Friday, August 21, 2009

முதலில் ரொமான்ஸ், அப்புறம் ஆக்‌ஷன்! ''வைகை'' பாலா!


மானாட மயிலாட நிகழ்ச்சியில் மிகச்சிறந்த பர்பார்மன்ஸுக்காக முதல் பரிசு வாங்கியவர் பாலா. அவர் தற்போது ''வைகை'' படத்தின் மூலம் கதாநாயகனாக அவதாரம் எடுத்திருக்கிறார். இந்த வாய்ப்பும் அனுபவமும் எப்படி இருந்தது என்பதை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.
வைகை படத்தின் வாய்ப்பு எப்படி அமைந்தது?
நான் மாடலிங் செய்து கொண்டிருந்த போது நாகரீககோமாளி படத்துக்கு அழைத்தார்கள். அந்தப் படத்தில்தான் முதலில் கதாநாயகனாக நடித்தேன். அந்தப் படத்துக்குப் பிறகு ஒன்றை வருடம் இடைவெளி விழுந்துட்டு. நல்ல புராஜக்ட் எதுவும் அமையல. பிறகு கண்ணும் கண்ணும் நோக்கியா என்று ஒரு படம் பண்ணுனேன். அந்த புராஜக்ட் அறுபது சதவீதத்தோட நின்னுப் போச்சு. அதுக்குப் பிறகு ஒரு வருடம் கலா மாஸ்டரிடம் டான்ஸ் பயிற்சிக்கு போனேன். அவுங்க மானாட மயிலாட நிகழ்ச்சியை துவங்கும் போது அதுல கலந்துக்கச் சொன்னாங்க. இதுல டான்ஸ் பண்ணு. இது முடியிறதுக்குள்ள உனக்கு வாய்ப்பு அமையும்னு. அவுங்க சொன்ன மாதிரி அவுங்களோட நம்பிக்கை இந்த வைகை படம் மூலமா பலித்துவிட்டது. செமி பைனல்ல இருக்கும் போது இந்த வைகை படத்தோட டைரக்டர் சுந்தரபாண்டி என்னை அனுகி இந்தப் படத்தில் நடிப்பதற்கு அழைத்தார். என்னோட தேதிகளை சரிசெய்து கொடுத்து நடித்தேன். இதோ படம் உங்க முன்னால வந்தாச்சு.

உங்கள் தந்தை பெரிய தொழிலதிபர். அப்படி இருக்கும் போது சொந்த படத்தில் நடித்தோ,அல்லது பணத்தை செலவு செய்தோ நடிகராக இறங்கியிருக்கலாமே?
என்னிடம் திறமை இருக்குன்னு எங்க அப்பா முன்பே உணர்ந்திட்டார். அதனால பையன் முட்டி மோதி எப்படியாவது மேலா வந்திடுவான்னு அவருக்கு நம்பிக்கை. அதனால அவர் ஆரம்பத்திலேயே அதாவது ஐந்து வருடத்துக்கு முன்பே என்னிடம் ''நீ எத்தனை வருஷம் கஷ்டப்பட்டாலும் சினிமாவுக்காக என்னிடம் வந்து நீ பத்து பைசா கேட்டாலும் நான் கொடுக்க மாட்டேன். நீ வேற தொழில் செய்றதா இருந்தால் மட்டும் சொல்லு பணம் தர்றேன்னு சொல்லிவிட்டார். சினிமாவில் வெற்றி பெற்றவர்கள் எல்லாம் திறமையை வைத்து வந்தார்கள். அதுக்குப் பிறகு தான் அவர்களிடம் பணம் வந்ததுன்னு முன் உதாரணம் சொன்னார். ஆனால் நீ சினிமாவில் ஜெயிக்கிறதுக்காக எத்தனை வருஷம் வேணும்லாலும் உழை, கஷ்டப்படு, என சுதந்திரம் கொடுத்தார். சாதிச்ச பிறகு வந்து என்கிட்டே பேசன்னு சொன்னார். அதனால இன்னைய வரைக்கும் நான் அவரிடம் பேசல. சாதிச்ச பிறகு பேசுவேன்.
வைகை படத்தில் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?
ரொம்ப ரொம்ப சூப்பரான அனுபவம். அந்த கதாபாத்திரத்துக்காகத்தான் என்னை தேர்த்தெடுத்தார்கள். நான் நல்ல டான்ஸ் ஆடுவேன். ஆனால் நடிப்பு என்கிற போது அந்த கேரக்டர் எப்படி பேசணுமோ, எப்படி இருக்குமோ அது மாதிரி இருக்கணும்னு டைரக்டர் ஆரம்பத்திலேயே சொல்லிட்டார். அதை செய்ய நான் நிறைய உழைக்க வேண்டியதா இருக்கும்னு நினைத்தேன். ஆனால் அப்படி உழைக்க டைரக்டர் பெரிய உதவியா இருந்தார். அந்த கதாபாத்திரம் சரியான படி தெரியனும்னு எந்த இடத்துலேயும் ஓவர் ஆக்டிங் இல்லாமல், எங்கேயும் கம்மியாவும் இல்லாமல் இருக்கனும்னு வேலை வாங்கினார். அது அவரிடம் இருந்து வந்த கதாபாத்திரம். அதை நான் வெளிப்படுத்திருக்கேன். மத்தபடி அதைப் பற்றி ரசிகர்கள்தான் சொல்லனும்.
ரகசியா பெரிய டான்ஸர். அவுங்க கூட சேர்ந்து ஆட்டம் போட்டிருந்தீங்களே?
அந்த அனுபவம் எப்படி?
பயங்கர அனுபவம். அவுங்க ரிகர்சல் கூட எடுத்துக்க மாட்டேனுட்டாங்க. மாஸ்டரோட அசிஸ்டென்ட் ஆடுறதை பாப்பாங்க. அப்படியே டேக் போயிடலாம்பாங்க. அவுங்க கூட ஆடும்போது ரீடேக் வாங்க கூடாதுன்னு நினைப்பேன். அவுங்க புதுமுகம்னு நினைக்காமல் பிரண்ட்ஸா ஆடுனாங்க. எனக்கு பயம் போச்சு. நானும் நல்லா பர்பாம் பண்ண முடிஞ்சிது. இங்கே திறமைதான் முக்கியம்.
காதல், ரொமான்ஸ், ஆக்‌ஷன் இதுல எந்த மாதிரி ஹீரோவா வர வேண்டும் என ஆசைப்படுகிறீர்கள்?

எனக்கு ஆக்ஷன் ஹீரோவாக ஆகனும்னு தான் ஆசை. எப்போ நடிக்கனும்னு ஆசைப்பட்டேனோ, அன்னையிலேர்ந்து ஆக்ஷன் படங்கள்தான் பிடிக்கும். அதே மாதிரி ஆக்ஷன் படத்துல நடிக்கனும்னு தான் ஆசை. நான் உடனே ஆக்ஷன் ஹீரோவாக வர முடியாது. ரெண்டு, முணு படம் காதல் ரொமான்ஸ் என பன்னிட்டு, பிறகு அதிக மக்களை சென்றடைந்த பிறகு ஆக்ஷனை கையில் எடுக்கனும். எல்லாம் ரசிகர்கள் கொடுக்கிற வரவேற்ப்புல தான் இருக்கு.
மறுபடியும் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று நடனம் ஆடுவீங்களா?
இப்போது கூட ரெண்டு நிகழ்ச்சிகளுக்கு கூப்பிட்டாங்க. இப்போ முணு பட வாய்ப்பு இருப்பதால அதுக்கு நேரம் ஒதுக்க முடியல. அதனால வேண்டாம்னு சொல்லிட்டேன். என்னோட வளர்ச்சியில் கலா மாஸ்டருடைய பங்கு நிறைய இருக்கு. அதை மறக்க மாட்டேன்

பொ‌றி‌யி‌யல்‌ கல்‌லூ‌ரி‌ மா‌ணவர்‌கள்‌ பத்‌து பே‌ர்‌ கதா‌நா‌யகனா‌க அறி‌முகமா‌கும்‌ ‌‌ "உன்‌ வருகை‌க்‌கா‌க ஆனந்‌தி‌..."


ஸ்ரீதன்‌வந்‌தரி‌ பி‌லி‌ம்‌ஸ்‌ சா‌ர்‌பி‌ல்‌ மதன்‌, வெ‌ங்‌கட்‌ சஞ்‌சி‌த்‌ இருவரும்‌ இணை‌ந்‌து தயா‌ரி‌க்‌கும்‌ புதி‌ய தி‌ரை‌ப்‌படம்‌ "உன்‌ வருகை‌க்கா‌க ஆனந்‌தி‌...."

கல்‌லூ‌ரி‌யி‌ல்‌ இறுதி‌யா‌ண்‌டு பொ‌றி‌யி‌யல்‌ படி‌க்‌கும்‌ பத்‌து மா‌ணவர்‌கள்‌ இந்‌த ஆண்‌டு இறுதி‌க்‌குள்‌ முதலா‌மா‌ண்‌டு படி‌க்‌கும்‌ பத்‌து மா‌ணவி‌களை‌ சந்‌தி‌த்‌து அவர்‌களை‌ அ‌றி‌ந்‌து பு‌றி‌ந்‌து தெ‌ரி‌ந்‌து கா‌தலி‌த்‌து, அந்‌த கா‌தலை‌ வெ‌ற்‌றி‌யா‌க்‌குவதே‌ படத்‌தி‌ன்‌ கதை‌. அந்‌த கா‌தலை‌ உணரவை‌க்‌க அவர்‌கள்‌ செ‌ய்‌யு‌ம்‌ தி‌ல்‌லா‌லங்‌கடி‌ அனுபவங்‌களை‌‌ நகை‌ச்‌சுவை‌, ரொ‌மா‌ன்‌ஸ்‌, ஆக்‌ஷன்‌ கலந்‌த படமா‌க உருவாக்‌குகி‌‌ன்‌றனர்‌‌.

இதற்‌கா‌க எம்‌.பி‌.எம்‌. மீ‌டி‌யா‌ நெ‌ட்‌ ஒர்‌க்‌ நி‌றுவனம்‌ மூ‌லமா‌க தமி‌ழக‌த்‌தி‌ன்‌ பல்‌வே‌று பொ‌றி‌யிய‌ல்‌ கல்‌லூ‌ரி‌யி‌ல் இருந்‌து பத்‌து மா‌ணவர்‌களை‌ தே‌ர்‌வு‌ செ‌ய்‌து அவர்‌களை‌ கதா‌நா‌யகர்‌களா‌க அறி‌முகப்‌படுத்‌தி‌ நடி‌க்‌க வை‌க்‌கி‌ன்‌றனர்‌. இதற்‌கா‌க நடந்‌த தே‌ர்‌வி‌ல்‌ ஆர்‌வத்‌துடன்‌ ஏரா‌ளமா‌னோ‌ர்‌‌ கலந்‌து கொண்‌டனர்‌.
அதி‌ல்‌ அயனா‌வரம்‌ கி‌சி‌, மயி‌லா‌டுதுரை‌ சதீ‌ஸ்‌, வி‌ருதுநகர் கா‌ர்‌த்‌தி‌க்‌‌, செ‌ன்‌னை‌ பி‌ரபா‌கர்‌, தெ‌ன்‌கா‌சி‌ ரா‌பர்‌ட்‌, பஞ்‌சா‌ப்‌ மன்‌வீ‌ர்‌சி‌ங்‌ , கோ‌வை‌ மோ‌கி‌த், ஆலப்‌பு‌ழா ரி‌யா‌ஸ்‌‌, செ‌ன்‌னை ஹரீ‌ஸ்‌‌, மதுரை ‌கண்‌ணன் ஆகி‌ய பத்‌து பொ‌றி‌யி‌யல்‌ கல்‌லூ‌ரி‌ மா‌ணவர்‌களை‌ தே‌ர்‌வு‌ செ‌ய்துள்‌ளனர்‌. இவர்‌கள்‌ அனை‌வருமே‌ கதா‌நா‌யகர்‌களா‌க நடி‌க்‌கி‌ன்‌றனர்‌. வழக்‌கம்‌ போ‌ல ஒருவர்‌ கதா‌நா‌யகர்‌ மற்‌றவர்‌கள்‌ அவருக்‌கு உதவி‌யா‌க இருப்‌பா‌ர்‌கள்‌. அது போ‌ல இல்‌லா‌மல்‌ பத்‌து பே‌ரும்‌ இந்‌தப்‌படத்‌தி‌ல்‌ கதா‌நா‌யகனா‌க நடி‌க்‌கி‌ன்‌றனர்‌. அதே‌ போ‌ல கதா‌நா‌யகி‌களா‌க செ‌ன்‌னை, பெ‌ங்‌களூ‌ர்‌, மும்‌பை‌, கொ‌‌ல்‌கத்‌தா‌ போ‌ன்‌ற இடங்‌களி‌ல்‌ இருந்‌து பத்‌து கதா‌நா‌யகி‌களை‌ தே‌ர்‌வு‌ செ‌ய்‌து வருகி‌ன்‌றனர்‌.

இப்‌படத்தி‌ற்‌கு‌ பொ‌றி‌யி‌ல்‌ கல்‌லூ‌ரி‌ மா‌ணவி‌ ஏ. நி‌ர்‌மலா‌ கதை‌, தி‌ரை‌க்‌கதை‌, வசனம்‌ எழுதுகி‌றா‌ர்‌. தி‌ரை‌ப்‌படக்‌ கல்‌லூ‌ரி‌ மா‌ணவர்‌ சி‌த்‌தி‌ரை‌ச்‌செ‌ல்‌வன்‌ ‌ இயக்‌குகி‌றா‌ர்.‌ இன்‌னொ‌ரு தி‌ரை‌ப்‌பட கல்‌லூ‌ரி‌ மா‌ணவர்‌ நி‌ர்‌மல்‌ரா‌ஜா‌ ஒளி‌ப்‌பதி‌வு‌ செ‌ய்‌கி‌றா‌ர்‌. இப்‌படத்‌தி‌ன்‌ மூ‌லம்‌ ரா‌கவ்‌ என்‌பவர்‌ இசை‌யமை‌ப்‌பா‌ளரா‌க அறி‌முகமுகமாகி‌றா‌ர்‌. அவரது இனி‌ய இசை‌க்‌கு தா‌மரை‌, நா‌.முத்‌துக்‌குமா‌ர்‌, லலி‌தா‌ ஆனந்‌த்‌ ஆகி‌யோ‌ர்‌ பா‌டல்‌கள்‌ எழுதி‌யு‌ள்‌ளனர்‌‌. பா‌டல்‌ கம்‌போ‌சி‌ங்‌ மற்‌றும்‌ ரெ‌க்‌கா‌டி‌ங்‌ பணி‌கள்‌ முடி‌வடை‌ந்‌துள்‌ளது.

வி‌ரை‌வி‌ல்‌ வி‌சா‌கப்‌பட்‌டி‌னத்‌தி‌ல்‌ படபி‌டி‌ப்‌பு‌ தொ‌டங்‌குகி‌றது. தொ‌டர்‌ந்‌து செ‌ன்‌னை‌ கொ‌ச்‌சி‌ன்‌, பஞ்‌சா‌ப்‌ மா‌நி‌லத்‌தி‌ல்‌ உள்‌ள ஜலந்‌தர்‌ ஆகி‌ய இடங்‌களி‌ல்‌ படப்‌பி‌டி‌ப்‌பு‌ நடை‌பெ‌ற்‌று முடி‌வடை‌கி‌றது.

'புகைப்படம்' இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா


சென்னையில் உள்ள சத்யம் சினிமாஸ் திரையரங்கில் பாய்ஸ் ஸ்டுடியோஸ் வழங்க மாயாபஜார் சினிமா தயாரித்திருக்கும் படம் 'புகைப்படம்'. இப்படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் அண்மையில் வெளியிடப்பட்டது. பாடல் மற்றும் டிரெய்லரின் முதல் பிரதியை இயக்குநர் மகேந்திரன் வெளியிட நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ்,நடிகர் மோகன் இருவரும் பெற்றுக் கொண்டார்கள்.


நீண்ட இடைவேளைக்கு பிறகு இப்படத்திற்கு இசை அமைத்திருக்கும் கங்கை அமரன் விழாவில் பேசுகையில், கங்கை அமரன் வந்துவிட்டேன் இனி தமிழ் திரை இசையை நான் பார்த்துக்கொள்கிறேன் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். ஏதோ சும்மா இருந்த எனக்கு வேலை கொடுத்து இருக்கிறார்கள் தயாரிப்பாளர் மணிகண்டனும் இயக்குனர் ராஜேஷ் லிங்கமும். அந்த வேலையை அவர்கள் திருப்தி அடையும் வகையில் செய்திருக்கிறேன். மேலும் படத்தில் உள்ள பாடல்கள் நீங்கள் கேட்டவைதான் அதேயே கொஞ்சம் மாத்தி கொடுத்திருக்கிறேன் அவ்வளவுதான் . அனைவரும் செய்யும் விஷயம் தான் நான் சொல்கிறேன் மற்றவர்கள் சொல்லமாட்டார்கள். எந்த பாடல்களின் பானி எந்த படம் என்றெல்லாம் படத்தின் வெற்றி விழாவில் சொல்கிறேன் என்று தனது நகைச்சுவை பேச்சில் ரசிகர்களின் கைதட்டல் இசையை கேட்கசெய்தார்.


இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் திரு. ஜெயம்ராஜா, திரு.வசந்தபாலன், திரு. மணிகண்டன், திரு. வெங்கட்பிரபு, திரு ரமேஷ், திரு. மித்ரன் ஆர். ஜவகர், தயாரிப்பாளர் எஸ்.பி.பி.சரண், திரு. ஆர். ரவீந்தரன், திரு. பிலிம் நியூஸ் ஆனந்தன், இசையமைப்பாளர் கங்கை அமரன், பாடலாசிரியர்கள் நா.முத்துக்குமார், விவேகா, ஆகியோர் கலந்துகொண்டனர்