ஜி. பாலன் மக்கள் தொடர்பாளராக பணியாற்றிய நினைவாலயம், அஞ்சு, இனிமேலாவது, தினம் தினம் தீபாவளி, பிரிவோம் சந்திப்போம், நாகம்மா, நாகவல்லி, காதம்பரி போன்ற தொடர்களின் விபரங்கள் வருமாறு
காதம்பரி தொடரில் மிதுனா
'கருத்தம்மா' ராஜஸ்ரீயின் தங்கை மிதுனா. 'மாமதுரை' படத்தில் "மதுரை மதுரைதான்... மணக்கும் மல்லிக்கும் மதுரைதான்... " என்ற பாடலில் வாசன் கார்த்திக்குடன் நடித்தவர். அதன் பிறகு சில படங்களில் நடித்துவிட்டு தெலுங்கு பக்கம் போனவர், மறுபடியும் சென்னை வந்திருக்கிறார். இந்த முறை சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.
சாப்ரன் கிரியேஷன்ஸ் தயாக்கும் காதம்பரி மெகா தொடரில் இவர்தான் கதையின் நாயகி. இவருடன் சுதா சந்திரன், லஷ்மிராஜ், காயத்ரி, பாலாஜி, செம்புலி ஜெகன், சுந்தரி, சூரி, தேசிங்கு உட்பட பலர் நடித்து வருகின்றனர்.
பிரபு சங்கர் கதை எழுதி இயக்கும் இந்தத் தொடரின் படப்பிடிப்பு சென்னையை அடுத்த மனிமங்கலம் பகுதியில் நடைபெற்று வருகிறது. அங்கு நடித்துக் கொண்டிருந்த மிதுனாவிடம் பேசினோம்....
"நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னை வந்திருக்கிறேன். அக்ககாவுக்கு கல்யாணம் ஆன பிறகு நாங்கள் ஹைதராபாத் சென்றுவிட்டோம். திடீர் என என்னை :ஞாபகம் வைத்து இயக்குநர் பிரபு சங்கர் அழைத்து, காதம்பரி தொடரின் கதையைச் சொன்னார். எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. ஒவ்வொரு எபிஷோடுக்கும் எதிர்ப்பார்ப்பை எகிற வைக்கும் காட்சிகள், ஒவ்வொரு காட்சியிலும் சுவராஸ்யம், பிரமாண்டம், அதுவும் காதம்பரி என்கிற டைட்டில் ரோலில் நடிக்கிற வாய்ப்பு. அதான் ஓடோடி வந்தேன்.
அந்த காலத்தையும் இந்த காலத்தையும் இணைக்கும் கதை. 200 ஆண்டுகளுக்கு பிறகு மறுஜென்மம் எடுத்து சந்திக்கும் காதம்பரியின் வாழ்க்கை சம்பவம். இரண்டு கதாபாத்திரலும் நடிக்கிறேன். அதிலும் அந்த காலத்து வேடத்துக்காக நான், ஜாக்கெட் அணியாமல் சேலைகட்டி, கொண்டை போட்டு, அந்த கால நகைகளை மாட்டிக்கொண்டு நடிக்கிறது புது அனுபவம்தான். என்னையை என்னாலேயே நம்ப முடியவில்லை. காதம்பரி இப்படித்தான் இருப்பாளோ?
அந்த காதம்பரி கேரக்டருக்கா டைரக்டர் பிரபு சங்கர் நிறைய மெனக்கெடுகிறார். அந்த காலத்துக்கே ஆடியன்ஸை கொண்டு போகிற அனுபவத்தை இந்த சீரியலில் கொடுக்கப் போகிறார். ஜெயா டிவியில் ஜனவரி மாதத்திலிருந்து காதம்பரியை பார்க்க நானே ஆர்வமாக இருக்கிறேன். அவ்வளவு இயல்பாவும், பிரமாண்டமாகவும் படமாகி இருக்கிறது. எனக்கு எதிரான பாத்திரத்தில் சுதா சந்திரன் நடிச்சிருக்காங்க. அவுங்களுக்கும் பெரிய பேர் கிடைக்கும் செமையா மிரட்டியிருக்காங்க.
சென்னையில் தங்கி தொடர்ந்து நடித்து வருகிறேன். ஹைதராபாத், திருநெல்வேலி, அச்சன்கோவில், பெங்களூரு போன்ற இடங்களிலும் சில காடுகளிலும், அரண்மனைகளிலும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கு பிறகு என்னை காதம்பரி என்றே அழைப்பார்கள். அந்தளவுக்கு இந்த கதாபாத்திரம் அமைந்திருக்கிறது..." இவ்வாறு மிதுனா கூறினார்.
பிரிவோம் சந்திப்போம் மெகாத் தொடர்
விஜய்டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 முதல் 8.00 மணி வரை ஒளிபரப்பாகி வரும் புதிய தொடர் பிரிவோம் சந்திப்போம்.
இந்தத் தொடர் ஆரம்பித்து தற்போது 25 எபிஷோடுகள் கடந்திருக்கறிது. ஆரம்பத்திலேயே பரபரப்போடும் விறுவிறுப்போடும் ஒளிபரப்பாகி வரும் இந்தத் தொடர் மேலும் சூடு பிடித்துள்ளது. வழக்மான பார்வையாளர்கள் மட்டும் அல்லாது புதிய பார்வையாளர்களையும் திரும்பிப் பார்க்க வைக்கும் தொடராக பேசப்படுகிறது. அதிக பார்வையாளர்களை தன்வசம் இழுக்கும் அளவுக்கு கதையின் வேகமும், சம்பவங்களும் அமைத்திருக்கின்றன.
தெலுங்கில் பல வெற்றிகரமான தொடர்களை தயாரித்த எவர்கிரீன் புரொடக்ஷன்ஸ் பிரைவெட் லிமிடெட் சையத் அன்வர் தயாரிக்க, ரசூல் இயக்கி உள்ளார். க்ளைட்டன் வசனம் எழுத, மார்டின் ஜோ ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தத் தொடரின் படப்பிடிப்பு பெரும் பகுதி காரைக்குடி, செட்டிநாடு, இராமேஸ்வரம் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.
எல். ராஜா, ராஜலட்சுமி, கல்யாணி, மகாலட்சுமி, ஸ்ரீதேவி, சுங்கரலட்சுமி, உசேன், சுவேதா, மற்றும் சனா உட்பட பலர் நடிக்கின்றனர்.
சண்முகராஜன் (எல்.ராஜா) – தனம் ( ராஜலட்சுமி) தம்பதிகளின் மகள் ஜோதி. தன் தாயைப் போல கறுத்த நிறம் உடையவள், அன்பானவள்.
சண்முகராஜனின் தங்கை மகள் ரேவதி. வெள்ளை நிறம், கொள்ளை அழகு. பெற்றோரை இழந்து மாமன் சண்முகராஜன் வீட்டில் வளர்கிறார்.
ஒரே வீட்டில் இருப்பதால் ரேவதியும் ஜோதியும் உயிருக்கு உயிரான சகோதரிகளாக, தோழிகளாக வாழ்கிறார்கள்.
ஜோதியின் கறுப்பு நிறம் அவள் விரும்பும் எல்லாவற்றையும் அவளிடம் இருந்து பிரித்து சென்றுவிடுகிறது. ரேவதியின் வெள்ளை நிறம் அவள் விரும்பாமலே பல அழகிய விசயங்களை அவளிடம் கொண்டு வந்து சேர்த்துவிடுகிறது.
ஜோதிக்கு இயல்பாகவே கிடைக்க வேண்டிய மரியாதையும், அங்கீகாரமும் அவள் நிறத்தால் அவளுக்கு கிடைக்காமல் போகுது, தன் மகள் ஜோதியை நினைத்து தினமும் அழுகிறாள், தனம்.
அதனால் ரேவதியை எப்படியாவது வீட்டை விட்டு துரத்திவிட வேண்டும் என்று எண்ணி பல திட்டங்களை தீட்டுகிறாள். அவைகள் தோற்றுப் போகின்றன.
இந்த சமயத்தில் பெரும் கோடீஸ்வரி அபிராமி கண்ணில் ரேவதி படுகிறாள். மனநிலை பாதித்த தன் மகன் பிரபுக்கு திருமணம் செய்து வைத்தால் அவன் நிலை மாறும் என முடிவெடுக்கும் அபிராமி, ரேவதியை தன் குடும்ப வலையில் சிக்க வைக்க பெரும் பணத்தை செலவி செய்கிறாள்
சண்முகராஜன் மகன் அருணாச்சலம், பிசினஸ் கனவோடு பெரும் தொகை கடன் வாங்கி துணிக்கடை ஒன்றை ஆரம்பிக்க, அது ஒரு நாள் நள்ளிரவில் தீ விபத்துக்குள்ளாகிறது.
இதனால் கடன் சுமை, மன உலைச்சல் ஏற்பட்டு, சண்முகராஜன் உடல் நிலை பாதிக்கப்படுகிறது. குடும்பத்தை எப்படியாவது காப்பாற்றும் முயற்ச்சியில் இருக்கும் ரேவதிக்கு, அபிராமி அவளிடம் கேட்கும் 3 விதிகளுக்கு உடன்படுகிறாள். அந்த விதி என்ன என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வத்துடன் வரும் வாரங்களில் பார்க்கலாம்.
நாகம்மா' வில் சாயா சிங்
மன்மத ராசா புகழ் சாயா சிங்கும் சின்னத் திரைக்கு வந்துவிட்டார். சன் டிவியில் ஒளிபரப் பாக விருக்கும் நாகம்மா மெகா தொடரில் அவர் நாயகியாக நடிக்கிறார்.
திருடா திருடியில் தனுஷ¤க்கு ஜோடி யாக நடித்துப் புகழ் பெற்றவர் சாயா சிங். தொடர்ந்து நிறையப் படங் களில் நடித்தார். இப்போது மெகா தொடர்களிலும் நடிக்க ஆரம்பித்துள்ளார். அவர் நடிக்கும் முதல் தொடர் நாகம்மா. சன் டிவியில் ஞாயிறு இரவு 9.30 முதல் 10.30 வரை வாரந்தோறும் ஒளிபரப்பாகும் இந்த மாயாஜாலத் தொடரில் நடிக்கிறார் சாயாசிங்.
நாகம்மாவில் நந்தினியாக சாயாசிங், பேராசிரியர் நாதனாக சேத்தன் நடிக்கின்றனர். சி.ஜெரால்டு இயக்கும் இந்தத் தொடருக்கு இந்திரா செளந்தரராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி உள்ளார். ஒளிப்பதிவு: விஸ்வநாதன், படத்தொகுப்பு: ஜெஸ்டின் ராய், மக்கள் தொடர்பு: ஜி.பாலன்
இது குறித்து சாயாசிங் கூறுகையில், தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க திட்டமிட்டிருந்தது உண்மைதான். ஆனால் இத்தனை சீக்கிரம் நடிக்க வருவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. என்றாலும் நாகம்மா தொடரின் கதை அற்புதமாக உள்ளது. அதனால்தான் நடிக்க ஒப்புக் கொண்டேன் என்றார்.
பெங்காலி மற்றும் ஒரிய மொழிப் படங்களிலும் நடித்து வருகிறாராம் சாயா சிங். அதுமட்டுமல்ல, பெங்காலியில் ஒரு படத்தையும் இயக்கி வருகிறாராம்.
நாகவல்லி' யில் பொன்னம்பலம்
பிரபல வில்லன் நடிகர் பொன்னம்பலம் முதன் முறையாக சின்னத்திரையில் நடிக்கிறார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "நாகவல்லி'' தொடரில் ரக்தபீஜனாக நடிக்கிறார்.
சிவனின் கண்களை விளையாட்டாக பார்வதிதேவி மூட, அந்த நேரத்தில் உலகம் இருண்டு விடுகிறது. தன் தவறை பார்வதிதேவி உணரும்போது, அதை சரி செய்ய பார்வதிதேவியை பூமியிலேயே தங்குமாறு சிவன் கட்டளையிடுகிறார்.
கார்க்கோடனின் வீழ்ச்சி கண்டு மார்தட்டிக் கொள்ளும் பத்மாசூரன், காட்டில் ரிஷிபத்தினியாய் காட்சியளிக்கும் பார்வதிதேவியின் மேல் மோகம் கொள்கிறான்.
இந்த நிலையில், பல யுகங்களுக்கு முன் காளிதேவியால் வதம் செய்யப்பட்ட ரக்தபீஜனின் ஒரு துளி ரத்தம் பூமியின் பாறைகளுக்கு அடியில் உறைந்து போயிருக்க, தற்பொழுது பத்மாசூரனின் காலடிபட்டு அந்த ரத்த துளி மீண்டும் ரக்தபீஜனாக உருவெடுக்கிறான். தன்னை பூமியின் அடியிலிருந்து வெளிக்கொண்டு வந்த பத்மாசூரனுக்கு உதவ விழைகிறான். ரக்த பீஜனின் ஆர்ப்பாட்டங்கள் தொடர, தேவர்களும், முனிவர்களும் பூமியில் மனிதர்களுக்கு ஏற்படும் துன்பங்களை சிவனிடம் முறையிடுகின்றனர். சிவன் மண்ணுலகில் அவதரித்து பார்வதிதேவியை அடைந்து மண்ணுலக மாந்தர்களை காப்பாற்ற உறுதி கூறுகிறார்.
ரக்தபீஜன் வேடத்தில் பொன்னம்பலம் நடிக்கிறார். வருடன் காளிதாஸ், மோனாலிசா, நித்யா, அம்மு, வினோதினி, நேசன், விஜயகணேஷ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
பரபரப்பான சம்பவங்களை விறுவிறுப்பான காட்சிகளாக்கி நாகவல்லி தொடருக்காக இயக்கி வருகிறார் பி.எஸ்.தரன். மக்கள் தொடர்பு: ஜி.பாலன்
ஞாயிறுதோறும் இரவு 9.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகும் இத்தொடரை டிரேட் சேனல் நிறுவனத்தின் நிர்வாக தயாரிப்பில், யு டிவி தயாரிக்கிறது.
தினம் தினம் தீபாவளி
மெகா டிவியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது ``தினம் தினம் தீபாவளி'' தொடர்.
இந்தத் தொடரில் நளினி, சாதனா, `ஊர்வம்பு' லட்சுமி, சவுந்தர்யா, பாண்டு, குமரேசன், தாடி பாலாஜி, பயில்வான் ரங்கநாதன், விஸ்வேஸ்வர ராவ், கே.எஸ்.ஜெயலட்சுமி, லட்சுமி ராஜ் சுமங்கலி, கோகுல், வந்தனா, மாஸ்டர் சுஜீத், குள்ளமணி உட்பட பலர் நடித்துள்ளனர்.
கதை, இயக்கம்: கணேஷ் ராஜேந்திரன். வசனம்: எம்.பி.கார்த்திகேயன். ஒளிப்பதிவு: சூர்ய பிரகாஷ். இசை: தேவா. பாடல்: பா.விஜய், மக்கள் தொடர்பு: ஜி.பாலன்