Wednesday, December 11, 2013

டிரம்மாலயாவுக்கு பாராட்டு!தி.நகர் அபிபுல்லா சாலையில் உள்ள கர்நாடக அரங்கில் சிறுவர், சிறுமிகள் கலந்துகொண்ட டிரம்ஸ் மற்றும் பாடல் பாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஐந்து வயது முதல் பதினைந்து வயதுள்ள சிறுவர், சிறுமியர் பாட்டு போட்டியிலும், ஐந்து வயது முதல் இருபத்தி ஐந்து வயது வரையிலான சிறுவர், சிறுமிகள் டிரம்ஸ் போட்டியிலும் கலந்து கொண்டனர். 

ஆட்டம் பாட்டம் என சிறுவர், சிறுமியினர் தங்களது திறமையை வெளிப்படுத்தி விழாவுக்கு வந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர். 

திரை இசை உலகில் டிரம்ஸ் வாசிப்பதில் பெயரெடுத்த கோபால் என்பவர் நடத்தும் டிரம்மாலயா ஸ்கூலின் 12-வது ஆண்டு விழாவில்தான் இந்த பாட்டு மற்றும் டிரம்ஸ் போட்டி நடைபெற்றது. இதில் ஸ்கூலில் படிக்கும் மாணவ மாணவிகள் அனைவரும் பங்கேற்று சிறப்பித்தனர் 
 
இவ்விழாவில் முன்னாள் நீதிபதி பாஸ்கரன், நடிகை நளினி, நகைச்சுவை நடிகை மதுமிதா, இசையமைப்பாளர் வீ.தஷி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறுவர், சிறுமிகளை உற்சாகப் படுத்தி, அவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்கள். 

மாணவர்களின் திறமையை வளர்க்கும் டிரம்மாலயம் ஸ்கூலின் நிர்வாகி கோபாலுக்கு கேடயம் வழங்கி கவுரவிக்கப்பட்டது 

ஸ்ரீகிருஷ்ணா திரைக்கூடம் ’அக்னி’காதலால் தன்னிலை இழக்கும் இளைஞன்

ஸ்ரீகிருஷ்ணா திரைக்கூடம் சார்பில் பி.எஸ்.குருநாதன் தயாரிக்கும் படம் ’அக்னி’. இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடலகள் எழுதி இயக்குவதுடன் கதாநாயகனாகவும் அறிமுகமாகி உள்ளார் ஏ.ஜே.ஆர்.ஹரிகேஸவா.
           
கவின்ஸ்ரீ கதாநாயகியாக நடிக்க, ராஜா, பழனி, பாஷா, சதீஷ், செல்வம், மதன், ப்ரியா என பலர் நடித்துள்ளனர். புதியவர் ஆஷிக் ஒளிப்பதிவு செய்ய, நித்யன் கார்த்திக் இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் யாரும் காதலிக்காதீர்கள் என்று சொல்ல வரும் படமாம். படம் பற்றி இயக்குனர் கூறுகையில், “காதல் என்ற பெயரில் காமம் தன்னை நியாயப் படுத்திக்கொள்கிறது. காதல் என்ற பெயரில் காமம்தான் நடக்கிறது. ஒரு பெண்ணை காதலிக்கும் இளைஞ்னை, அந்தப் பெண் புறக்கணித்து விடுகிறாள். அதனால் தன்னிலை இழக்கும் அவன் காதல் என்ற பெயரில் காமகளியாட்டம் நடத்தும் பெண்களை தேடி பிடித்து விதம் விதமாக கொள்கிறான். அதை விறுவிறுப்பாகவும் பரபரப்பகவும் சொல்கிறேன் என்கிறார் இயக்குனர் ஏ.ஜே.ஆர்.ஹரிகேஸவா.

காங்கேயம், கொடுமுடி, மணல்மேடு என ஈரோடு மாவட்டத்தில் பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது

பேய் நடமாடும் பகுதி


ஏ.டி.எம்.புரொடக்சன்ஸ் மதுராஜ் வழங்க, அக்னி மீடியா பட நிறுவனம் சார்பில் எம்.ஞானசேகரன் தயாரிக்கும் படம் பேய் நடமாடும் பகுதி’.
இந்தப் படத்தில் ரகுவண்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, ஐஸ்வர்யா, மைதானம்சிவா, மஞ்சு, அர்ச்சனா உட்பட பலர் நடித்துள்ளனர். 

இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி உள்ளார் செங்குட்டுவன். ஜே.டி.செந்தில்ராஜ் இசையமைக்க, சிவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு – துரைராஜ்.

ஏற்காடு மலைக்கு சுற்றுலா செல்லும் சில காதலர்கள் தொடர்ந்து மர்மமான முறையில் இறக்கின்றனர். ஒரு பேய் அந்த கொலைகளை செய்வதாக அங்கு உள்ளவர்கள் நம்புகின்றனர். இது பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக அங்கு ரகுவண்ணன் செல்கிறார்.


அங்கு அவருக்கு ஏற்படும் திடுக், பகீர் அனுபவங்களை திகில் சஸ்பென்ஸ் கலந்த படமாக இயக்கி உள்ளார் இயக்குனர் செங்குட்டுவன். 

திருப்பங்கள் நிறைந்த விறுவிறுப்பான இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் ஏற்காடு மலையில் படமாகி உள்ளது. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் வேலைகள் நடைபெற்று வருகிறது. பிப்ரவரியில் திரைக்கு வரும் என்கிறார் இயக்குனர் செங்குட்டுவன்.

Friday, August 16, 2013

பாஸ் நடிக்கும் ‘தலைவன்’ பாடல் வெளியீட்டு விழா

புளூ ஓசன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் சித்திரைச் செல்வன் தயாரிக்கும் படம் தலைவன். திரைப்பட கல்லூரி மாணவர் ரமேஷ் செல்வன்  இயக்கும் இந்தப் படத்தில், புதுமுகம் பாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நிகிஷா படேல் நடிக்கிறார்.

நகைச்சுவை வேடத்தில் சந்தானம், கோவைசரளா, சந்தானபாரதி, பாண்டு, சுமன்ஷெட்டி, மனோபாலா, வின்சென்ட் அசோகன், முத்தூக்காளை, அபிஷேக், ஓ.ஏ.கே.சுந்தர், டி.பி.கஜேந்திரன், ரவிராஜ். வாசுவிக்ரம், சுவாமிநாதன், கணேஷ், ஆர்த்தி, ரவி, ஜெயபிரகாஷ், மீராகிருஷ்ணன், மோனிகா, கூல் சுரேஷ், அந்தோணிராஜ், கிரி, வி.டி.வி.கணேஷ், மூணார் ராஜேஷ், ஸ்வேதா, பவர் ஸ்டார், சுமன், ஷோபா, கோட்டா சீனிவாசராவ், சுப்புராஜ், சுரேஷ்கிருஷ்ணன், வஞ்சிநாதன், மதியழகன், ராயபுரம் ரவி, யுவராணி உட்பட பலர் நடித்துள்ளனர்.

ஜேசுதாஸ், உதித் நாராயணன், கார்த்திக், ரஞ்சித் என்று முன்னணி பாடகர்களை பட வைத்து இசையமைத்திருக்கிறார் வித்யாசாகர். பாடல்கள் அனைத்தும் தாரத்தோடும், ரசிகர்களின் உள்ளத்தை தொடுகிற மாதிரியும் கவிஞர் அறிவுமதி, யுக பாரதி, விவேகா, மதன் கார்க்கி ஆகியோர் எழுதி உள்ளானர். கே.எஸ்.பூபதி ஒளிப்பதிவு செய்ய ஆன்டனி படத்தொகுப்பு செய்துள்ளார். கலை – சண்முகம். சண்டை பயிற்சி – சூப்பர் சுப்பராயன், நடனம் – சங்கர், விஜய், தயாரிப்பு மேற்பார்வை - சிவசங்கர்,  மலைச்சாரல் ரவி. கம்பெனி மேனஜர் அக் ஷய்  மனோகர்,

தலைவன் இசை வெளியீட்டு விழா

இந்த படத்தின் பாடல் இசை வெளியீட்டு விழா நேற்று (27.05.2013) திங்கள் மாலை 5.00 மணிக்கு சென்னையில் உள்ள காமராஜர் அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது
.
விழாவுக்கு திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் அமீர் தலைமை தாங்கினார். இயக்குனர்கள் சங்க பொருளாளர் எஸ்.பி.ஜனநாதன் தயாரிப்பாளர் கில்டு தலைவர் ஹெம்நாத் பாபுஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

படத்திற்கு உழைத்த டெக்னீஷியன்களும், தொழிலாளர்களும் பாடல் சிடியை வெளியிட ரசிகர்கள் பெற்றுக்கொண்டனர். 

Sunday, June 30, 2013

சன் டிவியில் நாள் தோறும் பகல் பன்னிரண்டு மணிக்கு ' தேவதை'

சன் டிவியில் நாள் தோறும் பகல் பன்னிரண்டு மணிக்கு ஒளிபரப்பாகி வரும் அபிநயா கிரியேஷன்ஸின் வெள்ளைத்தாமரை மெகா தொடர் நிறைவடைந்தது.

நாளை (ஜூலை-01) திங்கள் முதல் தேவதை என்னும் புதிய தொடர் ஆரம்பமாகிறது. முற்றிலும் மாறுபட்ட கதையாம்சமும், நகைச்சுவை கலந்த திரைக்கதை அமைப்பும் இத்தொடரின் சிறப்பம்சங்கள்

கதையின் நாயகி பூரணிக்கு மூன்று முகங்கள். மலிவு விலையில் மெஸ் நடத்தும் அன்னபூரணியாக அவளைப் பிராந்தியத்தில் அத்தனைப் பேருக்கும் தெரியும். அந்த குறைந்த விலையைக் கூடக் கொடுக்க முடியாமல் ஓசியில் சாப்பிட்டுப் போகும் ரெகுலர் கஸ்டமர்கள் அவளுக்கு நிறைய பேர் உண்டு. பூரணி முகம் சுளிக்க மாட்டாள். பசித்தவருக்கு உணவளிப்பது அவளது பிறவிக்குணம்

பூரணிக்கு இன்னொரு முகம் உண்டு. அது பிராந்தியத்தில் வசிக்கும் வயசு பெண்களுக்கும், விடலைப்  பையன்களுக்கும் மட்டுமே தெரிந்த முகம். வீடு ஒப்புக்கொள்ளாத பல காதல் திருமணங்களை அவள் நிச்சயித்து நடத்தி வைத்திருக்கிறாள். எத்தனை தடைகள், எப்பேர்ப்பட்ட வில்லன்கள் வந்தாலும் பூரணி தலையிட்டு விட்டால் ஒரு திருமணம் நடந்தே தீரும். இந்த ஒரே கரணத்துக்காகவே பகுதி வாழ் இளைய தலைமுறை அவளை தலைக்குமேல் வைத்து கூத்தாடும். அக்கா, அக்கா என்று நாய்க் குட்டிபோல் அவள் பின்னால் சுற்றுவார்கள்.

பூரணியின் மூன்றாவது முகம் அவளது வீட்டாருக்கு மட்டுமே உரியது. அங்கே அவள் ஒரு அன்பான மகள். இருபத்தேழு வயதாகியும் இன்னும் கல்யாணமாகவில்லையே என்று பெற்றோர் பரிதவிக்க, தினசரி யாராவது ஒருவன் வந்து பெண் பார்த்து போவதற்கு அவள் மாலையானால் சீவி, சிங்காரித்து, தலைகுனிந்து காப்பி தம்பளருடன் ஹாலுக்கு ஆஜராவது வழக்கம்.

அவளுக்குத் திருமணம் நடந்தால்தான் அவளது சகோதரர்கள் மூன்று பேருக்கு ஒரு வழி பிறக்கும். ஆனால் ஏன் அது மட்டும் நடக்கவே மாட்டேனென்கிறது? காதலிக்கும் அனைவருக்கும் அவள்தான் கடைசி சரணாலயம். ஆனால், அவள் வாழ்வில் ஏன் கல்யாணம் என்ற ஒன்று வர மறுக்கிறது? தூக்கிவாரிப்போடச் செய்யும் ஒரு பகீர் பின்னணியில் மையம் கொண்டிருக்கிறது இந்த பூரணிப் புயல்!.
எங்கிருந்து வந்தாள். இந்த தேவதை?

நடிப்பு : சுபத்ரா, டி.துரைராஜ், ஷோபனா, வி.கே.ஆர்.ரகுநாத், நேசன், ஹவிஸ்

கதை, திரைக்கதை : பா.ராகவன், வசனம்: கார்க்கி, இசை பாலபாரதி, ஒளிப்பதிவு: ராஜூஸ்,  இயக்கம்: பி.நீராவிப் பாண்டியன், தயாரிப்பு: அபிநயா கிரியேஷன்ஸ் ராதா கிருஷ்ணசாமி.  

Sunday, February 17, 2013

‘அருவி‌க்‌கரை‌யோ‌ரம்’ இசை வெ‌ளி‌யி‌ட்‌டு வி‌ழா


‘அருவி‌க்‌கரை‌யோ‌ரம்’ இசை வெ‌ளி‌யி‌ட்‌டு வி‌ழா

ஸ்ரீஹரி மூ‌வி‌ஸ் சா‌ர்‌பி‌ல் பி.பா‌ரதி‌மோ‌கன் தயா‌ரி‌த்‌து, டை‌ரக்‌ஷன் செ‌ய்‌துள்‌ள படம் 'அருவிக்கரை‌யோ‌ரம்'. இந்‌தப் படத்‌தி‌ற்‌கு கதை, தி‌ரை‌க்‌கதை, பா‌டல்‌கள் எழுதி டை‌ரக்‌ஷன் செ‌ய்‌துள்‌ளா‌ர் பி.பா‌ரதி‌மோகன். 

கதை‌யி‌ன் நா‌யகனா‌க பா‌ரதி‌மோ‌கன் நடி‌க்க, அவருடன் ஜூ‌லு, சி‌னி இருவரும் கதா‌நா‌யகி‌களா‌க நடி‌த்‌துள்‌ளனர். வி‌ல்ல‌னா‌க தி‌ரவி‌ய பா‌ண்‌டி‌யன் நடி‌க்க, நகை‌ச்‌சுவை வே‌டத்‌தி‌ல் அல்‌வா வா‌சு, சுப்‌பு‌ரா‌ஜ் நடி‌த்‌துள்‌ளனர். வி.தஷி இசை‌யி‌ல் ஐந்‌து பா‌டல்‌கள் இடம் பெ‌றுகி‌ன்றன.

இந்‌தப் படத்‌தி‌ன் பா‌டல் வெ‌ளி‌யி‌ட்‌டு வி‌ழா நே‌ற்‌று (25.01.2013) செ‌ன்‌னை‌யி‌ல் உள்‌ள ஏவி.எம்.ஸ்‌டுடி‌யோ‌வி‌ல் நடை‌பெ‌ற்‌றது. வி‌ழா‌வு‌க்‌கு ‘மக்‌கள் குரல்’ ரா‌ம்‌ஜி தலை‌மை தா‌ங்‌கி‌னா‌ர். கவி‌ஞர் கா‌மகோ‌டி‌யன், நடி‌கர் சக்‌கரவர்‌த்‌தி, நடி‌கை லலி‌தா அகி‌யோ‌ர் முன்‌னி‌லை வகி‌த்‌தனர்.

முதல் பா‌டல் சி‌டி‌யை இயக்‌குனர் பே‌ரரசு வெ‌ளி‌யிட, நடி‌கர் ‘கோ‌ழி கூவு‌து’ அசோ‌க் பெ‌ற்‌றுக்‌கொ‌ண்‌டா‌ர். 

பி‌றகு இயக்‌குனர் பே‌ரரசு பே‌சி‌யதா‌வது.

பா‌டல்‌களை தி‌ரை‌யி‌ல் பா‌ர்‌த்‌தே‌ன். பா‌டல்‌கள் அனை‌த்‌தும் பஞ்‌சா‌மி‌ர்‌தம். இசை‌யமை‌ப்‌பா‌ளர் தஷி‌யி‌ன் டி‌யூ‌னும், பா‌டலா‌சி‌ரி‌யர் பா‌ரதிமோ‌கனி‌ன் வரி‌களும் ரசி‌க்‌கும் வி‌தமாக இருந்‌தது. இசை‌யி‌ன் அதிக்கம் இல்‌லா‌மல் பா‌டல்‌களை கே‌ட்‌க முடி‌ந்‌தது. அனை‌த்‌து பா‌டல் வரி‌களும் தி‌ரும்‌ப தி‌ரும்ப கே‌ட்‌கி‌ற மா‌தி‌ரி, பா‌டுகி‌ற மா‌தி‌ரி இனி‌மை‌யா‌க இருந்‌தது.

இப்‌போ‌து நூ‌த்‌துக்‌கு தெ‌ன்னூ‌ற்‌றி ஒன்‌பது பா‌டல்‌களி‌ல் ஆங்‌கி‌ல வா‌ர்‌த்‌தை‌கள் அதி‌கம் இடம் பெ‌றுகி‌ன்‌றது. தமி‌ழ் வா‌ர்‌த்‌தை‌கள் குறை‌ந்‌து போ‌ய்‌வி‌ட்‌டது. இது வருத்‌தமா‌க இருக்‌கு. நூ‌த்‌துக்‌கு ஒரு பா‌ட்‌டு அல்‌லது ரெ‌ண்‌டு பா‌ட்‌டு அப்‌படி இருந்‌தி‌ருக்‌கலா‌ம். ஆனா‌ல், இப்‌போது எல்‌லா பா‌ட்‌டுமே அப்‌படி வருவது வருந்த தக்‌க வி‌ஷயம். 

எம்.எஸ்.வி‌ஸ்‌வநா‌ன் கா‌லத்‌தி‌லும், அதன் பி‌றகு இளை‌யரா‌ஜா வந்‌த பி‌றகும் பா‌டல்‌களி‌ல் டி‌யூ‌ன் தன்‌மை மா‌றி‌யி‌ருந்‌தது. ஆனா‌ல் பா‌டல்‌களி‌ல் தமி‌ழ் வா‌ர்‌த்‌தை‌கள் இருக்‌கும். இப்‌போது அது இல்ல. இப்‌படி வருவதற்‌கு பா‌டலா‌சி‌ரி‌யர்‌கள் மட்‌டும் பொ‌றுப்‌பு என்‌று சொ‌ல்‌ல முடி‌யா‌து. இசை‌யமை‌ப்‌பா‌ளருக்‌கும், இயக்‌குனருக்‌கும் இதுல பொ‌றுப்‌பு இருக்‌கு.

தமிழி‌ல் தலை‌ப்‌பு வை‌த்‌தா‌ல்‌தா‌ன் வரி‌ச் சலுகை என்‌று சொ‌ன்‌ன பி‌றகு தமி‌ழி‌ல் தலை‌ப்‌பு‌கள் வை‌க்‌க ஆரம்‌பி‌த்‌தா‌ர்‌கள். அதே போ‌ல பா‌டல்‌களி‌ல் தமி‌ழ் வா‌ர்‌த்‌தை‌கள் வருவதற்‌கும் வழி வகை செ‌ய்‌யனும். 

இவ்‌வா‌று இயக்‌குனர் பே‌ரரசு பே‌சி‌னா‌ர்.

இயக்‌குனர் பா‌ரதி‌மோ‌கன், இசை‌யமை‌ப்‌பா‌ளர் தஷி, ஒளி‌ப்‌பதி‌வா‌ளர் ஆதி, நடன இயக்‌குனர் ரமே‌ஷ்‌ரெ‌ட்‌டி, வசனகர்‌த்‌தா பட்‌டுக்‌கோ;டை தி‌ருஞா‌னம், மயி‌ல்‌வே‌ல்‌ரா‌ஜா, நடி‌கை‌கள் கி‌ரண்‌மை, நட்‌சத்‌தி‌ரா, வி‌ல்‌லன் நடி‌கர் தி‌ரவி‌யபா‌ண்‌டி‌யன், பொ‌ன்‌முடி, அருண் அகி‌யோ‌ர்‌களுக்‌கு பொ‌ன்‌னா‌டை அணி‌வி‌த்‌து கெ‌ளரவி‌க்‌கப்‌பட்‌டனர். 

வி‌ழா‌வு‌க்‌கு வந்‌த சி‌றப்‌பு வி‌ருந்‌தி‌னர்‌களுக்‌கு நி‌னை‌வு பரி‌சு கே‌டயம் வழங்‌கப்‌பட்‌டது.

வி‌ழா‌வு‌க்‌கு வந்‌த அனை‌வரை‌யு‌ம் மக்‌கள் தொ‌டர்‌பா‌ளர் ஜி.பா‌லன் வரவே‌ற்‌றா‌ர்.

வி‌னோ நா‌கா.இயக்‌கும் பு‌தி‌ய படம் ‘+1 +2’.ஓவி‌யன் பி‌க்‌சர்‌ஸ் சா‌ர்‌பி‌ல் டி. நா‌கரா‌ஜன் தயா‌ரி‌க்‌கும் பு‌தி‌ய படம் ‘+1 +2’.

பு‌துமுகங்‌கள் ப்‌ரவீ‌ன், வி‌னோ‌தா, தர்‌மதுரை, ஜெ‌னி, ஐயப்‌பன், கருப்‌பை‌யா உட்‌பட பலர் நடி‌க்‌கும் இந்‌தப் படத்‌தை, கதை, தி‌ரை‌க்‌கதை, வசனம் எழுதி இயக்‌குகி‌றா‌ர் வி‌னோ நா‌கா.

ஒளி‌ப்‌பதி‌வு - வி‌ன்‌செ‌ன்‌ட் சா‌முவே‌ல், செ‌ந்‌தி‌ல்‌ரா‌ஜ், இசை - சுந்‌தரலி‌ங்‌க ரா‌ஜா, ஆலன் பி‌ரகா‌ஷ், பா‌டல்‌கள் - அழகர்‌சா‌மி, கவி‌யரசன், முருகன், நடனம் - ‘கா‌தல்’ கந்‌தா‌ஸ், கருணா, கலை - ரா‌ம்‌ஜி, படத்‌தொ‌குப்‌பு - பி‌ரா‌ன்‌சி‌ஸ், தயா‌ரி‌ப்‌பு நி‌ர்‌வா‌கம் -ரஞ்‌சி‌த், மக்‌கள் தொ‌டர்‌பு - ஜி.பா‌லன்

இந்‌தப் படத்‌தி‌ன் துவக்‌க வி‌ழா, இன்‌று (20.01.2013) வெ‌ள்‌ளிக்‌கி‌ழமை கா‌லை 9.00 மணி‌க்‌கு எவி.எம். ஸ்‌டுடி‌யோ‌வி‌ல் உள்‌ள பி‌ள்‌ளை‌யா‌ர் கோ‌வி‌லி‌ல் நடை‌பெ‌ற்‌றது.

வி‌ழா‌வி‌ல் இயக்‌குனர்‌கள் பி.வா‌சு, ஏ.வெ‌ங்‌கடே‌ஷ், பே‌ரரசு, பா‌லா‌ஜி சக்‌தி‌வே‌ல், சமுத்‌தி‌ரகனி, ரமே‌ஷ்‌கண்‌ணா, ஜி.கி‌ச்‌சா, பா‌லுமலர்‌வண்‌ணன், இசை‌யமை‌ப்‌பா‌ளர் வி.தஷி, தயா‌ரி‌ப்‌பா‌ளர்கள் வி.எல்.வெ‌ங்‌கட், ‘ஒச்‌சா‌யி’ தி‌ரவிய பா‌ண்‌டி‌யன்‌தொ‌ழி‌லதி‌பர்‌கள் எம்.ஆர்.எம். பா‌லசுப்‌‌ரமணி‌யன், அஜி‌ஸ், டி.ரா‌ஜசே‌கர் உட்‌பட பலர் கலந்‌துகொ‌ண்‌டு வா‌ழ்‌த்‌தி‌னா‌ர்‌கள்.

வி‌ழா‌வு‌க்‌கு வந்‌த அனை‌வரை‌யு‌ம் இயக்‌குனர் வி‌னோ நா‌கா வரவே‌ற்‌றா‌ர்.

‘காற்றினிலே வரும் கீதம்’

காற்றினிலே வரும் கீதம்’ மெகா தொடர்

ரெட்சன் புரொடக்சன்ஸ் சார்பில் ஜே.கே. ஆனந்த் தயாரிக்கும் புதிய மெகா தொடர் காற்றினிலே வரும் கீதம்

இந்த தொடரை சுந்தர் கே. விஜயன் இயக்குகிறார். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான கேள்வியின் நாயகனே, என்பெயர் ரெங்க நாயகி, அலைகள், செல்வி போன்ற மெகா தொடர்களை இயக்கியவர்.

அலைபாயுதே உட்பட ஏராளமான படங்களுக்கு கதை வசனம் எழுதிய  பிரபல கதை, வசன கர்த்தா அன்னக்கிளி ஆர்.செல்வராஜ், இத்தொடருக்கு  கதை திரைக்கதை, வசனம் எழுதுகிறார்.

இந்த மெகா தொடரில் வாணி விஸ்வநாத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் சுனில், நவ்யா, ரவி உள்பட பலர் நடிக்கின்றனர்.

எங்கேயும் எப்போதும் படத்தின் இசையமைப்பாளர் சத்யா இசை அமைப்பில், காதல்மதி எழுதி, காயத்ரி பாடிய ஒரு அருமையான பாடல் இந்த தொடருக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்தொடருக்கு ராஜா ஒளிப்பதிவு செய்ய, உதயகுமார், பிரேம்குமார் இருவரும் படத்தொகுப்பு செய்ய உள்ளனர்.

மைசூர், கூர்க் போன்ற இடங்களில் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இதன் தொடக்க விழா இன்று (17.02.2013) சென்னையில் தொடங்கியது.

இயக்குனர்கள் சில்லுன்னு ஒரு காதல் கிருஷ்ணா, வீராப்பு பத்ரி, மணிபராதி, அன்னக்கிளி ஆர்.செல்வராஜ், தயாரிப்பாளர் ராதா கிருஷ்ணசாமி  உட்பட பலர் கலந்து கொண்டு வழ்த்தினார்கள்
இந்த காற்றினிலே வரும் கீதம் விரைவில் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.