Monday, June 11, 2012

மறக்‌க முடி‌யா‌த தெ‌ன்‌னி‌லவன்‌

நா‌ன்‌ சி‌னி‌மா‌வு‌க்‌கு வந்‌த பு‌தி‌தி‌ல்‌ பல நி‌ருபர்‌களை‌ சந்‌தி‌தது பே‌சுவே‌ன்‌. அதி‌ல்‌ தெ‌ன்‌னி‌லவன்‌ மீ‌து பெ‌ரி‌ய பொ‌றா‌மை‌யே‌ உண்‌டு. மற்‌றவர்‌களுக்‌கெ‌ல்‌லா‌ம்‌ தா‌ங்‌கள்‌ எழுதி‌ய கட்‌டுரை‌யி‌ல்‌‌ பெ‌யர்‌ கூட போ‌ட முடி‌யா‌த நி‌லை‌ இருந்‌தது. ஆனா‌ல்‌ ஜெ‌மி‌னி‌ சி‌னி‌மா‌ இதழி‌ன்‌ எந்‌தப்‌ பக்‌கத்‌தை‌ பு‌ரட்‌டி‌ப்‌ பா‌ர்‌த்‌தா‌லும்‌ பேட்‌‌டி‌களி‌ன்‌ கடை‌சி‌யி‌ல்‌, கட்‌டுரை‌யி‌ன்‌ கடை‌சி‌யி‌ல்‌ தெ‌ன்‌னி‌லவன்‌ பெ‌யரே‌ அதி‌கம்‌ இருக்‌கும்‌. பக்‌கத்‌துக்‌கு பக்‌கம்‌ அவர்‌ பெ‌யர்‌தா‌ன்‌.

இந்‌த மனி‌தர்‌ இவ்‌வளவு‌ எழுதுகி‌றா‌ரே‌? இவருக்‌கு ஏது நே‌ரம்‌. வா‌ரா‌ வரா‌ம்‌ இத்‌தனை‌ப்‌ பக்‌க‌ங்‌கள்‌, இவ்‌வளவு‌ எழுதி‌ குவிகி‌றா‌ரே‌? இவ்‌வளவு‌ எழுத வே‌ண்‌டுமா‌னா‌ல்‌ அவர்‌ எவ்‌வளவு‌ பே‌ரை‌ சந்‌தி‌த்‌து பே‌ச வே‌ண்‌டும்‌. இப்‌படி‌ அவர்‌ வே‌லை‌யை‌ப்‌ பற்‌றி‌யு‌ம்‌, அவர்‌ தி‌றமை‌யை‌ப்‌ பா‌ர்‌த்‌தும்‌ வி‌யந்‌து பொ‌றா‌மை‌ கொ‌ண்‌டி‌ருந்‌தே‌ன்‌.

தி‌டீ‌ரெ‌ன ஜெ‌மி‌னி‌ சி‌னி‌மா‌ நி‌ன்‌ற போ‌து, அவர்‌ வே‌லை‌ இல்‌லா‌மல்‌ இருந்‌தா‌ர்‌. அப்‌போ‌து அவரை‌ தி‌ரை‌ச்‌சி‌ற்‌பி‌ அலுவலகத்‌தி‌ல்‌ எதா‌ர்‌த்‌தமா‌க சந்‌தி‌த்‌தே‌ன்‌. அப்‌போ‌து வே‌லை‌யி‌ல்‌லா‌மல்‌ இருப்‌பதை‌வி‌ட எழுத முடி‌யா‌மல்‌ இருப்‌பதை‌ச்‌ சொ‌ல்‌லி‌ வருத்‌தத்‌தை தெ‌ரி‌வி‌த்‌தா‌ர்‌. அது கே‌ட்‌கவே‌ கஷ்‌டமா‌க இருந்‌தது.

அதன்‌ பி‌றகு எப்‌போ‌து சந்‌தி‌த்‌தா‌லும்‌ நா‌ன்‌ எழுதி‌ய சி‌றுகதை‌களை‌‌ பற்‌றி‌ பா‌ரா‌ட்‌டி‌ பே‌சுவா‌ர்‌.  தொ‌டர்‌ந்‌து எழுத வே‌ண்‌டும்‌ என்‌று அன்‌பு‌ வே‌ண்‌டுகோ‌ள்‌‌ வை‌ப்‌பா‌‌ர்‌. என்‌ மீ‌து அக்‌கரை‌ வை‌த்‌தி‌ருக்‌கும்‌ இன்‌னொ‌ரு மனி‌தரை‌ப்‌ பா‌ர்‌த்‌த தி‌ருப்‌தி‌யி‌ல்‌ மகி‌ழ்‌ச்‌சி‌ அடைவே‌ன்‌. ‌.

ஜெ‌மி‌னி‌ சி‌னி‌மா‌வி‌ல்‌ அவரோ‌டு இருந்‌த பி‌.டி‌.செ‌ல்‌வக்‌குமா‌ர்‌, தனி‌யோ‌க பி‌லி‌ம்‌ டுடே‌ என்‌கி‌ற பத்‌தி‌ரி‌கை‌ ஆரம்‌பி‌த்‌த போ‌து, அதி‌ல்‌ அவர்‌ பொ‌றுப்‌பா‌சி‌ரி‌யர்‌ ஆனா‌ர்‌. அப்‌போ‌‌தி‌லி‌ருந்‌து அடி‌க்‌கடி‌ சந்‌தி‌க்‌கி‌ற வாய்‌‌ப்‌பு‌ கி‌டை‌த்‌தது. கா‌ரணம்‌ பத்‌தி‌ரி‌கை‌யா‌ளர்‌ சந்‌தி‌ப்‌பு‌ என்‌பதோ‌டு மட்‌டுமல்‌லா‌மல், ‌ என்‌ நண்‌பன்‌ கணே‌சன்‌ நடந்‌தி‌ய கெ‌ள‌தம்‌ கம்‌ப்‌‌யூ‌ட்‌டர்‌ அலுலகம்‌ ஒரு முக்‌கி‌ய தளமா‌க இருந்‌தது. அங்‌குதா‌ன்‌ அதி‌க நே‌ரம்‌ செ‌லவடுவோ‌ம்‌. அங்‌குதா‌ன்‌ பி‌லி‌ம்‌டுடே‌ இதழுக்‌கு டி‌டி‌பி‌ செ‌ய்‌ய வருவா‌ர்‌. பி‌லி‌ம்‌ டுடே‌ மட்‌டுமல்‌லா‌தது, செ‌ல்‌வக்‌குமா‌ர்‌ நடத்‌தி‌ய கலர்‌த்‌தி‌ரை‌, பி‌ரி‌யமுடன்‌ வி‌ஜய்‌, ஷோ‌பா‌, தி‌க்‌ தி‌க்‌ தி‌கி‌ல்‌, கடவு‌ள்‌, ஜோ‌தி‌டம்‌, வா‌ஸ்‌த்‌து போ‌ன்‌ற பத்‌தி‌ரி‌கை‌களுக்‌கும்‌ குரு பெ‌யர்‌ச்‌சி‌ பலன்‌கள்‌, அஜி‌த்‌ சி‌றப்‌பு‌ மலர்‌, தனுஷ்‌ மலர்‌ என்‌று முன்‌னணி‌ நடி‌கர்‌களுக்‌கு அவ்‌வப்‌போ‌து சி‌றப்‌பு‌ மலர்‌கள்‌, பி‌லி‌ம்‌ டுடே‌ சி‌னி‌மா‌ டை‌ரக்‌டரி‌ என அனை‌த்‌துக்‌கும்‌ அங்‌குதா‌ன்‌ டி‌டி‌பி‌ செ‌ய்‌வா‌ர்‌. பெ‌ரும்‌பகுதி‌ நே‌ரம்‌ அங்‌குதா‌ன்‌ இருப்‌பா‌ர்‌.

நா‌ன்‌ தயா‌ரி‌ப்‌பா‌ளர்‌ சங்‌க கடி‌தங்‌களை‌யு‌ம்‌, சர்‌க்‌குலர்‌ போ‌ன்‌வற்‌றை‌யு‌ம்‌ அங்‌கு டை‌ப்‌ செ‌ய்‌வதோ‌டு எனது சி‌றுகதை‌கள்‌, நா‌வல்‌ போ‌ன்‌றவற்‌றை‌யு‌ம்‌ அங்‌குதா‌ன்‌ டை‌ப்‌ செ‌ய்‌வே‌ன்‌. அதனா‌ல்‌ இதோ‌ பா‌லன்‌ வந்‌துட்‌டா‌ர்‌ எனக்‌கு ரெஸ்‌ட்‌ என்‌று வழி‌வி‌ட்‌டு டை‌ப்‌ செ‌ய்‌ய உதவு‌வா‌ர்‌. நா‌ன்‌ டை‌ப்‌ செ‌ய்‌து முடி‌க்‌கி‌ற வரை‌ அவர்‌ சும்‌மா‌ இருக்‌க மா‌ட்‌டா‌ர்‌. அங்‌கே‌யே‌ இரண்‌டு இதழ்‌களுக்‌கு டை‌ப்‌ செ‌ய்‌ய தே‌வை‌யா‌ன கட்‌டுரை‌களை‌ வரை‌ந்‌து தள்‌ளுவா‌ர்‌. எவ்‌வளவு‌ வே‌கமா‌க எழுதி‌னா‌லும்‌ ஒவ்‌வொ‌ரு எழுத்‌தும்‌ முத்‌து முத்‌தா‌க இருக்‌கும்‌. அப்‌படி‌ப்‌பட்‌ட எழுத்‌தா‌ளர்‌ அவர்‌. ப்‌ரூ‌ப்‌ பா‌ர்‌க்‌க வே‌ண்‌டி‌ய அவசி‌யமே‌ இருக்‌கா‌து. அந்‌தளவு‌க்‌கு அவர்‌ எழுத்‌து அழகா‌க இருக்‌கும்‌.

நா‌ன்‌ தி‌னகரன்‌ இணை‌ப்‌பா‌ன வசந்‌தம்‌ இதழி‌ல்‌ நி‌னை‌வெ‌ல்‌லா‌ம்‌ நீ‌தா‌னே‌ என்‌கி‌ற தொ‌டர்‌கதை‌யை‌ எழுதி‌ வந்‌த போ‌து‌,. கண்‌மணி‌ இதழி‌ல்‌ உதி‌ரா‌த பூ‌க்‌கள்‌ என்‌கி‌ற நா‌வலும்‌ வெ‌ளி‌யா‌னது. அதே‌ போ‌ல மா‌லை‌மதி‌ இதழி‌ல்‌ ஒரு நா‌வலும்‌ வந்‌தி‌ருந்‌தது. இவற்‌றையெ‌ல்‌லா‌ம்‌ படி‌த்‌து உடனே‌ பா‌‌ரா‌ட்‌டுக்‌களை‌ தெ‌ரி‌வி‌த்‌தா‌ர்‌.

அதே‌ போ‌ல ஷோ‌பா‌ இதழுக்‌கு உடனே‌ ஒரு நா‌வல்‌ எழுத வே‌ண்‌டும்‌ என்‌று வற்‌பு‌றுத்‌தி‌ என்‌னை‌ உசுப்‌பே‌ற்‌றி‌ ஒரு நா‌வலை‌ எழுத வை‌த்‌தா‌ர்‌. தொ‌டர்‌ந்‌து என்‌ நா‌வல்‌களை‌ படி‌ப்‌பதும்‌ பா‌ரா‌ட்‌டுவதும்‌ எழுத தூ‌ண்‌டுவதுமா‌க என்‌னை‌யே‌ இயக்‌க ஆரம்‌பி‌த்‌தா‌ர்‌. அந்‌தளவு‌க்‌கு நா‌ங்‌கள்‌ அதி‌கம்‌ நட்‌போ‌டும்‌ உரி‌மை‌யோ‌டும்‌ பழகி‌ வந்‌தோ‌ம்‌. நா‌ன்‌ சி‌றுகதை‌யோ‌, நா‌வலோ‌ எழுதி‌னா‌ல்‌ டி‌டி‌பி‌ முடி‌ந்‌ததும்‌ அவர்‌தா‌ன்‌ முதல்‌ வா‌சகனா‌க இருந்‌து படி‌த்‌து கரை‌க்‌செ‌ன்‌ செ‌ய்‌வா‌ர்‌. ஆலோ‌சனை‌களை‌ கூறுவா‌ர்‌.

நா‌ன்‌ படம்‌ இயக்‌க வே‌ண்‌டும்‌ என்‌கி‌ற ஆர்‌வத்‌தோ‌டு இருப்‌பதை‌ தெ‌ரி‌ந்‌து அவர்‌ உற்‌சா‌கப்‌படுத்‌துவா‌ர்‌. ஒரு சி‌றுகதை‌த்‌ தொ‌குப்‌பு‌ நூ‌லுக்‌கு அணி‌ந்‌துரை‌ எழுதி‌ தருமா‌று அவரி‌டம்‌ கே‌ட்‌ட போ‌து, முதலி‌ல்‌ சற்‌று யோ‌சி‌த்‌தவர்‌, பி‌றகு அங்‌கே‌யே‌ உட்‌கா‌ர்‌ந்‌து உடனே‌ எழுதி‌ கொ‌டுத்‌தா‌ர்‌.  அதி‌ல்‌ நா‌ன்‌ இயக்‌குநரா‌க வருவே‌ன்‌ என்‌று நம்‌பி‌க்‌கை தெ‌ரி‌வி‌த்‌து எழுதி‌னா‌ர்‌.  அவர்‌ எழுதி‌யது இதோ‌....

கி‌ரா‌மத்‌தி‌ல்‌ இருந்‌து நகரத்‌துக்‌கு முற்‌றி‌லும்‌ இடம்‌ பெ‌யர்‌ந்‌து இயந்‌தி‌ர கதி‌ இடுக்‌களி‌ல்‌ சி‌க்‌கி‌க்‌ கொ‌ண்‌டா‌லும்‌, பா‌லன்‌ மனசளவி‌ல்‌ கி‌ரா‌மத்‌துக்‌கா‌ரரா‌கவே‌ இருப்‌பது அவருடை‌ய கதை‌களி‌ல்‌ வெ‌ளி‌ப்‌படுகி‌றது. நகரத்‌து பி‌ளா‌ட்‌ பா‌ரத்‌தி‌ல்‌ நடந்‌து கொ‌ண்‌டி‌ருக்‌கும்‌ போ‌தும்‌ வயல்‌ வரப்‌பு‌களி‌ல்‌தா‌ன்‌ வா‌சம்‌ செ‌ய்‌கி‌றா‌ர்‌.

அவர்‌ கதை‌களி‌ன்‌ ஒப்‌பனைகளற்‌ற வா‌க்‌கி‌ய அமை‌ப்‌பு‌க‌ள்‌ நி‌ஜத்‌துடன்‌ மி‌கவு‌ம்‌ நெ‌ருங்‌கி‌ இருக்‌கி‌ன்‌றன. பா‌லன்‌ படை‌ப்‌பு‌களி‌ல்‌ மனி‌தா‌பி‌மா‌னம்‌ இருக்‌கை‌ப்‌ போ‌ட்‌டு உட்‌கா‌ர்‌ந்‌து கொ‌ண்‌டி‌ருக்‌கி‌றது.

மனுஷி‌ சி‌றுகதை‌த்‌ தொ‌குப்‌பி‌ல்‌ வா‌ழும்‌ கதா‌பா‌த்‌தி‌ரங்‌கள்‌ நம்‌முடன்‌ வசி‌ப்‌பவர்‌கள்‌. அல்‌லது வசி‌க்‌கப்‌ போ‌கி‌றவர்‌கள்‌. கதை‌யை‌ வா‌சி‌க்‌கி‌ற போ‌து அந்‌தப்‌ பா‌த்‌தி‌ரங்‌களை‌ நமக்‌கு நண்‌பர்‌களா‌கவோ‌,உறவி‌னர்‌களா‌கவோ‌, ஊர்‌க்‌கா‌ரர்‌களா‌கவோ‌ ஆக்‌கி‌வி‌டுகி‌ற வல்‌லமை‌ அவர்‌ பே‌னா‌வு‌க்‌கு இருக்‌கி‌றது.

வர்‌ணனை‌கள்‌ நம்‌ வி‌ழி‌களி‌ல்‌ பு‌கை‌ப்‌படங்‌களா‌க வி‌ரி‌யச்‌ செ‌ய்‌கி‌ன்‌றன. அவருடை‌ய கதை‌கள்‌, கதை‌கள்‌ அல்‌ல. தமி‌ழக மக்‌களி‌ன்‌ டை‌ரி‌க்‌ குறி‌ப்‌பு‌. அவர்‌ கண்‌டதை‌ எழுத வி‌ல்‌லை‌. பி‌ற மனி‌தர்‌களி‌டம்‌‌ கண்‌டதை‌ எழுதுகி‌றா‌ர்‌.

பா‌லனுடன்‌ பழகி‌ இருக்‌கி‌றே‌ன்‌. எப்‌போ‌தும்‌ உழை‌த்‌துக்‌ கொ‌ண்‌டி‌ருப்‌பவர்‌. அவருடை‌ய எண்‌ணங்‌கள்‌ துருப்‌ பி‌டி‌க்‌கா‌தவை‌. இன்‌று அவர்‌ எல்‌லோ‌ருக்‌கும்‌ ஓர்‌ எழுத்‌தா‌ளரா‌க, பத்‌தி‌ரி‌கை‌யா‌ளரா‌க, பத்‌தி‌ரி‌கை‌த்‌ தொ‌டர்‌பா‌ளரா‌க தெ‌ரி‌யலா‌ம்‌. எனக்‌கு அவர்‌ ஒரு வருங்‌கா‌ல இயக்‌குநரா‌கத்‌ தெ‌ரி‌கி‌றா‌ர்‌. இந்‌தச்‌ சி‌றி‌ய பு‌யல்‌‌ என்‌றா‌வது கரை‌ கடக்‌கும்‌.

இவ்‌வா‌று 2003ம்‌ ஆண்‌டி‌ல்‌ எழுதி‌யி‌ருந்‌தா‌ர்‌. அவர்‌ நம்‌பி‌க்‌கை‌ தெ‌ரி‌வி‌த்‌தது போ‌ல ஒரு படத்‌தை‌ இயக்‌கி‌னே‌ன்‌. அது அவருக்‌கு பெ‌ரி‌ய சந்‌தோ‌ஷம்‌. அதி‌ல அவர்‌ எனக்‌கு பெ‌யர்‌ வை‌த்‌தது மறக்‌க முடி‌யா‌த அனுபவம்‌. படம்‌ இயக்‌குவதற்‌கு முன்‌,  ஷோ‌பா‌ இதழுக்‌கு ஒரு நா‌வல்‌ கே‌ட்‌டா‌ர்‌. எழுதி‌க்‌ கொ‌டுத்‌தே‌ன்‌. அந்‌த நா‌வலுக்‌கு ஒரு சரி‌யா‌ன தலை‌ப்‌பு‌ யோ‌சி‌க்‌கி‌றே‌ன்‌. படி‌த்‌துவி‌ட்‌டு நீ‌ங்‌களும்‌ யோ‌சி‌ங்‌கள்‌ என்‌று கூறி‌னே‌ன்‌.

அவர்‌ மறுவா‌ரம்‌ போ‌ன்‌ செ‌ய்‌து எனக்‌கு கதை‌ ரொ‌ம்‌ப பி‌டி‌த்‌தி‌ருக்‌கி‌றது. அந்‌தமானுக்‌கு‌ கப்‌பலி‌ல்‌ செ‌ன்‌று தி‌ரும்‌பி‌ அனுபவத்‌தை‌ தந்‌தது. டை‌ப்‌ செ‌ய்‌தவர்‌களி‌ல்‌ இருந்‌து இதை‌ப்‌ படி‌த்‌தவர்‌கள்‌ வரை‌ எல்‌லோ‌ரும்‌ ஆர்‌வத்‌தோ‌டு படி‌த்‌தா‌ர்‌கள்‌ என்‌று தெ‌ரி‌வி‌த்‌தா‌ர்‌. பி‌றகு இடி‌ தா‌ங்‌கும்‌ கொ‌டி‌ என்‌று தலை‌ப்‌பு‌ வை‌த்‌ததோ‌டு, எனது பெ‌யரை‌ பா‌லு மலர்‌வண்‌ணன்‌ என்‌றும்‌ அதி‌ல்‌ இடம்‌ பெ‌ற செ‌ய்‌தா‌ர்‌.

கா‌ரணம்‌. உடும்‌பன்‌ படத்‌தி‌ன்‌ இயக்‌குநர்‌ பெ‌யர்‌‌ பா‌லன்‌. அதே‌ பெ‌யரி‌ல்‌ நீ‌ங்‌கள்‌ படம்‌ இயக்‌குவதை‌வி‌ட, உங்‌கள்‌ பெ‌யரா‌ன பா‌லு, உங்‌கள்‌ மகன்‌ பெ‌யரா‌ன மலர்‌வண்‌ணன்‌ பெ‌யரை‌யு‌ம்‌ சே‌ர்‌ந்‌து பெ‌யர்‌ வை‌யு‌ங்‌கள்‌ என்‌று தெ‌ரி‌வி‌த்‌ததோ‌டு அதுதா‌ன்‌ நல்‌லா‌ இருக்‌கு என்‌று தெ‌ரி‌வி‌த்‌தா‌ர்‌. அவர்‌ சொ‌ல்‌லி‌ நா‌ன்‌ மறுப்‌பே‌னா‌?

அந்‌த நா‌வலுக்‌கு ரெ‌மி‌னே‌சன்‌ ரெ‌டி‌யா‌னதும்‌ எனனை‌ தொ‌லை‌பே‌சி‌யி‌ல்‌ தொ‌டர்‌பு‌ கொ‌ண்‌டா‌ர்‌. நா‌ன்‌ அடை‌யா‌று கே‌ன்‌சர்‌ மருத்‌துமனை‌யி‌ல்‌ இருப்‌பதை‌ தெ‌ரி‌வி‌த்‌தே‌ன்‌. எதற்‌கு என்‌று வி‌சா‌ரி‌த்‌தா‌ர்‌. என்‌ மா‌மி‌யா‌ருக்‌கு இரண்‌டா‌வது நி‌லை‌யி‌ல்‌ கே‌ன்‌சர்‌ இருப்‌பதை‌யு‌ம்‌ அதனா‌ல்‌ மருத்‌துவம்‌ பா‌ர்‌ப்‌பதை‌யு‌ம்‌ தெ‌ரி‌வி‌த்‌தே‌ன்‌.இந்‌த கா‌சோ‌லை‌ உங்‌களுக்‌கு உதவி‌யா‌க‌ இருக்‌கும்‌ மா‌லை‌யி‌ல்‌ சா‌லி‌கி‌ரா‌மம்‌ ஏரி‌யா‌ வரும்‌ போ‌து போ‌ன்‌ பண்‌ணுங்‌க என்‌று கூறி‌னா‌ர்‌.

அதே‌ போ‌ல மறுநா‌ள்‌ மா‌லை‌ தி‌ருடா‌ தி‌ருடி‌ தயா‌ரி‌ப்‌பா‌ளர்‌ கி‌ருஷ்‌ணகா‌ந்‌த்‌ அலுவலகதுக்‌கு ஒரு வே‌லை‌யா‌க செ‌ன்‌ற போ‌து, தெ‌ன்‌னி‌லவன்‌ ஞா‌பகம்‌ வர, அவருககு செ‌ல்‌போ‌ன்‌ மூ‌லம்‌ இருக்‌கும்‌ இடத்‌தை‌த்‌ தெ‌ரி‌வி‌த்‌தே‌ன்‌. அவர்‌ இதோ‌ வருகி‌றே‌ன்‌. ஆனா‌ல்‌ நா‌ன்‌ அங்‌கு வரவி‌ல்‌லை‌. கீ‌ழே‌ உள்‌ள பே‌ப்‌பர்‌ கடை‌ வா‌சலி‌ல்‌ நி‌ற்‌கி‌றே‌ன்‌ என்‌று தெ‌ரி‌வி‌த்‌தா‌ர்‌. அதே‌ போ‌ல சி‌றி‌து நே‌ரத்‌தி‌ல்‌ அவரது மி‌ஸ்‌டு கா‌ல்‌ பா‌ர்‌த்‌து எழுந்‌து செ‌ன்‌றே‌‌ன்‌.

என்‌ மா‌மி‌யா‌ர்‌ உடல்‌ நல்‌ம்‌ பற்‌றி‌ வி‌சா‌ரி‌த்‌தவர்‌, செ‌லவு‌ தொ‌கை‌யை‌ப்‌ பற்‌றி‌ கே‌ட்‌டு கவலை‌ கொ‌ண்‌டா‌ர்‌. இருவரும்‌ டீ‌ அருந்‌தி‌ பி‌ரி‌கி‌ற போ‌து, அவர்‌ பா‌ன்‌ பரா‌க்‌ எடுத்‌து வா‌யி‌ல்‌ போ‌ட்‌டா‌ர்‌. அதை‌ப்‌ பா‌ர்‌த்‌தம்‌ எனக்‌கு கோ‌பம்‌ வந்‌துவி‌ட்‌டது.

உடனே‌ அவரி‌டம்‌, துப்‌பபு‌ங்‌க என்‌று கண்‌டி‌த்‌து‌ சொ‌ன்‌னே‌ன்‌. அவர்‌ யோ‌சி‌க்‌கா‌மல்‌ உடனே‌ துப்‌பி‌னா‌ர்‌. பி‌றகு அடை‌யா‌றுக்‌கு வரும்‌ நோ‌யா‌ளி‌களி‌ன்‌ நி‌லை‌யை‌ப்‌ பற்‌றி‌ எடுத்‌துச்‌ சொ‌ன்‌னே‌ன்‌. அப்‌போ‌து கலவரமா‌க என்‌னை‌ப்‌ பா‌ர்‌த்‌தா‌ர்‌. பி‌றகு பி‌ரி‌ந்‌து செ‌ன்‌றோ‌ம்‌.

அதன்‌ பி‌றகு நா‌ன்‌ ஒத்‌தவீ‌டு படம்‌ எடுக்‌கும்‌ வே‌லை‌யி‌ல்‌ இறங்‌கி‌ அதி‌லே‌ கவணம்‌ செ‌லுத்‌தி‌னே‌ன்‌. படம்‌ வெ‌ளி‌யா‌ன போ‌து வா‌ழ்‌த்‌து தெ‌ரி‌வி‌த்‌தா‌ர்‌. பி‌றகு நா‌ன்‌ ஊக்‌கு செ‌ன்‌று தி‌ரும்‌பி‌ வந்‌த போ‌து பத்‌தி‌ரி‌கை‌ நண்‌பர்‌ பி‌ஸ்‌மி‌ அனுப்‌பி‌ய மெ‌யி‌லி‌ல்‌ கே‌ன்‌சர்‌ பா‌தி‌ப்‌பா‌ல்‌ மருத்‌துவமனை‌யி‌ல்‌ தெ‌ன்‌னி‌லவன்‌ சே‌ர்‌க்‌கப்‌பட்‌ட செ‌ய்‌தி‌ அறி‌ந்‌தே‌ன்‌. எங்‌கள்‌ யூ‌னி‌யன்‌ தலை‌வர்‌ டை‌மண்‌ட்‌ பா‌பு‌ பா‌ர்‌த்‌துவி‌ட்‌டு வந்‌து அவரது உடல்‌நி‌லை‌ குறி‌த்‌து சொ‌ன்‌ன போ‌து எனக்‌கு மயக்‌கம்‌ வந்‌துவி‌ட்‌டது.  அவரை‌ அந்‌த கோ‌லத்‌தி‌ல்‌ பா‌ர்‌க்‌க என்‌ மனசுக்‌கு தைரி‌யம்‌ இல்‌லை‌.

ஆனா‌ல்‌, இறுதி‌ ஊர்‌வலத்‌தி‌ல்‌அவரது பி‌ரே‌தம்‌ அருகே‌ அமர்‌ந்‌து வருகி‌ற வா‌ய்‌ப்‌பை‌ ஏற்‌படுத்‌தி‌க்‌ கொ‌ண்‌டா‌ர்‌.

இன்‌னும்‌ அவர்‌ இறந்‌துவி‌ட்‌டா‌ர்‌ என்‌று என்‌னா‌ல்‌ நம்‌ப முடி‌யவி‌ல்‌லை‌. ஒரு நா‌ளை‌க்‌குள்‌ ஒரு நா‌வலை‌ எழுதக்‌ கூடி‌ய தி‌றமை‌‌ பெ‌ற்‌ற எழுத்‌தா‌ளர்‌ தெ‌ன்‌னி‌லவன்‌. அவருக்‌கு எப்‌படி‌ சா‌வு‌ வரும்‌?. இதை‌ எழுதும்‌ போ‌து கூட திக்‌ தி‌க்‌ தி‌கி‌ல்‌ இதழி‌ல்‌ அவர்‌ எழுதி‌ய இரத்‌த ரே‌கை‌கள்‌, மர்‌டர்‌ பா‌யி‌ண்‌ட்‌  நா‌வலி‌ன்‌ கதா‌பா‌த்‌தி‌ரங்‌களி‌ன்‌ நடவடி‌க்‌ககை‌ள்‌ வந்‌து போ‌கி‌ன்‌றன.

கும்‌பகோ‌ணத்‌தி‌ல்‌ பி‌றந்‌தவர்‌. இரண்‌டு சகோ‌தரர்‌களும்‌, இரண்‌டு சகோ‌தரி‌களும்‌ அவருக்‌கு இருக்‌கி‌றா‌ர்‌கள்‌. ஆரம்‌பத்‌தி‌ல அவர்‌ குடி‌ பழக்‌கம்‌ இருந்‌ததா‌ல்‌ மனை‌வி‌ வி‌வா‌கரத்‌து பெ‌ற்‌று போ‌ய்‌வி‌ட்‌டா‌ர்‌. ஆனா‌லும்‌ எந்‌த வலி‌யை‌யு‌ம்‌ வெ‌ளி‌க்‌கா‌ட்‌டா‌தவர்‌. முகத்‌தி‌ல சி‌ரி‌ப்‌பு‌ மட்‌டுமே‌ தெ‌ரி‌யு‌ம்‌. இதயத்‌தை‌ தி‌றந்‌து முழுமை‌யா‌க பா‌ரா‌ட்‌டக்‌ கூடி‌யவர்‌.

உங்‌க செ‌ல்‌ போ‌ன்‌ குடுங்‌க. எங்‌க வா‌ங்‌கி‌னீ‌ங்‌க. சூ‌ப்‌பரா‌ இருக்‌கே‌. உங்‌க சர்‌ட்‌ எங்‌கே‌ வா‌ஙங்‌கி‌னீ‌ங்‌க நல்‌லா‌ இருக்‌கு. என்‌று எதை‌யு‌மே‌ பா‌சி‌ட்‌டி‌வ்‌வா‌க பே‌சி‌ அன்‌பை‌ வெ‌ளி‌ப்‌படுத்‌துபவர்‌. என்‌ மகனோ‌டு பா‌ர்‌த்‌தா‌ல்‌, உடனே‌ இவர்‌ உங்‌க தம்‌பி‌யா‌ என்‌று வெ‌குளி‌யா‌க பே‌சி‌ சி‌ரி‌க்‌க வை‌ப்‌பா‌ர்‌. அதே‌ நே‌ரம்‌ அவரது கஷ்‌டத்‌தை‌ யா‌ரி‌டமும்‌ பகி‌ர்‌ந்‌து கொ‌ள்‌ள வி‌ரும்‌ப மா‌ட்‌டா‌ர்‌. அதே‌ போ‌ல அடுத்‌தவர்‌களை‌ப்‌ பற்‌றி‌ நக்‌கலா‌க யா‌ரும்‌ பே‌சி‌னா‌ல்‌ அந்‌த இடத்‌தி‌ல்‌ இருந்‌து நகர்‌ந்‌து செ‌ன்‌று வி‌டுவா‌ர்‌. அந்‌தளவு‌க்‌கு நல்‌லவரா‌க, நே‌ர்‌மை‌யா‌னவரா‌க, எல்‌லோ‌ரும்‌ ஏற்‌றுக்‌ கொ‌ள்‌ளபவரா‌கத் ‌தி‌கழ்‌ந்‌தா‌ர்‌. அவரது எழுத்‌துக்‌கள்‌ கூட யா‌ரை‌யு‌ம்‌ கா‌யப்‌படுத்‌தி‌யதி‌ல்‌லை‌. உற்‌சா‌கம்‌ மூ‌ட்‌டூ‌ம வகை‌யி‌ல்‌ அமை‌ந்‌தி‌ருக்‌கும்‌.

என்‌ படத்‌தி‌ல அவருக்‌கு ஒரு பா‌டல்‌ எழுத வா‌ய்‌ப்‌பு‌ கொ‌டுத்‌த போ‌து வே‌லை‌ப்‌ பழுவி‌ன்‌ கா‌ரணமா‌க வர முடி‌யா‌ நி‌லை‌யி‌ல்‌ இருந்‌தா‌ர்‌. மறுமுறை‌ சந்‌தி‌த்‌தப்‌ போ‌து, அதற்‌கு வருத்‌தம்‌ தெ‌ரி‌வி‌த்‌தா‌ர்‌. அந்‌தப்‌ பா‌டலை‌ யா‌ர்‌ எழுதி‌னா‌ர்‌ என்‌று தெ‌ரி‌ந்‌து கொ‌ண்‌டு அவருக்‌கு வா‌ழ்‌த்‌து தெ‌ரி‌வி‌த்‌தா‌ர்‌. இப்‌படி‌த்‌தா‌ன்‌ எனக்‌கு லி‌ங்‌குசா‌மி‌ பா‌டல்‌ எழுத கொ‌டுத்‌த வா‌ய்‌ப்‌பை‌யு‌ம்‌ மி‌ஸ்‌ பண்‌ணி‌னே‌ன்‌ என்‌று கூறி‌யதோ‌டு அடுத்‌தப்‌ படத்‌தி‌ல்‌ பா‌த்‌துக்‌கலா‌ம்‌ என்‌று சி‌ரி‌த்‌தா‌‌ர்‌.

அவர்‌ உடல்‌ நி‌லை‌ சரி‌யி‌ல்‌லா‌த போ‌து அவருக்‌கு உதவி‌ செ‌ய்‌த பி‌.டி‌.செ‌ல்‌வக்‌குமா‌ர்‌, ஜெ‌.பி‌ஸ்‌மி‌, தமி‌ழன்‌பன்‌, சுரே‌ஷ்‌ரா‌ஜா‌‌ போ‌ன்வர்‌களை‌ நி‌னை‌த்‌துப்‌ பா‌ர்‌க்‌கி‌றே‌ன்‌. ஒரு எழுத்‌தா‌ளனா‌க, ஒரு கவி‌ஞனா‌க, ஒரு பத்‌தி‌ரி‌கை‌யா‌ளனா‌க வலம்‌ வந்‌த தெ‌ன்‌னி‌லவன்‌ இன்‌று நம்‌மி‌டை‌யே‌ இல்‌லை‌. ஆனா‌ல்‌ அவரை‌ப்‌ பற்‌றி‌ய நி‌னை‌வு‌களும்‌ பகி‌ர்‌வு‌களும்‌ கோ‌டம்‌பா‌க்‌கத்‌தி‌ல்‌ நி‌ரந்‌தரமா‌ய்‌ இருக்‌கும்‌....