Wednesday, December 11, 2013

டிரம்மாலயாவுக்கு பாராட்டு!தி.நகர் அபிபுல்லா சாலையில் உள்ள கர்நாடக அரங்கில் சிறுவர், சிறுமிகள் கலந்துகொண்ட டிரம்ஸ் மற்றும் பாடல் பாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஐந்து வயது முதல் பதினைந்து வயதுள்ள சிறுவர், சிறுமியர் பாட்டு போட்டியிலும், ஐந்து வயது முதல் இருபத்தி ஐந்து வயது வரையிலான சிறுவர், சிறுமிகள் டிரம்ஸ் போட்டியிலும் கலந்து கொண்டனர். 

ஆட்டம் பாட்டம் என சிறுவர், சிறுமியினர் தங்களது திறமையை வெளிப்படுத்தி விழாவுக்கு வந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர். 

திரை இசை உலகில் டிரம்ஸ் வாசிப்பதில் பெயரெடுத்த கோபால் என்பவர் நடத்தும் டிரம்மாலயா ஸ்கூலின் 12-வது ஆண்டு விழாவில்தான் இந்த பாட்டு மற்றும் டிரம்ஸ் போட்டி நடைபெற்றது. இதில் ஸ்கூலில் படிக்கும் மாணவ மாணவிகள் அனைவரும் பங்கேற்று சிறப்பித்தனர் 
 
இவ்விழாவில் முன்னாள் நீதிபதி பாஸ்கரன், நடிகை நளினி, நகைச்சுவை நடிகை மதுமிதா, இசையமைப்பாளர் வீ.தஷி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறுவர், சிறுமிகளை உற்சாகப் படுத்தி, அவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்கள். 

மாணவர்களின் திறமையை வளர்க்கும் டிரம்மாலயம் ஸ்கூலின் நிர்வாகி கோபாலுக்கு கேடயம் வழங்கி கவுரவிக்கப்பட்டது 

ஸ்ரீகிருஷ்ணா திரைக்கூடம் ’அக்னி’காதலால் தன்னிலை இழக்கும் இளைஞன்

ஸ்ரீகிருஷ்ணா திரைக்கூடம் சார்பில் பி.எஸ்.குருநாதன் தயாரிக்கும் படம் ’அக்னி’. இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடலகள் எழுதி இயக்குவதுடன் கதாநாயகனாகவும் அறிமுகமாகி உள்ளார் ஏ.ஜே.ஆர்.ஹரிகேஸவா.
           
கவின்ஸ்ரீ கதாநாயகியாக நடிக்க, ராஜா, பழனி, பாஷா, சதீஷ், செல்வம், மதன், ப்ரியா என பலர் நடித்துள்ளனர். புதியவர் ஆஷிக் ஒளிப்பதிவு செய்ய, நித்யன் கார்த்திக் இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் யாரும் காதலிக்காதீர்கள் என்று சொல்ல வரும் படமாம். படம் பற்றி இயக்குனர் கூறுகையில், “காதல் என்ற பெயரில் காமம் தன்னை நியாயப் படுத்திக்கொள்கிறது. காதல் என்ற பெயரில் காமம்தான் நடக்கிறது. ஒரு பெண்ணை காதலிக்கும் இளைஞ்னை, அந்தப் பெண் புறக்கணித்து விடுகிறாள். அதனால் தன்னிலை இழக்கும் அவன் காதல் என்ற பெயரில் காமகளியாட்டம் நடத்தும் பெண்களை தேடி பிடித்து விதம் விதமாக கொள்கிறான். அதை விறுவிறுப்பாகவும் பரபரப்பகவும் சொல்கிறேன் என்கிறார் இயக்குனர் ஏ.ஜே.ஆர்.ஹரிகேஸவா.

காங்கேயம், கொடுமுடி, மணல்மேடு என ஈரோடு மாவட்டத்தில் பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது

பேய் நடமாடும் பகுதி


ஏ.டி.எம்.புரொடக்சன்ஸ் மதுராஜ் வழங்க, அக்னி மீடியா பட நிறுவனம் சார்பில் எம்.ஞானசேகரன் தயாரிக்கும் படம் பேய் நடமாடும் பகுதி’.
இந்தப் படத்தில் ரகுவண்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, ஐஸ்வர்யா, மைதானம்சிவா, மஞ்சு, அர்ச்சனா உட்பட பலர் நடித்துள்ளனர். 

இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி உள்ளார் செங்குட்டுவன். ஜே.டி.செந்தில்ராஜ் இசையமைக்க, சிவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு – துரைராஜ்.

ஏற்காடு மலைக்கு சுற்றுலா செல்லும் சில காதலர்கள் தொடர்ந்து மர்மமான முறையில் இறக்கின்றனர். ஒரு பேய் அந்த கொலைகளை செய்வதாக அங்கு உள்ளவர்கள் நம்புகின்றனர். இது பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக அங்கு ரகுவண்ணன் செல்கிறார்.


அங்கு அவருக்கு ஏற்படும் திடுக், பகீர் அனுபவங்களை திகில் சஸ்பென்ஸ் கலந்த படமாக இயக்கி உள்ளார் இயக்குனர் செங்குட்டுவன். 

திருப்பங்கள் நிறைந்த விறுவிறுப்பான இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் ஏற்காடு மலையில் படமாகி உள்ளது. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் வேலைகள் நடைபெற்று வருகிறது. பிப்ரவரியில் திரைக்கு வரும் என்கிறார் இயக்குனர் செங்குட்டுவன்.