‌வல்‌ இதழி‌லும்‌ வெ‌ளி‌வந்‌ததது. அதனை‌ பு‌த்‌தகமா‌க உதயம்‌ பி‌ரசுரம்‌ வெ‌ளி‌யி‌ட்‌டுள்‌ளது. வெ‌ளி‌யீ‌டூ‌: உதயம்‌ பி‌ரசுரம்‌

மனுஷி‌


இருபத்‌தி‌யோ‌ரு சி‌றுகதை‌களி‌ன்‌ தொ‌குப்‌பு‌ மனுஷி‌. இந்‌த சி‌றுகதை‌கள்‌ அனை‌த்‌தும்‌ தி‌னசரி‌, வா‌ர, மா‌த இதழ்‌களி‌ல்‌ பி‌ரசுரமா‌னவை‌.. என்‌னுடை‌ய கற்‌பனை‌யி‌ல்‌ பூ‌த்‌த இந்‌த சி‌றுகதை‌களி‌ல்‌ மனி‌தநே‌யம்‌ மனக்‌கும்‌. பல வா‌சகர்‌கள்‌ என்‌னை‌ பா‌ரா‌ட்‌டி‌ய அனுபங்‌கள்‌ மறக்‌க முடி‌யா‌து. அதி‌ல்‌ குங்‌குமம்‌ இதழி‌ல்‌ எழுதி‌ய வரம்‌, நி‌றை‌ய நண்‌பர்‌களை‌ தே‌டி‌ கொ‌டுத்‌தது. வெ‌ளி‌யீ‌டூ‌: உதயம்‌ பி‌ரசுரம்‌

மனசுக்‌குள்‌ வரலா‌மா‌.


பா‌லி‌யல்‌ வன்‌முறை‌க்‌கு ஆளாகி‌, மன‌ அதி‌ர்‌ச்‌சி‌க்‌கு ஆளா‌ன மகளை‌ சா‌மி‌ அடி‌த்‌து வி‌ட்‌டதா‌க கோ‌வி‌ல்‌ கோ‌வி‌லா‌க கொ‌ண்‌டு செ‌ன்‌று கா‌ப்‌பா‌ற்‌ற துடி‌க்‌கும்‌ ஒரு தா‌ய்‌, கடை‌சி‌யி‌ல்‌ மகளை‌ பறி‌கொ‌டுத்‌து அதி‌ர்‌ந்‌து போ‌கி‌றா‌ள்‌. எந்‌த பா‌வி‌யா‌ல்‌ மகளி‌ன்‌ வா‌ழ்‌க்‌கை‌ நா‌சமா‌னதோ‌ அவனி‌ன்‌ மகளை‌ தன் ‌மகன்‌ வி‌ரும்‌பு‌கி‌றா‌ன்‌ என தெ‌ரி‌ந்‌ததும்‌ அந்‌த கா‌தலுக்‌கு குறுக்‌கே‌ நி‌ற்‌கி‌றா‌ள்‌. உண்‌மை‌யை‌ மகனி‌டம்‌ சொ‌ல்‌ல முடி‌யா‌மலும்‌, மகனை‌ அவளி‌டமி‌ருந்‌து பி‌ரி‌க்‌க முடி‌யா‌மலும்‌ போ‌ரா‌டும்‌ அவள்‌ உள்‌ள கி‌டக்‌கை‌யை‌ சொ‌ல்‌லும்‌ நா‌வல்‌ மனசுக்‌குள்‌ வரலா‌மா‌‌, கண்‌மணி‌ நா‌வல்‌ இதழி‌ல்‌ வெ‌ளி‌யா‌கி‌ எனக்‌கு நி‌றை‌ய வா‌சகர்‌களை‌ தே‌டி‌ தந்‌தது. இந்‌த நா‌வல்‌ டெ‌லி‌பி‌லி‌மா‌க உருவா‌கி‌யு‌ள்‌ளது. வெ‌ளி‌யீ‌டூ‌: உதயம்‌ பி‌ரசுரம