Tuesday, November 10, 2015

பரபரப்பும் விறுவிறுப்புமான அதிரடிப் படம் ‘தகிடுதத்தோம்’ரஸ்டிக் டேய்ல்ஸ் என்டர்டெய்மெண்ட் பட நிறுவனம் சார்பில் அஜய் வாசுதேவ் பணிக்கர் தயாரிக்கும் படம் தகிடுதத்தோம்

சூது கவ்வும் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த யோக் ஜேப்பி முக்கிய வேடத்தில் நடிக்க அவருடன் பல விளம்பர படங்களில் நடித்த மும்பை அழகி அலீஸா கான், நாடோடிகள் பரணி, பிரமிட் நடராஜன், எம்.எஸ்.பாஸ்கர், கராத்தே ராஜா, ஆர்யன், கோவை சந்தானம் உட்பட பலர் நடித்துள்ளனர். 

ஜெய் கிருஷ்ணன் இயக்கும் இந்தப் படத்திற்கு அல் ஆலீஜ் இசையமைக்கிறார். டாக்டர் ராஜேஷ்.வி பாடல்கள் எழுத, எம்.ஜி.காளிதாஸ், உன்னி பாலடு இருவரும் ஒளிப்பதிவு செய்துள்ளனர். கே.ஜே.வெங்கட்ரமணன் படத்தொகுப்பு செய்ய, கலை இயக்கம் ராஜா. இணைத் தயாரிப்பு கார்த்திக் கண்டேரி, நவீன், பிரவீன் படிக்கேரியா.

ஒரு அனாதை ஆசிரமத்தின் இடத்தை காலி செய்ய ஐந்து கோடி ஒரு முக்கிய புள்ளிக்கு கிடைக்கிறது. அந்தப் பணம் திடீர் என்று காணாமல் போகிறது. அதை யார் எடுத்திருப்பார்கள் என்கிற விசாரணையில் ஒரு கணவன் மனைவி, ஒரு கேங்க்ஸ்டர் குழு, ஒரு அப்பாவி அனாதை ஆசிரம இளைஞன் ஆகியோரை சந்தேகப்பட்டு விசாரிக்கின்றனர். அந்தப் பணத்தை எடுத்தது யார்? பணத்தின் பின்னணி என்ன? அந்த ஆசிரம இடம் என்ன ஆகிறது? என்பது  கதை.  

ஒவ்வொரு காட்சியிலும் முடிச்சு மேல் முடிச்சு என்று சஸ்பென்ஸ் கலந்த யூகிக்க முடியாத பரபரப்பான திரைக்கதையுடன், விறுவிறுப்பான படமாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஜெய் கிருஷ்ணன். 

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றி பல இடங்களில் நடந்துள்ளது. கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள இயற்கை எழில் சூழ்ந்த பகுதிகளில் பாடல் காட்சிகளை படமாக்கியுள்ளனர்.

Friday, October 23, 2015

வாழ்வியலை சொல்லும் மாற்று சினிமா ‘பையன்’ஏ.டி.எம். புரொடக்ஷன்ஸ் சார்பில் டி.மதுராஜ் தயாரித்திருக்கும் படம் பையன்’. 

இந்தப் படத்தில் கதையின் நாயகனாக புதுமுகம் பைசல் நடிக்க, நாயகியாக புதுமுகம் ராகவி நடித்துள்ளார். பசங்க சிவக்குமார் முக்கிய வேடத்தில் நடிக்க, அவருடன் எம்.எஸ்.பாஸ்கர், அனுமோகன், சித்தன் மோகன், வடிவுக்கரசி, செந்தி, சுரெஷ், உதய்ராஜ், சந்துரு, ரஞ்சன், விஜய்கணேஷ், புலிப்பாண்டி, வி.ஜி.பி.கோவிந்தராஜ், பழனிவேல் கவுண்டர், உமா சங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர்.

பாலு மலர்வண்ணன் கதை எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு சாய்சூரஜ் சந்திரசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். பி.எஸ்.ராகுல் இசையமைக்க, பாடல்களை மதுராஜ், சாகுல், வேணுஜி ஆகியோர் எழுதியுள்ளனர். ரமேஷ் ரெட்டி நடனம் அமைக்க, சேவியர் திலக் படத்தொகுப்பு செய்துள்ளார்.

திருத்துறைப்பூண்டி, வடசங்கந்தி, சேலம், ஈரோடு, பவானி, ஊராட்சிக் கோட்டை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது.

வழக்கமான படம் என்பதை தாண்டி மக்களின் வாழ்க்கையில் இருந்து கதை எடுத்து படமாக்கியுள்ளார் இயக்குனர் பாலு மலர்வண்ணன். இயல்பான காட்சிகளுடன் உருவாக்கியுள்ள இந்தப் படம் ஒரு மாற்று சினிமாவாக, வாழ்வியல் படமாக இருக்கும் என்கிறார் இயக்குநர் பாலு மலர்வண்ணன்.  

பெற்றோரை விட்டு பிரிந்து நிற்கும் பெரியமனிதத்தனம், காதல் முளைக்கும் காலம், நட்பின் புரிதல்கள், தன் சொந்தக் காலில் நிற்க ஆசைப்படும் சுயம் என்றெல்லாம் ஒரு பையன் வாழ்வில் சந்திக்கும் அனுபவங்களை வாழ்வியலாக சொல்லி இருக்கிறேன். இது படம் பார்ப்பவர்களுக்கு தங்களது அனுபவத்தை பெறுவது போல இருக்கும் என்கிறார் இயக்குநர் பாலு மலர்வண்ணன்.