Friday, May 20, 2011

நடி‌கர் அருண்பாண்டியன் வெற்றி

பேராவூரணி தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் நடிகர் அருண்பாண்டியன் 51010 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் மகேந்திரன் 43816 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். 7194 வாக்குகள் வித்தியாசத்தில் அருண் பாண்டியன் வெற்றி பெற்றார்.

அவருக்‌கு தி‌ரை‌ப்‌பட மக்‌கள்‌ தொ‌டர்‌பா‌ளர்‌ யு‌னி‌யன்‌ சா‌ர்‌பி‌ல்‌ வா‌ழ்‌த்‌து தெ‌ரி‌வி‌த்‌த போ‌து எடுத்‌த படம்‌.

நடிகர் சரத்குமாருக்‌கு வா‌ழ்‌த்‌து

தென்காசி தொகுதியில் போட்டியிட் நடிகர் சரத்குமார் வெற்றி பெற்றார். சரத்குமார் 92,253 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கருப்புசாமி பாண்டியன் 69,286 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். வித்தியாசம் 22,967 வாக்குகள் வித்தியாசத்தில் சரத்குமார் வெற்றி பெற்றுள்ளார்.

அவருக்‌கு தி‌ரை‌யு‌லகி‌னர்‌ வா‌ழ்‌த்‌து தெ‌ரி‌வி‌த்‌து வருகி‌ன்‌றனர்‌. தி‌ரை‌ப்‌பட மக்‌கள்‌ தொ‌டர்‌பா‌ளர்‌ யூ‌னி‌யன்‌ சா‌ர்‌பி‌ல்‌ நடி‌கர்‌ சங்‌கம்‌ செ‌ன்‌று அவரை‌ சந்‌த்‌தித்‌து வா‌ழ்‌த்‌து தெ‌ரி‌வி‌த்‌தோ‌ம்‌. சரத்‌குமா‌ர்‌ நடி‌த்‌த தெ‌ன்‌கா‌சி‌பட்‌டணம்‌, பா‌றை‌, கம்‌பீ‌ரம்‌, ஏய்‌ போ‌ன்‌ற படங்‌களுக்‌கு நா‌ன்‌ மக்‌கள்‌ தொ‌டர்‌பா‌ளரா‌க பணி‌யா‌ற்‌றி‌ இருக்‌கி‌றே‌ன்‌.

எதி‌ர்‌கட்‌சி‌ தலை‌வர்‌ வி‌ஜயகா‌ந்‌த்‌

ரிஷிவந்தியம் தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிட்டார். இதில் 91,194 வாக்குகள் பெற்று விஜயகாந்த் வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் சிவராஜ் 60,369 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். 30375 வாக்குகள் வித்தியாசத்தில் விஜயகாந்த் வெற்றி பெற்றுள்ளார். எதி‌ர்‌க்‌கட்‌சி‌ தலை‌வரா‌கவு‌ம்‌ அமரப்‌போ‌கி‌றா‌ர்‌.

அவருக்‌கு தி‌ரை‌யு‌லகி‌னர்‌ வா‌ழ்‌த்‌து தெ‌ரி‌வி‌த்‌து வருகி‌ன்‌றனர்‌. தி‌ரை‌ப்‌பட மக்‌கள்‌ தொ‌டர்‌பா‌ளர்‌ யூ‌னி‌யன்‌ சா‌ர்‌பி‌ல்‌ வா‌ழ்‌த்‌து கூற செ‌ன்‌ற போ‌து நலம்‌ வி‌சா‌ரி‌த்‌தா‌ர்‌ கே‌ப்‌டன்‌. அவரது தை‌ரி‌யம்‌ நம்‌பி‌க்‌கை‌ வளர்‌ச்‌சி‌ முன்‌னே‌ற்‌றம்‌ பற்‌றி‌ வி‌யந்‌து பா‌ரா‌ட்‌டி‌ வந்‌தே‌ன்‌.

ஷகீ‌லா‌ பா‌டி‌ய குத்‌துப்‌பா‌ட்‌டு!

சத்ய சாய் கிரியேஷன்ஸ் சார்பில் ஏ.லஷ்மண்ராவ், பி.சீனிவாசராவ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் ‘சண்முகிபுரம்’. இந்தப் படத்தில் மனோஜ் கதாநாயகனாக நடிக்க, அவருடன் அந்த்ர விஸ்வாஸ், ஷாதிகா இருவரும் நாயகிகளாக நடிக்க என்.ஆர்.என்.செழியன் டைரக்ஷன் செய்கிறார்.

இந்தப் படத்தின் பாடல் பதிவு ஏ.வி.எம். ஸ்டுடியோவில் உள்ள ‘ஜி’ தியேட்டரில் நேற்று முன்தினம் (ஏப்.16) காலை நடைபெற்றது. இந்த படத்தில் இடம் பெறும் “சொடக்கு போடு சொடக்கு போடு சொர்னாக்கா…. மடக்கி போடு மடக்கி போடு மங்காத்தா…” என்கிற பாடலை நடிகை ஷகிலா பாடினார். அவருடன் இணைந்து பாடகி அமிர்தா, சலோனி இருவரும் சேர்ந்து பாடினார்கள்.

இந்தப் பாடலை பாடலாசிரியர் விஜய்கிருஷ்ணா எழுத, வீ. தஷி இசையமைத்தார். மேலும் பட்டுக்கோட்டை சண்முகசுந்தரம், தாணுகார்த்திக், கவிஞர் கணேசன் ஆகியோர் பாடல்கள் எழுதுகின்றனர்.

இம்மாதம் இறுதியில் படப்பிடிப்பு தொடங்குகிறது. சென்னை மற்றும் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இந்தப் படத்திற்கு கெளதம் கதை எழுத, ஆதி ஒளிப்பதிவு செய்கிறார். பத்ரன் படத்தொகுப்பை கவணிக்கிறார். செந்தாமரை சுரேஷ் நடனம் அமைக்கிறார். ஒரு பாடலுக்கு ஷகிலா நடனம் ஆடுவதோடு, நகைச்சவை கலந்த ஒரு கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்.

இந்தப் படத்தில் நடிப்பது பற்றி நடிகை ஷகிலா கூறுகையில், சத்ய சாய் கிரியேஷன்ஸோட சண்முகிபுரம் படத்தில் இப்போ நடிக்கப் போறேன். இந்தப் படத்துல வித்தியாசமான காமெடி காட்சிகள் எனக்கு சொல்லிருக்காங்க. இந்தப் படத்திலேந்து காமெடியில் ஒரு பிரேக் எதிர்பார்க்கிறேன்.

இந்தப் பத்தின் பாடல்கள் ரொம்ப நல்லா வந்திருக்கு. இதுல ஒரு பாடலில் நான் ஆரம்பதில் நடிக்கிறேன். அதன் பிறகு வேறு நடிகை நடிப்பாங்க. அந்த பாடலில் நானே பாடி நடிச்சா நல்லா இருக்கும்னு டைரக்டர் செழியன் விரும்பினார். அதனால் பாடி பார்க்கலாம்னு டிரைப் பண்ணுனோம். எப்படி வந்திருக்குன்னு தெரியலை. நான் துவக்கி வைக்கிற இந்தப் பாடலில் எனக்கு பிறகு அமிர்தா என்கிற பொண்ணு பாடுறாங்க. இந்தப் படத்தோட மியூசிக் டைரக்டர் தஷி, அவர் இசையமைத்த முதல் மலையாள படத்திற்கே இசைக்காக விருது வாங்கினவர். அவர் இசையில் பாடியது சந்தோஷமா இருக்கு” என்றார்

தொடர்ந்து பாட்டு பாட வாய்ப்பு கிடைத்தால் பாடுவீங்களா?

முதன் முதலா டிரைப் பண்ணிருக்கேன். குரல் நல்லா இருக்குன்னு சொல்லிருக்கிறார். டிரைப் பண்ணுவோம். இந்தத் துறையையும் ஏன் விட்டு வைக்கனும். நடிக்கச் சொன்னால் நடித்துவிடலாம். ஆனால் பாடுறது கஷ்டம்தான்.

வேறு என்ன படங்களில் நடிக்கிறீர்கள்?

தமிழ்ல ரெண்டு மூணு படம் போய்கிட்டு இருக்கு. பேரு மட்டும் கேட்காதீங்க. மைண்ட்ல நிக்காது. நானே கிளாப் போர்டு பார்க்கும் போதுதான், ஓ இந்தப் படம் என தெரிஞ்சுக்குவேன். மத்தபடி கால்ஷீட்மேனஜர் சொன்னா சூட்டிங் போய்டுறதுதான். தமிழ் தவிர கன்னடத்துல அஞ்சு படம் பண்ணிக்கிட்டு இருக்கேன். இதுல சாது காக்கிலாவோட ரெண்டு படம் அவர் காம்பினேஷன்ல பண்றேன். நயன்டி குடி பல்டி அடி என்கிற படத்துல பெரிய ரோல். பாஸ் என்கிற பாஸ்கரன் படம் கன்னடத்துல ரீமேக் பண்றாங்க. அதுல தமிழ்ல நடிச்ச அதே ரோல் பண்றேன். இதுத தவிர மலையாளத்தில் ரெண்டு படத்துல நடிக்கிறேன்.

மலையாளத்தில் நடிக்கிறீங்களா?

ஆமாம். மலையாளத்துல கிட்ட தட்ட ஏழு வருடத்திற்கு பிறகு தேஜா பாய் என்கிற படத்தில், சுராஜ் சார் காம்பினேஷன்ல நடிச்சுக்கிட்டு இருக்கேன். பிரிதிவிராஜ் முக்கிய வேடத்தில நடிக்கிற படம் இது. ரொம்ப ரொம்ப முக்கிகியமான ரோல். இப்போது அங்கே நிறைய கமர்சியல் படங்களுக்கு கேட்கிறாங்க. எனக்கு கேரக்டர் ரோல் தருறாங்க. சந்தோஷமா இருக்கு…” என்றார்.

கே பாலச்சந்தருக்கு பால்கே விருது !

நாட்டின் மிக உயர்ந்த கவுரவமான தாதா சாகேப் பால்கே விருது பெற்ற இயக்குநர் கே பாலச்சந்தருக்கு நாடு முழுவதிலுமிருந்து பாராட்டுக்களும் வாழ்த்துகளும் குவிகின்றன.

இந்திய திரைப்பட துறையின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் பாலச்சந்தரின் பங்களிப்புக்காக வழங்கியதற்காக இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. பாலச்சந்தருக்கு தங்க தாமரையும், ரூ. 10 லட்சம் ரொக்கமும் வழங்கப்படும்.

விருது பெற்றது குறித்து பாலச்சந்தர் கூறும்போது, “சிவாஜிக்கு பிறகு எனக்கு இவ்விருது கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்விருதை தமிழ் ரசிகர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்”, என்றார்.

ராணா படப்பிடிப்பு துவக்கிழாவில் பாலச்சந்தர் கலந்து கொண்டபோதுதான் இந்த செய்தி வெளியானது. உடனே, படக்குழுவினர் அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

ரஜினி முதல் ஆளாக பாலச்சந்தருக்கு வாழ்த்துத் தெரிவித்தார். இந்த விருது மூலம் தமிழ் சினிமாவையே பெருமைப்படுத்திவிட்டார் கேபி சார், என்றார் ரஜினி.

பாலச்சந்தருக்கு இவ்விருது தாமதமாக கிடைத்துள்ளது. விருது கமிட்டியில் நான் இருந்திருந்தால் ஏக் துஜே கேலியே படத்துக்கு முன்பே கொடுத்திருப்பேன். விருது கொடுத்த இந்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்றார்.

நடிகர் பிரகாஷ்ராஜ் கூறும்போது, இயக்குனர் பாலச்சந்தருக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருது கிடைத்ததன் மூலம் அவ்விருதுக்கு அழகும் அர்த்தமும் கிடைத்துள்ளது. நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். இந்த கவுரவத்தால் திரையுலகமே பெருமை பெற்றுள்ளது, என்றார்.

மேலும், திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன், பிலிம் சேம்பர் முன்‌னா‌ள்‌ தலைவ்ர கேஆர்ஜி, பெப்ஸி தலைவர் விசிகுகநாதன் உள்ளிட்ட அனைத்து சினிமா சங்க தலைவர்களும் பாலச்சந்தருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடத் திரையுலகினர் பாலச்சந்தருக்கு பாராட்டு தெரிவித்தனர்.பால்கே விருது பெற்ற பாலச்சந்தருக்கு அனைத்து மொழி சினிமா கலைஞர்களும் பங்கேற்கும் விதத்தில் விரைவில் பாராட்டு விழா நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.


பிரபுவுக்கு டாக்டர் பட்டம்

நடிகர் பிரபு, இசையமைப்பாளர் கங்கை அமரன், விஞ்ஞானி சுந்தரேஷ் ஆகியோருக்கு டாக்டர் பட்டத்தை சத்திய பாமா பல்கலைக் கழக வேந்தர் ஜேப்பியார் வியாழக்கிழமை வழங்கினார்.

சென்னை சோழிங்கநல்லூர் சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் 20-வது பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவில் டாக்டர் பட்டத்தைப் பெற்றுக்கொண்ட நடிகர் பிரபு பேசியதாவது. மாணவர் பருவம் ஓவ்வொருவர் வாழ்க்கையிலும் மறக்க முடியாதது. இந்த பருவத்தில் தான் நீங்கள் பல்வேறு துறைக்கும் சென்று உங்கள் திறமையை வெளிப்படுத்துகிறீர்கள்.

ஆகவே, நீங்கள் வாழ்க்கையில் சாதனை படைக்க உங்கள் பல்கலைக்கழகவேந்தர் ஜேப்பியாரை நினைத்தால் நீங்கள் அவரைப் போல் சாதனை படைக்க முடியும் என்றார்.

விழாவில் இசையமைப்பாளர் கங்கை அமரன் பேசியதாவது:

ஒவ்வொரு மாணவர்களும் பட்டங்களை பெறும்போது தனது அம்மாவை நினைத்துப் பார்க்க வேண்டும். எல்லோருடைய வெற்றிக்கும் முதல் கடவுள் அம்மாதான். நானும், எனது அண்ணன் இளையராஜாவும் பெற்ற வெற்றிக்கு காரணம் என் அம்மாதான். இப்பொழுது வழங்கப்பட்ட டாக்டர் பட்டத்தின் புகழும் எனது அம்மாவையேச் சேரும் என்றார் கங்கை அமரன்.

விழாவில் டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானி மற்றும் தலைமை கட்டுப்பாட்டு அதிகாரி சுந்தரேஷ் பேசியதாவது: மாணவர்கள் ஆராய்ச்சியில் கவனம் செலுத்தவேண்டும். நீங்கள் ஆராய்ச்சி செய்தால் தான் இந்தியா பல்வேறு துறைகளிலும் முன்னேற முடியும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் 3,485 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

நடிகர் பிரபு, இசையமைப்பாளர் கங்கை அமரன், விஞ்ஞானி சுந்தரேஷ் ஆகியோருக்கு கெüரவ டாக்டர் பட்டங்களை வழங்கினார் பல்கலைக் கழக  வேந்தர்  ஜேப்பியார்.