Wednesday, July 16, 2014

கமல் படத்தில் சித்ரா லட்சுமணன்

கமல்ஹாசனின் பி.ஆர். வாக  உத்தம வில்லன் திரைப்படத்தில் நடிக்கிறார் சித்ரா லட்சுமணன்.  கமல்ஹாசனின் நெருங்கிய நண்பரான இவர் ஆரம்ப நாட்களில் கமல்ஹாசனுக்கு பி.ஆர். வாக  பணியாற்றியவர். பின்னர் கமல்ஹாசன் நடிக்க சூரசம்ஹாரம் என்ற திரைப்படத்தை எழுதி இயக்கி தயாரித்த இவர் உத்தம வில்லன் திரைப்படத்தில் கமல்ஹாசனின் பி.ஆர். வாக நடிக்கிறார்.

கமல்ஹாசன் பூஜா குமார் ஆண்டிரியா இயக்குனர் கே விஸ்வநாத், கே பாலசந்தர் ஆகியோரோடு இவர் நடித்த காட்சிகள் சமீபத்தில் சென்னையில் படமாக்கப்பட்டன.

சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் அரண்மனை திரைப்படத்தில் அரண்மனைக்கு சொந்தக்காரராக ஒரு முக்கியமான வேடத்தில் நடித்திருக்கும் இவர், ஜெகதீஷ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்நயன்தாரா இணைந்து நடிக்கும் நண்பேண்டா படத்தில் சந்தானம் பணியாற்றும் ஓட்டலின்  முதலாளியாக நடித்துள்ளார்

சேதுசந்தானம் நடிக்க சாய் கோகுல் ராம்னாத் இயக்கும் வாலிப ராஜா திரைப்படத்தில் சேதுவின் தந்தையாக நடிக்கும் இவர் அப் படத்தில் ஏற்றுள்ள பாத்திரத்தின் பெயரும் சித்ரா லட்சுமணன்தான்

Tuesday, March 18, 2014

மைக்கேல் ஜாக்சன் கெட்டப்பில் கானா பாலா ஆடிப் பாடிய பாடல்



மொழிவது யாதெனில் படத்திற்காக படமானது

மொழிவது யாதெனில் படத்தில் கானா பாலா
யவராஸ் இண்டெர்நேஷனல் சார்பாக கே.ஆர்.மாணிக்கவாசகம், குட் டைம் ஃபிலிம் எண்டேர்டைமெண்ட் சார்பாக நசியனூர் பழனிச்சாமி, எஸ்.வி.தீபா ராணி ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் மொழிவது யாதெனில்’.

இந்தப் படத்தில் பின்னணி பாடகர் எஸ்.என்.சுரேந்தரின் மகன்  விராஜ், ராஜன், ரியாஷ், தேஜ், மீனு கார்த்திகா, லஸ்யா, பாலு ஆனந்த், தேனி முருகன், அஞ்சலிதேவி உட்பட பலர் நடிக்க, கதை எழுதி இயக்கி உள்ளார் எஸ்.கோபாலகிருஷ்ணன்.

இந்தப் படத்துக்காக நித்யன் கார்த்திக் இசையமைபில் நிகரன் எழுதிய ‘’அட்டக்கத்தி... மொக்க பீசு.... வெத்துவேட்டு... சப்பகேசு...’’ என்கிற பாடலை கானா பாலா பாடியதுடன், படத்தில் அந்தப் பாடலுக்கு மைக்கேல் ஜாக்சன் கெட்டப்பில் ஆடிப் பாடி நடித்திருக்கிறார். இதற்கு தம்பி சிவா நடனம் அமைக்க,  ராஜபாண்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இசையமைப்பாளர் நித்யன் கார்த்திக்
இந்தப் பாடல் பற்றி இசையமைப்பாளர் நித்யன் கார்த்திக் கூறுகையில், இப்போது வரும் படங்களில் கானா பாலா, தவறாமல் ஒரு பாடலை பாடி நடித்து விடுகிறார். கானா பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரிய எதிர்ப்பார்ப்பை அவரது பாடல்கள் உருவாக்கி தருகிறது.

அதே போல மொழிவது யாதெனில் படத்தில் கானா பாலாவுக்காக ஒரு பாடலை பிரத்யேகமாக வெஸ்டர்ன் போக்கில் உருவாக்கி, அவரை பாட வைத்தோம். நிகரன் எழுதிய ‘’அட்டக்கத்தி... மொக்க பீசு.... வெத்துவேட்டு... சப்பகேசு...’’ என்கிற வரிகளில் துவங்கும் அந்தப் பாடலை கானா பாலா பாடியதுடன், படத்தில் அந்தப் பாடலுக்கு மைக்கேல் ஜாக்சன் கெட்டப்பில் ஆடிப் பாடி நடித்திருக்கிறார். 

இந்தப் பாடல் அவருடைய பாடல்களில் மிகவும் முக்கியமானதாக இருக்கும்... என்றார். 

இசையமைப்பாளர் நித்யன் கார்த்திக் மொழிவது யாதெனில் படத்தை தொடர்ந்து தற்போது அக்னி’, திரைப்படநகரம்’, அலிச்சாட்டியம்’, நெடும்பாறைக்காடு’, மெழுகு’, வினு என ஒன்பது படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

MORE STILLS




Saturday, January 25, 2014

‘மொழிவது யாதெனில்’

யவராஸ் இண்டெர்நேஷனல் சார்பாக கே.ஆர்.மாணிக்கவாசகம், குட் டைம் ஃபிலிம் எண்டேர்டைமெண்ட் சார்பாக நசியனூர் பழனிச்சாமி, எஸ்.வி.தீபாராணி ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘மொழிவது யாதெனில்’.

முழுக்க முழுக்க நட்பை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தின் கதை எழுதி இயக்கி உள்ளார் எஸ்.கோபாலகிருஷ்ணன். இதில் கதாநாயகனாக பின்னணி பாடகர் எஸ்.என்.சுரேந்தரின் மகன்  விராஜ் நடிக்கிறார். இவர் குழந்தை நட்சத்திரமாக அந்நியன் படத்தில் சிறு வயது ‘அம்பி’ விக்ரம் வேடத்தில் நடித்தவர். மேலும் சில படங்களில் சிறுவனாக நடித்து பாராட்டு பெற்றவர், முதன்முறையாக இந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

இவருடன் ராஜன், ரியாஷ், தேஜ், மீனு கார்த்திகா, லஸ்யா, பாலு ஆனந்த், தேனி முருகன், அஞ்சலிதேவி உட்பட பலர் நடிக்க, கவுரவ வேடத்தில் எஸ்.என்.சுரேந்தர் நடிக்கிறார். கானா பாலா ஒரு பாடலை பாடி நடிக்கிறார்.

நித்யன் கார்த்திக் இசையமைக்க, ராஜபாண்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘தம்பி’ சிவா நடனம் அமைக்க, ‘மிரட்டல்’ செல்வா சண்டை பயிற்சி அமைத்திருக்கிறார். திரைக்கதை, வசனத்தை இசையமைப்பாளர் நித்யன் கார்த்திக், இயக்குனர் எஸ்.கோபாலகிருஷ்ணன் இருவரும் இணைந்து எழுதி உள்ளனர். படத்தொகுப்பு வில்சி.

படம் பற்றி இயக்குனர் எஸ்.கோபாலகிருஷ்ணன் கூறுகையில், “உயிரை காப்பாற்றிய நண்பனின் கடனுக்காக, தங்களது வாழ்க்கையையே தியாகம் செய்யும் இரண்டு நண்பர்களின் கதை. அதை நகைச்சுவை மற்றும் கமர்ஷியல் படமாக உருவாக்கி வருகிறேன். ஈரோடு, பாண்டிச்சேரி, சென்னை ஆகிய இடங்களில் படமாக்கியிருக்கிறேன். பொழுதுபோக்கு அம்சம் உள்ள இந்தப் படம் விரைவில் திரைக்கு வரும்” இவ்வாறு தெரிவித்தார். .