Monday, April 10, 2017

எம்.எஸ்.பாஸ்கருக்கு குவியும் பாராட்டுக்கள்

சமீபத்தில் வெளியான ‘8 தோட்டாக்கள்’ படத்தை  இயக்கியவர்  இயக்குநர்  ஸ்ரீகணேஷ்.  இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தப் படத்தில் நடித்திருந்த நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் கதாப்பத்திரம் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது. திரைப்பட நடிகர்கள், 

இயக்குனராகள், பத்திரிகையாளர்கள், ரசிகர்கள் என பலர் எம்.எஸ்.பாஸ்கர் அவர்களை நேரிலும், தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டும் பாராட்டி வருகின்றனர்.

 இதனால், உற்சாகம் அடைந்த நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், தன்னுடைய கதாப்பாத்திரத்தின் நடிப்பை வெளிக் கொண்டுவர காரணமாக  இருந்த இயக்குநர் ஸ்ரீகணேஷ்  அவர்களை  பாராட்ட  முடிவு செய்து, தனது வீட்டுக்கு அழைத்தார்.

 பட விமர்சனங்களை பற்றி பகிர்ந்து கொள்ள எம்.எஸ்.பாஸ்கர் அழைத்திருக்கிறார் என்று நினைத்து வந்த இயக்குனர் ஸ்ரீகணேஷ், திடீர் என அவர் தங்க சங்கிலி பரிசளித்து பாராட்டியதில் நெகிழ்ந்து போனார்.

Sunday, March 26, 2017

லஷ்மி மேனனின் தந்தையாக சித்ரா லட்சுமணன்

“பாஸ் என்கிற பாஸ்கரன்” படத்தில் நயன்தாராவின் தந்தையாக நடித்த சித்ரா லட்சுமணன், அந்தப் படத்தைத் தயாரித்த வாசன் விஷுவல் வென்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் “யங் மங் சங்” படத்தில் லஷ்மி மேனனின் தந்தையாக நடிக்கிறார்.

பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் தங்கர் பச்சான், ஆர்.ஜே.பாலாஜி, காளி வெங்கட், 'பாகுபலி' பிரபாகர் கலக்கேயா, கும்கி அஸ்வின், இயக்குனர் சி.எச்.நாராயணன மூர்த்தி, ஒளிப்பதிவாளர் ரவீந்தர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்

குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, அம்ரீஷ் இசையமைக்கும்  இப்படத்தை 'முண்டாசுப்பட்டி', 'இன்று நேற்று நாளை' ஆகிய படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய  அர்ஜுன்  இயக்குகிறார்.

கடந்த பதினைந்து நாட்களாக கும்பகோணம் பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் இப்படத்தை கே.எஸ்.சீனிவாசன்-கே.எஸ்.சிவராமன் ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர் .Tuesday, January 17, 2017

தமிழக முதல்வருக்கு இயக்குனரும் நடிகருமான சித்ரா லட்சுமணன் கோரிக்கை


ஒவ்வொரு ஆண்டும்  எம்ஜிஆர் பிறந்த தினத்தன்று அவரது பெயராலே  மா மனிதர்  விருது

தமிழக முதல்வருக்கு இயக்குனரும் நடிகருமான சித்ரா லட்சுமணன்  கோரிக்கை

ஒவ்வொரு ஆண்டும்  எம்ஜிஆர் பிறந்த தினத்தன்று அவரது பெயராலே  மா மனிதர்  விருது ஒன்று தர வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு இயக்குனரும் நடிகருமான சித்ரா லட்சுமணன்  கோரிக்கை வைத்துள்ளார் 

இது குறித்து தமிழக முதல்வருக்கு கடிதம்  எழுதியுள்ள சித்ரா லட்சுமணன் “தமிழ்நாட்டில் மட்டுமின்றி,உலகம் முழுவதும் எங்கெங்கெல்லாம் தமிழர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் எம் ஜி ஆரின் நூற்றாண்டு விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. 

புரட்சி நடிகர் என்றும் புரட்சித் தலைவர் என்றும் தமிழக மக்களால் பாசத்தோடு அழைக்கப்படுகின்ற  எம் ஜி ஆர் அளவிற்கு தமிழக மக்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம் பிடித்த நடிகர்-தலைவர் எவரும் இல்லை. மக்களால் அந்த அளவிற்கு நேசிக்கப்பட்டதால்தான் தமிழ் சினிமாவை முப்பதாண்டு காலமும் தமிழ் நாட்டை பதினொரு ஆண்டு காலமும் அவரால் ஆள முடிந்தது. காலம் அவரது உயிரைப் பறிக்காமல் இருந்திருந்தால் எக்காலத்திலும் , எவராலும் எம்ஜிஆரை ஆட்சிக் கட்டிலில் இருந்து இறக்கியிருக்கவே முடியாது என்பதை எவராலும் மறுக்க முடியாது. 

இன்றும் தமிழக மக்களில்  பலர் தங்களை வாழவைக்க அவதரித்த கடவுளாகவே எம் ஜி ஆர் அவர்களைப் பார்ப்பதால்தான்  பூஜை அறையில் அவரது படத்தை வைத்து வணங்கிக் கொண்டிருக்கின்றனர். 

நான் தயாரித்த ஜல்லிக்கட்டு திரைப்படத்தின் நூறாவது நாள்விழாவிலே கலந்து கொண்டு சிறப்பித்த புரட்சித் தலைவரோடு பல சந்தர்ப்பங்களில் மிகவும் நெருக்கமாக பழகுகின்ற வாய்ப்பை இறைவன் எனக்கு அளித்ததை மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறேன்   

இன,மத,கட்சி வேறுபாடின்றி எல்லோராலும் மதிக்கப்படுகின்ற புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் நினைவாக  ஒவ்வொரு ஆண்டும் சேவை மனப்பான்மையுள்ள ஒரு நல்ல மனிதரைத் தேர்ந்தெடுத்து ” எம்ஜிஆர் மா மனிதர் விருது’என்று பெயரிலே ஒரு விருது தர வேண்டும் என்றும்  அந்த விருது வழங்கும் விழாவை ஒவ்வொரு ஆண்டும் எம்ஜிஆர் அவர்களின் அவரது பிறந்த நாளான  ஜனவரி பதினேழாம் தேதி மிகப்பெரிய விழாவாக தமிழக அரசின் சார்பில் கொண்டாட வேண்டும் என்றும் தங்களை அன்போடு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் ‘என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்