Tuesday, August 9, 2011

'ஒத்‌தவீ‌டு' படத்‌தி‌ன்‌ செ‌ய்‌தி‌‌

விஷ்ஷிங் வெல் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தேவ்‌ குமார் தயாரித்து வரும் படம் 'ஒத்த வீடு'. 
இந்தப் படத்தில் புதுமுகங்கள் திலீப்குமார், ஜானவி ஜோடியாக நடிக்க, இவர்களுடன் வடிவுக்கரசி, எம்.எஸ்.பாஸ்கர், திரவிய பாண்டியன், நெல்லை சிவா, இமா‌ன்‌, பந்தனா, ராதா, வாமன் மாலினி, மதுரை‌ சரோ‌ஜா‌, சண்‌முகம்‌, யோ‌கி‌ தே‌வரா‌ஜ்‌ உட்பட பலர் நடித்துள்‌ளனர்‌. 
  
பாலு மலர்வண்ணன் இயக்கும் இந்தப் படத்திற்கு வீ.தஷி இசையமைத்துள்ளார். ஸ்ரீரஞ்சன் ஒளிப்பதிவு செய்துள்‌ளா‌ர்‌. கே‌.இத்‌ரீ‌ஸ்‌, எம்‌. சங்‌கர் இருவரும்‌ இணை‌ந்‌து எடி‌ட்‌டி‌ங்‌ செ‌ய்‌துள்‌ளனர்‌.  

இந்‌தப்‌ படம்‌ பற்‌றி‌ இயக்‌குநர்‌ பா‌லு மலர்‌வண்‌ணன்‌ கூறுகை‌யி‌ல்‌, "கி‌ரா‌மங்‌களி‌ல்‌ ஒத்‌த வீ‌டு பற்‌றி‌ நி‌றை‌ய கே‌ள்‌வி‌ப்‌ பட்‌டி‌ருப்‌பீ‌ர்‌கள்‌. அப்‌படி‌ ஒரு ஒத்‌த வீ‌ட்‌டி‌ல்‌ நடக்‌கும்‌ சம்‌பவம்‌தா‌ன்‌ இந்‌தப்‌ படத்‌தி‌ன்‌ கதை‌. அந்‌த ஒத்‌த வீ‌ட்‌டு தலை‌மை‌ கதா‌பா‌த்‌தி‌ரத்‌தி‌ல்‌ வடி‌வு‌க்‌கரசி‌, நடி‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. ஒரு கி‌ரா‌மத்‌து தா‌யி‌ன்‌ வெ‌ள்‌ளந்‌தி‌யா‌ன மனமும்‌, அதனா‌ல்‌ ஏற்‌படும்‌ வி‌ளைவு‌களும்‌, பி‌ரி‌வு‌ம்‌, பரி‌வு‌ம்‌ தா‌ன்‌ படத்‌தி‌ன்‌ பலமா‌ன கா‌ட்‌சி‌கள்‌.  

வடி‌வு‌க்‌கரசி‌யி‌ன்‌ மகனா‌க கதா‌நா‌யகன்‌ தி‌லீ‌ப்‌குமா‌ர்‌, மகளா‌க பந்‌தனா‌ நடி‌த்‌தி‌ருக்‌கின்‌றனர்‌. ஒருவர்‌ மீ‌து ஒருவர்‌ வை‌த்‌தி‌ருக்‌கும்‌ பா‌சத்‌தை பக்‌கத்‌து வீ‌ட்‌டி‌ல்‌ இருந்‌து பா‌ர்‌ப்‌பது போ‌ல அவர்‌கள்‌ வா‌ழ்‌ந்‌து கா‌ட்‌டி‌யி‌ருக்‌கி‌ன்‌றனர்‌. 
தி‌லீ‌ப்‌குமா‌ருக்‌கு இது முதல்‌ படம்‌ என்‌றா‌லும்‌, பல படங்‌களி‌ல்‌ நடி‌த்‌து நி‌றை‌ய அனுபவம்‌ வா‌ய்‌ந்‌த நடி‌கர்‌ போ‌ல நடி‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. வி‌ல்‌லி‌வலம்‌ கி‌ரா‌மத்‌தி‌ல்‌ வி‌நா‌யகர்‌ கோ‌வி‌லி‌ல்‌ கி‌ரகம்‌ எடுத்‌து தெ‌ருவழி‌‌யா‌க வலம்‌ வந்‌து, அம்‌மன்‌ கோ‌வி‌லி‌ல்‌ இறக்‌கி‌ வை‌க்‌கும்‌ கா‌ட்‌சி‌ எடுத்‌த போ‌து, அந்‌த கி‌ரா‌மத்‌து மக்‌கள்‌ அனை‌வரும்‌ தங்‌கள்‌ செ‌லவி‌ல்‌ மா‌வி‌ளக்‌கு எடுத்‌து ஊர்‌வலமா‌க வந்‌து நடி‌த்‌த தோ‌டு அல்‌லா‌மல்‌, தி‌லீ‌ப்‌குமா‌ரி‌ன்‌ வீ‌ரனா‌ர்‌ ஆட்‌டத்‌தை‌ பா‌ர்‌த்‌து வி‌யந்‌து போ‌னா‌ர்‌கள்‌. அந்‌த பா‌த்‌தி‌ரமா‌கவே‌ படத்‌தி‌ல்‌ வா‌ழ்‌ந்‌து அந்‌த கதா‌ப்பா‌த்‌தி‌ரத்‌தை‌  வா‌ழ வை‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. சண்‌டை‌க் ‌கா‌ட்சி‌யி‌லும்‌ இயல்‌பா‌க நடி‌த்து படப்‌பி‌டி‌ப்‌பு‌ தளத்‌தி‌ல்‌ கை‌ தட்‌டலை‌ வா‌ங்‌கி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌.  

கதா‌நா‌யகி‌ ஜா‌னவி, மும்‌பை‌ அனுபம்‌கெ‌ர்‌ தி‌ரை‌ப்‌படக்‌ கல்‌லூ‌ரி‌யி‌ல்‌ பயி‌ற்‌சி‌ பெ‌ற்‌றவர்‌. வசனங்‌களை‌ உள்‌வா‌ங்‌கி‌க்‌ கொ‌ண்‌டு, தனது தி‌றமை‌யை‌ நன்‌கு வெ‌ளி‌ப்‌படுத்‌தி‌ நடி‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. ‌ தி‌லீ‌ப்‌குமா‌ர்‌, ஜா‌னவி‌‌ இருவரது நடி‌ப்‌பு‌ தி‌றமை‌யை‌ப்‌ பா‌ர்‌த்‌து 350 படங்‌களுக்‌கு மே‌ல்‌ நடி‌த்‌த வடி‌வு‌க்‌கரசி,‌ வி‌யந்‌து, ஆச்‌சர்‌யப்‌பட்‌டா‌ர்‌.‌  

கதா‌நா‌யகனி‌‌ன்‌ பெ‌ரி‌யப்‌பா‌வா‌க, சா‌மி‌யா‌டி‌ வே‌டத்‌தி‌ல்‌ எம்‌.எஸ்‌.பா‌ஸ்‌கர்‌ நடி‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. அவரவர்‌ அவரவர்‌ தெ‌ளி‌வு‌‌க்‌கு தகுந்‌த மா‌தி‌ரி‌ வா‌ழ்‌க்‌கை‌ நடத்‌துவது போ‌ல, அவரும்‌ அவரது தெ‌ளி‌வு‌க்‌கு தகுந்‌த மா‌தி‌ரி‌ பே‌சி‌ வா‌ழும்‌ கதா‌பா‌த்‌தி‌ரத்‌தி‌ல்‌ நடி‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. அவர்‌ அறி‌யா‌த வி‌ஷயங்‌களை‌ப்‌ பற்‌றி‌ யா‌ரும்‌ பே‌சி‌னா‌ல்‌ அவருக்‌கு கோ‌பம்‌ வந்‌து வி‌டும்‌. அப்‌படி‌ ஒரு போ‌ல்‌டா‌ன, கோ‌பக்‌கா‌ரரா‌க நடி‌த்‌து சி‌ரி‌க்‌க வை‌க்‌கி‌றா‌ர்‌. அவரை‌ உசுப்‌பே‌ற்‌றும்‌   வே‌டத்‌தி‌ல இமா‌ன்‌ நடி‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌.  

ஒச்‌சா‌யி‌ படத்‌தி‌ன்‌ தயா‌ரி‌ப்‌பா‌ளரும்‌, அந்‌தப்‌ படத்‌தி‌ல்‌ ஒரு முக்கி‌ய‌ வே‌டத்‌தி‌ல்‌ நடி‌த்‌த வருமா‌ன தி‌ரவி‌ய பா‌ண்‌டி‌யன்‌, இந்‌தப்‌ படத்‌தி‌ல்‌ பசுத்‌ தோ‌ல்‌ போ‌ர்‌த்‌தி‌ய பு‌லி‌ போ‌ன்‌ற ஒரு வி‌ல்‌லன்‌ வே‌டத்‌தி‌ல்‌ நடி‌த்‌து, அந்‌தப்‌ பா‌த்‌தி‌ரத்‌தை‌ வலி‌மை‌ படுத்‌தி‌ இருக்‌கி‌றா‌ர்‌.  

ஆர்‌ட்‌ டை‌ரக்‌டர்‌ சண்‌முகம்‌, இந்‌தப்‌ படத்‌தி‌ல்‌ ஒரு கோ‌பக்‌கா‌ர இளை‌ஞரா‌க நடி‌த்‌தி‌ருக்கி‌றா‌ர்‌. பு‌துமுகம்‌ பந்‌தனா‌, ரா‌தா‌, வா‌மன்‌ மா‌லி‌னி‌, மதுரை‌              சரோ‌ஜா‌ என பலர்‌ நடி‌த்‌தி‌ருக்‌‌கின்‌றனர்‌. கதா‌பா‌த்‌தி‌ரங்‌களுக்‌கு பொ‌ருத்‌தமா‌ன நடி‌கர்‌களை‌ தே‌ர்‌வு‌ செ‌ய்‌து நடி‌க்‌க வை‌த்‌தி‌ருக்‌கி‌றே‌ன்‌.  

ஒரி‌ய மொழியி‌ல்‌ அறுபது படங்‌களுக்‌கு மே‌ல்‌ பணி‌யா‌ற்‌றி‌ய, ஸ்ரீரஞ்‌சன்‌ ரா‌வ் என்கி‌ற ஒளி‌ப்‌பதி‌வா‌ளரை‌, இந்‌தப்‌ படத்‌தி‌ல்‌ பயன்‌ படுத்‌தி,‌ அவரது  தி‌றமை‌யை‌ பயன்‌படுத்‌தி‌க்‌ கொ‌ண்‌டே‌ன்‌. அதே‌ போ‌ல‌ ‌ கே‌ரள அரசி‌ன்‌      சி‌றந்‌த இசை‌யமை‌ப்‌பா‌ளருக்‌கா‌ன வி‌ருது பெ‌ற்‌ற வீ‌.தஷி‌யி‌ன்‌ இசை‌யி‌ல்‌ ஆறு பா‌டல்‌கள்‌ படத்‌தி‌ல்‌ இடம்‌ பெ‌றுகி‌றது. எல்‌லாமே‌ சூ‌ழ்‌நி‌லை‌க்‌கு தகுந்‌த மா‌தி‌ரி‌ எழுதப்‌ பட்‌ட பா‌டல்‌கள்‌.
தா‌னு கா‌ர்‌த்‌தி‌க்‌ எழுதி‌ய வீ‌ரனா‌ர்‌ பா‌டல்‌ பட்‌டி‌ தொ‌ட்‌டி‌யெ‌ங்‌கும்‌ பே‌சப்‌படும்‌. அந்‌த அளவு‌க்‌கு பா‌டலி‌ன்‌ டெ‌ம்‌போ‌ இயல்‌பா‌கவே‌ அமை‌ந்‌தி‌ருக்‌கி‌றது. எனக்‌கு தெ‌ரி‌ந்‌து, வீ‌ரன்‌‌ பா‌ற்‌றிய‌ பா‌டல்‌ இதுவரை‌ வெ‌ளி‌வந்‌ததி‌ல்‌லை என நி‌னை‌க்‌கி‌றே‌ன்‌. அதே‌ போ‌ல பட்‌டுக்‌கோ‌ட்‌டை‌ சண்‌முகசுந்‌தரம்‌,  வா‌ட்‌டா‌குடி‌ ரா‌ஜரா‌ஜன்‌, ‌ சி‌ங்‌கப்‌பூ‌ர்‌ சொ‌.சி‌வக்‌குமா‌ர்‌, இனி‌யதா‌சன்‌ போ‌ன்‌றவர்‌கள்‌ எழுதி‌ய பா‌டல்‌களும்‌ பெ‌ரி‌ய அளவி‌ல்‌ பே‌சப்‌படும்‌. ஒரு    பா‌டலை‌ சி‌ங்‌கப்‌பூ‌ரி‌ல்‌ எடுக்‌க இருக்‌கி‌றே‌‌ன்‌.
வி‌த்‌தி‌யா‌சமா‌ன நடனத்‌தை‌ டா‌ன்‌ஸ்‌ மா‌ஸ்‌டர்‌ ஈஸ்‌வர்‌ பா‌பு‌, ரமே‌ஷ்‌ ரெ‌ட்‌டி‌‌அமை‌த்‌தி‌ருக்‌கி‌ன்‌றனர்‌‌. பரபரப்‌பா‌ன சண்‌டை‌க்‌ கா‌ட்‌சியை‌ ஸ்‌டண்‌ட்‌ மா‌ஸ்‌டர்‌ ‌ தே‌ஜா‌ பயி‌ற்‌சி‌ அளி‌க்‌க படமா‌க்‌கி‌ இருக்‌கி‌றே‌ன்‌.  

கி‌ரா‌மத்‌து கதை‌ என்‌பதா‌ல்‌, கா‌ஞ்‌சி‌பு‌ரம்‌ அருகே‌ உள்‌ள வி‌ல்‌லி‌வலம்‌  கி‌ரா‌மத்‌தி‌லும்‌, தி‌ருத்‌துறை‌ப்‌பூ‌ண்‌டி‌ அருகே‌ உள்‌ள வடசங்‌கந்‌தி‌ கி‌ரா‌மத்‌தி‌லும்‌ படமா‌க்‌கி‌ இருக்‌கி‌றே‌ன்‌.  
மக்‌களி‌டம்‌ நா‌ன்‌ பா‌ர்‌த்‌த வி‌ஷயங்‌களை‌ எடுத்‌து, அதை‌ படமா‌க்‌கி‌ இருக்‌கி‌றே‌ன்‌. நா‌ன்‌ எதை‌யு‌ம்‌ கற்‌பனை‌யா‌க கொ‌ண்‌டு வரவி‌ல்‌லை‌. எல்‌லா‌மே‌ இங்‌கி‌ருந்‌து எடுக்‌கப்‌பட்‌டதுதா‌ன்‌. கலை‌, இலக்‌கி‌யம்‌ யா‌வு‌ம்‌ மக்‌களுக்‌கா‌கத்‌தா‌னே‌!.  

இந்‌தப்‌ படம்‌ தி‌ரை‌யி‌ல்‌ ஓட ஆரம்‌பி‌க்‌கும்‌ போ‌து, முதல்‌ கா‌ட்‌சி‌யி‌லே‌யே‌  அந்‌த கி‌ரா‌மத்‌துக்‌குள்‌ செ‌ன்‌று அங்‌கு தங்‌கி‌, அந்‌தக்‌ கதா‌ப்‌பா‌த்‌தி‌ரங்‌களுடன்‌ பே‌சி‌ பழகி‌, வா‌ழ்‌ந்‌து, படம்‌ முடி‌யு‌ம்‌ போ‌து அந்‌த கி‌ரா‌மத்‌தை‌ வி‌ட்‌டு வெ‌ளி‌யே‌ வருகி‌ற உணர்‌வை‌ ஏற்‌படுத்‌தும்‌ படமா‌க ரசி‌கர்‌களுக்‌கு இருக்‌கும்‌ என நம்‌பு‌கி‌றே‌ன்‌..." என்‌று கூறி‌னா‌ர்‌.
- ஆதம்‌பா‌க்‌கம்‌ ரா‌மதா‌ஸ்‌
     செ‌ய்‌தி‌ தொ‌டர்‌பா‌ளர்‌

Friday, June 24, 2011

பட்டுக்கோட்டையாரின் வாரிசு பாடல் எழுதும் – ‘ஒத்தவீடு’


‘விஷ்ஷிங் வெல்’ புரொடக்ஷன்ஸ் சார்பில் தேவ்குமார் தயாரிக்கும் புதிய படம் ‘ஒத்தவீடு’.

இந்தப் படத்தில் புதுமுகம் திலீப்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.  அவருக்கு ஜோடியாக ஜானவி நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் வடிவுக்கரசி, எம்.எஸ்.பாஸ்கர், வையாபுரி, சுப்புராஜ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் பாலு மலர்வண்ணன். ரஞ்சன் ராவ் ஒளிப்பதிவு செய்ய, வீ. தஷி இசையமைக்கிறார்.

இப்படத்தில் இடம் பெறும் ஆறு பாடல்களில், ஒரு பாடலை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் அண்ணன் மகன், பட்டுக்கோட்டை சண்முகசுந்தரம் எழுதுகிறார். மற்றப் பாடல்களை கவிஞர் ராஜராஜன், தானு கார்த்திக், சிங்கப்பூர் சொ.சிவக்குமார், இனியதாசன், விஜய்கிருஷ்ணா ஆகியோர் எழுதுகின்றனர்.

பேய், பிசாசு பற்றி நாம் சிந்திப்பதால் நமக்கு ஏற்படுவது அச்சமும், மனநோயும்தான் என்ற கருவை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு காஞ்சிபுரம் அருகே உள்ள வில்லிவலம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள எடையூர், சங்கேந்தி போன்ற கிராமங்களில் நடைபெறுகிறது.

இப்படத்திற்கு கலை: சி.சண்முகம், படத்தொகுப்பு: எம்.சங்கர்-இத்ரிஸ், நடனம்: ரமேஷ்ரெட்டி, சண்டைப் பயிற்சி: ஆக்ஷன்  பிரகாஷ், தயாரிப்பு மேற்பார்வை: அண்ணாமலை.

இம்மாதம் படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து ஒரே கட்டமாக நடைபெறுகிறது.

Monday, June 6, 2011

நல்‌ல நடி‌கரா‌க மக்‌களி‌டம்‌ ரீ‌ச்‌ ஆவே‌ன்‌! - பா‌ஸ்‌


பு‌ளு ஓசன்‌ பி‌க்‌சர்‌ஸ்‌ பட நி‌றுவனம்‌ சா‌ர்‌பி‌ல்‌ சி‌த்‌தி‌ரை‌ச்‌செ‌ல்‌வன்‌ தயா‌ரி‌க்‌கும்‌ படம்‌ ‘தலை‌வன்’. இந்‌தப்‌ படத்‌தி‌ல்‌ கதா‌நா‌யகனா‌க நடி‌க்‌கி‌றா‌ர்‌ பா‌ஸ்‌.  தி‌ருமதி‌ சகி‌கலா‌’அக்‌கா‌ள்‌ மகனா‌ன இவர்‌, முதன்‌ முறை‌யா‌க தி‌ரை‌ப்‌படத்‌தி‌ல்‌ நடி‌க்‌கி‌றா‌ர்‌. இதற்‌கா‌க கடுமை‌யா‌ன உடற்‌பயி‌ற்‌சி‌யி‌ன்‌ மூ‌லம்‌ தனது உடல்‌ எடை‌யை‌ குறை‌த்‌துள்‌ளா‌ர்‌.

இது பற்‌றி‌ அவரி‌டம்‌ பே‌சி‌னோ‌ம்‌…..

“எனக்‌கு சி‌றுவயதி‌லி‌ருந்‌தே‌ நடி‌க்‌க வே‌ண்‌டும்‌ என்‌கி‌ற எண்‌ணம்‌ இருந்‌தது. நா‌ன்‌ தலை‌வர்‌ எம்‌.ஜி‌.ஆரி‌ன்‌ படங்‌களை‌ அதி‌கம்‌ வி‌ரும்‌பி‌ப் ‌பா‌ர்‌ப்‌பே‌ன்‌. அதே‌ போ‌ல டெ‌க்‌னி‌க்‌கலா‌வு‌ம்‌ பல வி‌ஷயங்‌களை‌ தெ‌ரி‌ந்‌து வை‌த்‌தி‌ருக்‌கி‌றே‌ன்.‌ இந்‌தப்‌  படம்‌ ஓடும்‌, இந்‌தப்‌ படம்‌ ஓடா‌து என்‌று ஜட்‌ஜ்‌ பண்‌ணுகி‌ற டே‌ஸ்‌ட்‌ எனக்‌கு உண்‌டு.

நா‌ன்‌ படி‌க்‌கும்‌ போ‌தி‌லி‌ருந்‌தே‌ ஜி‌ம்‌முக்‌கு போ‌வே‌ன்‌. தலை‌வர்‌ பா‌டி‌யை‌ பா‌ர்‌க்‌கும்‌ போ‌தெ‌ல்‌லா‌ம்‌ ஒரு எணர்‌ச்‌சி‌ வந்‌து வி‌டும்‌.

இரண்‌டு வருடத்‌துக்‌கு முன்‌பு‌ எனது நண்‌பர்‌ சி‌த்‌தி‌ரை‌ச்‌ செ‌ல்‌வன்‌ என்‌னை‌ பா‌ர்‌த்‌த போ‌து “நா‌ன்‌ தயா‌ரி‌க்‌கும்‌ படத்‌தி‌ல்‌ நீ‌ங்‌கள்‌ நடி‌க்‌க வே‌ண்‌டும்…”‌ என்‌று கே‌ட்‌டா‌ர்‌. “நல்‌ல கதை‌ இருந்‌தா‌ல்‌ பண்‌ணலா‌ம்‌னு…” சொ‌ன்‌னேன்‌.

அதன்‌ பி‌றகு அவர்‌ கதை‌யா‌சி‌ரி‌ய‌ர்‌களை‌ அழை‌த்‌து வந்‌து இரண்‌டு கதை‌களை‌ சொ‌ன்‌னா‌ர்‌.‌  கதை‌க்‌கு நா‌ன்‌ செ‌ட்‌டா‌கி‌ற மா‌தி‌ரி‌ இருந்‌தா‌ல்‌ நடி‌க்‌கலா‌ம்‌னு நா‌னும்‌ முடி‌வு‌ செ‌ய்‌து கதை‌களை‌ கே‌ட்‌டு வந்‌தே‌ன்‌. நி‌றை‌ய கதை‌கள்‌ கே‌ட்‌டோ‌ம்‌.

இதற்‌கி‌டை‌யி‌ல்‌ ஓய்‌வு‌ பெ‌ற்‌ற தி‌ரை‌ப்‌பட கல்‌லூ‌ரி‌ பே‌ரா‌சி‌ரி‌யர்‌ ஒய்‌.வி‌.எஸ்‌.சுப்பி‌‌ரமணி‌யம்‌ என்‌பவரி‌டம்‌ நடி‌ப்‌பு‌ பயி‌ற்‌சி‌ எடுத்‌துக்‌ கொ‌ண்‌டே‌‌ன்‌. இப்‌போ‌து தலை‌வன்‌ படத்‌தி‌ன்‌ கதை‌யை‌ சொ‌ன்‌னதும்‌ எனக்‌கு ரொ‌ம்‌ப பி‌டி‌த்‌தி‌ருந்‌தது. அதற்‌கா‌ன ஸ்‌கி‌ரீ‌ன்பி‌ளே‌ தற்‌போ‌து நடந்‌து வருகி‌றது. இது ஒரு ஆக்‌ஷன்‌ படம்‌.  நா‌ன்‌ நடி‌ப்‌பதற்‌கு பொ‌ருத்‌தமா‌ன ரசி‌கர்‌கள்‌ நம்‌பு‌கி‌ற அளவு‌க்‌கு பக்‌கா‌ கமர்‌சி‌யல்‌ எலி‌மெ‌ண்‌ட்ஸ்‌‌ படத்‌தி‌ல்‌ இருக்‌கு. கடை‌சி‌ ரசி‌கன்‌ வரை‌ என்‌னை‌ கொ‌ண்‌டு போ‌ய்‌ சே‌ர்‌க்‌க கூடி‌ய எண்‌டர்‌ டெ‌ய்‌மெ‌ண்‌ட்‌ படம் இது‌.  என்‌னை‌ப்‌ பொ‌ருத்‌தவரை‌ நல்‌ல நடி‌கரா‌க மக்‌களி‌டம்‌ ரீ‌ச்‌ ஆவே‌ன்‌. அந்‌த நம்‌பி‌க்‌கை‌ எனக்‌கு இருக்‌கு.

இந்‌தப்‌ படத்‌தை‌ இயக்‌க. பி‌ரபல இயக்‌குநர்‌களி‌டம்‌ பே‌சி‌ வருகி‌றா‌ர்‌ தயா‌ரி‌ப்‌பா‌ளர்‌ சி‌த்‌தி‌ரை‌ச்‌செ‌ல்‌வன்‌. இயக்‌குநர்‌ முடி‌வா‌னதும்‌ மற்‌ற நடி‌கர்‌கள்‌ தே‌ர்‌வு‌, படப்‌பி‌டி‌ப்‌பு‌ தளம்‌, களம்‌ பற்‌றி‌யெ‌ல்‌லா‌ம்‌ வி‌ரி‌வா‌க சொ‌ல்‌கி‌றே‌ன்‌. அதே‌ போ‌ல பி‌ரபல முன்‌னணி‌ டெ‌க்‌னீ‌ஷி‌யன்‌களும்‌ படத்‌தி‌ல்‌ பணி‌யா‌ற்‌ற உள்‌ளனர்‌” இவ்‌வா‌று அவர்‌ கூறி‌னா‌ர்‌.

- ஜி‌.பா‌லன்

Friday, May 20, 2011

நடி‌கர் அருண்பாண்டியன் வெற்றி

பேராவூரணி தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் நடிகர் அருண்பாண்டியன் 51010 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் மகேந்திரன் 43816 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். 7194 வாக்குகள் வித்தியாசத்தில் அருண் பாண்டியன் வெற்றி பெற்றார்.

அவருக்‌கு தி‌ரை‌ப்‌பட மக்‌கள்‌ தொ‌டர்‌பா‌ளர்‌ யு‌னி‌யன்‌ சா‌ர்‌பி‌ல்‌ வா‌ழ்‌த்‌து தெ‌ரி‌வி‌த்‌த போ‌து எடுத்‌த படம்‌.

நடிகர் சரத்குமாருக்‌கு வா‌ழ்‌த்‌து

தென்காசி தொகுதியில் போட்டியிட் நடிகர் சரத்குமார் வெற்றி பெற்றார். சரத்குமார் 92,253 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கருப்புசாமி பாண்டியன் 69,286 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். வித்தியாசம் 22,967 வாக்குகள் வித்தியாசத்தில் சரத்குமார் வெற்றி பெற்றுள்ளார்.

அவருக்‌கு தி‌ரை‌யு‌லகி‌னர்‌ வா‌ழ்‌த்‌து தெ‌ரி‌வி‌த்‌து வருகி‌ன்‌றனர்‌. தி‌ரை‌ப்‌பட மக்‌கள்‌ தொ‌டர்‌பா‌ளர்‌ யூ‌னி‌யன்‌ சா‌ர்‌பி‌ல்‌ நடி‌கர்‌ சங்‌கம்‌ செ‌ன்‌று அவரை‌ சந்‌த்‌தித்‌து வா‌ழ்‌த்‌து தெ‌ரி‌வி‌த்‌தோ‌ம்‌. சரத்‌குமா‌ர்‌ நடி‌த்‌த தெ‌ன்‌கா‌சி‌பட்‌டணம்‌, பா‌றை‌, கம்‌பீ‌ரம்‌, ஏய்‌ போ‌ன்‌ற படங்‌களுக்‌கு நா‌ன்‌ மக்‌கள்‌ தொ‌டர்‌பா‌ளரா‌க பணி‌யா‌ற்‌றி‌ இருக்‌கி‌றே‌ன்‌.

எதி‌ர்‌கட்‌சி‌ தலை‌வர்‌ வி‌ஜயகா‌ந்‌த்‌

ரிஷிவந்தியம் தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிட்டார். இதில் 91,194 வாக்குகள் பெற்று விஜயகாந்த் வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் சிவராஜ் 60,369 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். 30375 வாக்குகள் வித்தியாசத்தில் விஜயகாந்த் வெற்றி பெற்றுள்ளார். எதி‌ர்‌க்‌கட்‌சி‌ தலை‌வரா‌கவு‌ம்‌ அமரப்‌போ‌கி‌றா‌ர்‌.

அவருக்‌கு தி‌ரை‌யு‌லகி‌னர்‌ வா‌ழ்‌த்‌து தெ‌ரி‌வி‌த்‌து வருகி‌ன்‌றனர்‌. தி‌ரை‌ப்‌பட மக்‌கள்‌ தொ‌டர்‌பா‌ளர்‌ யூ‌னி‌யன்‌ சா‌ர்‌பி‌ல்‌ வா‌ழ்‌த்‌து கூற செ‌ன்‌ற போ‌து நலம்‌ வி‌சா‌ரி‌த்‌தா‌ர்‌ கே‌ப்‌டன்‌. அவரது தை‌ரி‌யம்‌ நம்‌பி‌க்‌கை‌ வளர்‌ச்‌சி‌ முன்‌னே‌ற்‌றம்‌ பற்‌றி‌ வி‌யந்‌து பா‌ரா‌ட்‌டி‌ வந்‌தே‌ன்‌.

ஷகீ‌லா‌ பா‌டி‌ய குத்‌துப்‌பா‌ட்‌டு!

சத்ய சாய் கிரியேஷன்ஸ் சார்பில் ஏ.லஷ்மண்ராவ், பி.சீனிவாசராவ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் ‘சண்முகிபுரம்’. இந்தப் படத்தில் மனோஜ் கதாநாயகனாக நடிக்க, அவருடன் அந்த்ர விஸ்வாஸ், ஷாதிகா இருவரும் நாயகிகளாக நடிக்க என்.ஆர்.என்.செழியன் டைரக்ஷன் செய்கிறார்.

இந்தப் படத்தின் பாடல் பதிவு ஏ.வி.எம். ஸ்டுடியோவில் உள்ள ‘ஜி’ தியேட்டரில் நேற்று முன்தினம் (ஏப்.16) காலை நடைபெற்றது. இந்த படத்தில் இடம் பெறும் “சொடக்கு போடு சொடக்கு போடு சொர்னாக்கா…. மடக்கி போடு மடக்கி போடு மங்காத்தா…” என்கிற பாடலை நடிகை ஷகிலா பாடினார். அவருடன் இணைந்து பாடகி அமிர்தா, சலோனி இருவரும் சேர்ந்து பாடினார்கள்.

இந்தப் பாடலை பாடலாசிரியர் விஜய்கிருஷ்ணா எழுத, வீ. தஷி இசையமைத்தார். மேலும் பட்டுக்கோட்டை சண்முகசுந்தரம், தாணுகார்த்திக், கவிஞர் கணேசன் ஆகியோர் பாடல்கள் எழுதுகின்றனர்.

இம்மாதம் இறுதியில் படப்பிடிப்பு தொடங்குகிறது. சென்னை மற்றும் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இந்தப் படத்திற்கு கெளதம் கதை எழுத, ஆதி ஒளிப்பதிவு செய்கிறார். பத்ரன் படத்தொகுப்பை கவணிக்கிறார். செந்தாமரை சுரேஷ் நடனம் அமைக்கிறார். ஒரு பாடலுக்கு ஷகிலா நடனம் ஆடுவதோடு, நகைச்சவை கலந்த ஒரு கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்.

இந்தப் படத்தில் நடிப்பது பற்றி நடிகை ஷகிலா கூறுகையில், சத்ய சாய் கிரியேஷன்ஸோட சண்முகிபுரம் படத்தில் இப்போ நடிக்கப் போறேன். இந்தப் படத்துல வித்தியாசமான காமெடி காட்சிகள் எனக்கு சொல்லிருக்காங்க. இந்தப் படத்திலேந்து காமெடியில் ஒரு பிரேக் எதிர்பார்க்கிறேன்.

இந்தப் பத்தின் பாடல்கள் ரொம்ப நல்லா வந்திருக்கு. இதுல ஒரு பாடலில் நான் ஆரம்பதில் நடிக்கிறேன். அதன் பிறகு வேறு நடிகை நடிப்பாங்க. அந்த பாடலில் நானே பாடி நடிச்சா நல்லா இருக்கும்னு டைரக்டர் செழியன் விரும்பினார். அதனால் பாடி பார்க்கலாம்னு டிரைப் பண்ணுனோம். எப்படி வந்திருக்குன்னு தெரியலை. நான் துவக்கி வைக்கிற இந்தப் பாடலில் எனக்கு பிறகு அமிர்தா என்கிற பொண்ணு பாடுறாங்க. இந்தப் படத்தோட மியூசிக் டைரக்டர் தஷி, அவர் இசையமைத்த முதல் மலையாள படத்திற்கே இசைக்காக விருது வாங்கினவர். அவர் இசையில் பாடியது சந்தோஷமா இருக்கு” என்றார்

தொடர்ந்து பாட்டு பாட வாய்ப்பு கிடைத்தால் பாடுவீங்களா?

முதன் முதலா டிரைப் பண்ணிருக்கேன். குரல் நல்லா இருக்குன்னு சொல்லிருக்கிறார். டிரைப் பண்ணுவோம். இந்தத் துறையையும் ஏன் விட்டு வைக்கனும். நடிக்கச் சொன்னால் நடித்துவிடலாம். ஆனால் பாடுறது கஷ்டம்தான்.

வேறு என்ன படங்களில் நடிக்கிறீர்கள்?

தமிழ்ல ரெண்டு மூணு படம் போய்கிட்டு இருக்கு. பேரு மட்டும் கேட்காதீங்க. மைண்ட்ல நிக்காது. நானே கிளாப் போர்டு பார்க்கும் போதுதான், ஓ இந்தப் படம் என தெரிஞ்சுக்குவேன். மத்தபடி கால்ஷீட்மேனஜர் சொன்னா சூட்டிங் போய்டுறதுதான். தமிழ் தவிர கன்னடத்துல அஞ்சு படம் பண்ணிக்கிட்டு இருக்கேன். இதுல சாது காக்கிலாவோட ரெண்டு படம் அவர் காம்பினேஷன்ல பண்றேன். நயன்டி குடி பல்டி அடி என்கிற படத்துல பெரிய ரோல். பாஸ் என்கிற பாஸ்கரன் படம் கன்னடத்துல ரீமேக் பண்றாங்க. அதுல தமிழ்ல நடிச்ச அதே ரோல் பண்றேன். இதுத தவிர மலையாளத்தில் ரெண்டு படத்துல நடிக்கிறேன்.

மலையாளத்தில் நடிக்கிறீங்களா?

ஆமாம். மலையாளத்துல கிட்ட தட்ட ஏழு வருடத்திற்கு பிறகு தேஜா பாய் என்கிற படத்தில், சுராஜ் சார் காம்பினேஷன்ல நடிச்சுக்கிட்டு இருக்கேன். பிரிதிவிராஜ் முக்கிய வேடத்தில நடிக்கிற படம் இது. ரொம்ப ரொம்ப முக்கிகியமான ரோல். இப்போது அங்கே நிறைய கமர்சியல் படங்களுக்கு கேட்கிறாங்க. எனக்கு கேரக்டர் ரோல் தருறாங்க. சந்தோஷமா இருக்கு…” என்றார்.

கே பாலச்சந்தருக்கு பால்கே விருது !

நாட்டின் மிக உயர்ந்த கவுரவமான தாதா சாகேப் பால்கே விருது பெற்ற இயக்குநர் கே பாலச்சந்தருக்கு நாடு முழுவதிலுமிருந்து பாராட்டுக்களும் வாழ்த்துகளும் குவிகின்றன.

இந்திய திரைப்பட துறையின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் பாலச்சந்தரின் பங்களிப்புக்காக வழங்கியதற்காக இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. பாலச்சந்தருக்கு தங்க தாமரையும், ரூ. 10 லட்சம் ரொக்கமும் வழங்கப்படும்.

விருது பெற்றது குறித்து பாலச்சந்தர் கூறும்போது, “சிவாஜிக்கு பிறகு எனக்கு இவ்விருது கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்விருதை தமிழ் ரசிகர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்”, என்றார்.

ராணா படப்பிடிப்பு துவக்கிழாவில் பாலச்சந்தர் கலந்து கொண்டபோதுதான் இந்த செய்தி வெளியானது. உடனே, படக்குழுவினர் அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

ரஜினி முதல் ஆளாக பாலச்சந்தருக்கு வாழ்த்துத் தெரிவித்தார். இந்த விருது மூலம் தமிழ் சினிமாவையே பெருமைப்படுத்திவிட்டார் கேபி சார், என்றார் ரஜினி.

பாலச்சந்தருக்கு இவ்விருது தாமதமாக கிடைத்துள்ளது. விருது கமிட்டியில் நான் இருந்திருந்தால் ஏக் துஜே கேலியே படத்துக்கு முன்பே கொடுத்திருப்பேன். விருது கொடுத்த இந்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்றார்.

நடிகர் பிரகாஷ்ராஜ் கூறும்போது, இயக்குனர் பாலச்சந்தருக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருது கிடைத்ததன் மூலம் அவ்விருதுக்கு அழகும் அர்த்தமும் கிடைத்துள்ளது. நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். இந்த கவுரவத்தால் திரையுலகமே பெருமை பெற்றுள்ளது, என்றார்.

மேலும், திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன், பிலிம் சேம்பர் முன்‌னா‌ள்‌ தலைவ்ர கேஆர்ஜி, பெப்ஸி தலைவர் விசிகுகநாதன் உள்ளிட்ட அனைத்து சினிமா சங்க தலைவர்களும் பாலச்சந்தருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடத் திரையுலகினர் பாலச்சந்தருக்கு பாராட்டு தெரிவித்தனர்.பால்கே விருது பெற்ற பாலச்சந்தருக்கு அனைத்து மொழி சினிமா கலைஞர்களும் பங்கேற்கும் விதத்தில் விரைவில் பாராட்டு விழா நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.


பிரபுவுக்கு டாக்டர் பட்டம்

நடிகர் பிரபு, இசையமைப்பாளர் கங்கை அமரன், விஞ்ஞானி சுந்தரேஷ் ஆகியோருக்கு டாக்டர் பட்டத்தை சத்திய பாமா பல்கலைக் கழக வேந்தர் ஜேப்பியார் வியாழக்கிழமை வழங்கினார்.

சென்னை சோழிங்கநல்லூர் சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் 20-வது பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவில் டாக்டர் பட்டத்தைப் பெற்றுக்கொண்ட நடிகர் பிரபு பேசியதாவது. மாணவர் பருவம் ஓவ்வொருவர் வாழ்க்கையிலும் மறக்க முடியாதது. இந்த பருவத்தில் தான் நீங்கள் பல்வேறு துறைக்கும் சென்று உங்கள் திறமையை வெளிப்படுத்துகிறீர்கள்.

ஆகவே, நீங்கள் வாழ்க்கையில் சாதனை படைக்க உங்கள் பல்கலைக்கழகவேந்தர் ஜேப்பியாரை நினைத்தால் நீங்கள் அவரைப் போல் சாதனை படைக்க முடியும் என்றார்.

விழாவில் இசையமைப்பாளர் கங்கை அமரன் பேசியதாவது:

ஒவ்வொரு மாணவர்களும் பட்டங்களை பெறும்போது தனது அம்மாவை நினைத்துப் பார்க்க வேண்டும். எல்லோருடைய வெற்றிக்கும் முதல் கடவுள் அம்மாதான். நானும், எனது அண்ணன் இளையராஜாவும் பெற்ற வெற்றிக்கு காரணம் என் அம்மாதான். இப்பொழுது வழங்கப்பட்ட டாக்டர் பட்டத்தின் புகழும் எனது அம்மாவையேச் சேரும் என்றார் கங்கை அமரன்.

விழாவில் டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானி மற்றும் தலைமை கட்டுப்பாட்டு அதிகாரி சுந்தரேஷ் பேசியதாவது: மாணவர்கள் ஆராய்ச்சியில் கவனம் செலுத்தவேண்டும். நீங்கள் ஆராய்ச்சி செய்தால் தான் இந்தியா பல்வேறு துறைகளிலும் முன்னேற முடியும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் 3,485 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

நடிகர் பிரபு, இசையமைப்பாளர் கங்கை அமரன், விஞ்ஞானி சுந்தரேஷ் ஆகியோருக்கு கெüரவ டாக்டர் பட்டங்களை வழங்கினார் பல்கலைக் கழக  வேந்தர்  ஜேப்பியார்.