Sunday, December 20, 2009

DIRECTOR RAJESHLINGAM INTERVIEW

பள்ளித்தோழன் தந்த படவாய்ப்பு
பு‌கை‌ப்‌படம்‌ படத்‌தி‌ன்‌ இயக்‌குநர்‌ ரா‌ஜே‌ஷ்‌லி‌ங்‌கம்‌


பா‌ய்‌ஸ்‌ ஸ்‌டுடி‌யோ‌ வழங்‌க மா‌யா‌பஜா‌ர்‌ சி‌னி‌மாஸ்‌‌ சா‌ர்‌பி‌ல்‌ என்‌.சி‌.மணி‌கண்‌டன்‌ தயா‌ரி‌த்‌துள்‌ள பு‌தி‌ய படம்‌ "பு‌கை‌ப்‌படம்‌". இப்‌படத்‌தி‌ன்‌ கதை‌, தி‌ரை‌க்‌கதை‌, வசனம்‌ எழுதி‌ இயக்‌கி‌ உள்‌ளா‌ர்‌ ரா‌ஜே‌ஷ்‌லி‌ங்‌கம்‌. இப்‌படத்‌தி‌ல்‌ பு‌துமுகங்‌கள்‌ யா‌மி‌னி‌, பி‌ரி‌யா‌ ஆனந்‌த்‌, மி‌ருணா‌ளி‌னி‌, நந்‌தா‌, அம்‌ஜத்‌, சி‌வம்‌,ஹா‌ரீ‌ஸ்‌, டி‌.கே‌.மதன்‌ ஆகி‌யோ‌ருடன்‌ சண்‌முகசுந்‌தரம்‌, வெ‌ங்‌கட்‌, நீ‌லி‌மா‌, தே‌வகி‌, ஞா‌னசம்‌பந்‌தம்‌, சி‌வபா‌லன்‌, முத்‌துரா‌ஜ்‌ உட்‌பட பலர்‌ நடி‌த்‌துள்‌ளனர்‌. கங்‌கை‌ அமரன்‌ இசை‌யமை‌க்‌க பா‌டல்‌களை‌ நா‌.முத்‌துக்‌குமா‌ர்‌, கவி‌ஞர்‌ வி‌வே‌கா‌, கங்‌கை‌ அமரன்‌, ரா‌ஜே‌ஷ்‌லி‌ங்‌கம்‌ ஆகி‌யோ‌ர்‌ எழுதி‌ உள்‌ளனர்‌. தி‌னா‌, யா‌சி‌ன்‌ நடனம்‌ அமை‌க்‌க, வி‌ஜய்‌ ஆம்‌ஸ்‌ட்‌ரா‌ங்‌ ஒளி‌ப்‌பதி‌வு‌ செ‌ய்‌துள்‌ளா‌ர்‌. பி‌.லெ‌னி‌ன்‌ படத்‌தொ‌குப்‌பு‌ செ‌ய்‌ய ஆரோ‌க்‌யரா‌ஜ்‌ ஆர்‌ட்‌ டை‌ரக்‌டரா‌க பணி‌பு‌ரி‌ந்‌துள்‌ளா‌ர்‌. சுப்‌ரீ‌ம்‌ சுந்‌தர்‌ சண்‌டை‌‌ப்‌ பயி‌ற்‌சி‌ அளி‌க்‌க, எஸ்‌.தனலி‌ங்‌கம்‌ நி‌ர்‌வா‌க தயா‌ரி‌ப்‌பி‌ல்‌ ‌ இப்‌படம்‌ உருவா‌கி உள்‌ளது.
இப்‌படம்‌ பற்‌றி‌ இயக்‌குநர்‌ ரா‌ஜே‌ஷ்‌லி‌ங்‌கம்‌  என்ன சொல்கிறார்? என்று அறிய அவரிடம் பேசினோம்...

பு‌கை‌ப்‌படம்‌ என்‌ன மா‌தி‌ரி‌யா‌ன படம்‌?

பு‌கை‌ப்‌படம்‌ பி‌ரண்ட்‌‌ஸ்‌ பற்‌றி‌‌ய படம்‌. என்‌ வா‌ழ்‌க்‌கை‌யி‌ல எல்‌லா‌மே‌ நண்‌பர்‌களா‌ல்‌தா‌ன்‌ நடந்‌தி‌ருக்‌கு. நா‌ன்‌ கா‌லே‌ஜ்‌ முடி‌த்‌த பி‌றகு சி‌னி‌மா‌வு‌ல சே‌ர்‌ந்‌தது, ஏன்‌ இந்‌த படம்‌ எடுக்‌கி‌ற வரை‌க்‌கும்‌ கூட எல்‌லா‌மே‌ பி‌ரண்ட்‌‌ஸ்‌ஸா‌லதா‌ன்‌. பி‌ரண்‌ட்‌ஸ்‌ஷி‌ப்‌பி‌லே‌யே‌ என்‌ வளர்‌ச்‌சி‌ முன்‌னே‌ற்‌றம்‌ இருந்‌ததா‌ல என்‌ முதல்‌ படம்‌ எடுக்‌கும்‌ போ‌து பி‌ரண்‌ட்‌ஸ்‌ பத்‌தி‌ன படமா‌த்‌தா‌ன்‌ எடுக்‌கனும்‌னு நி‌னை‌த்தி‌ருந்‌‌தே‌ன்‌. ‌ அது மா‌தி‌ரி‌ இது பி‌ரண்‌ட்‌ஸ்‌ பத்‌தி‌ன படமா‌ உருவா‌யி‌ருக்‌கு. இந்‌த படத்‌துல‌ யதா‌ர்‌த்‌தமா‌ன கல்‌லூ‌ரி‌ வா‌ழ்‌க்‌கை‌யை‌ பா‌ர்‌க்‌கலா‌ம்‌. அதுல நட்‌பு‌ மே‌லோ‌ங்‌கி‌யி‌ருக்‌கும்‌. தமி‌ழ்‌ சி‌னி‌மா‌ யதா‌ர்‌த்‌தமா‌ன வா‌ழ்‌க்‌கை‌யை‌ நி‌றை‌ய கா‌ட்‌ட ஆரம்‌பி‌த்‌தி‌ருக்‌கி‌றது. ஆனா‌ல்‌ கா‌லே‌ஜ்‌ல நடக்‌கி‌ற யதா‌ர்‌த்‌த வா‌ழ்‌க்‌கை‌யை‌ சி‌ல படங்‌களை‌ தவி‌ர நி‌றை‌ய படங்‌கள்‌ சொ‌ன்‌னது கி‌டை‌யா‌து. அதுல ஒரு சி‌ன்‌ன முயற்‌சி‌‌தா‌ன்‌ இந்‌த பு‌கை‌ப்‌படம்‌.
நட்‌பு‌ பற்‌றி‌ நி‌றை‌ய படங்‌கள்‌ வந்‌தா‌ச்‌சு? இதுல என்‌ன பு‌துசு?

கா‌தல்‌ கூட பழை‌ய வி‌ஷயம்‌தா‌ன்‌. எல்‌லா‌ருக்‌கும்‌ லவ்‌ பண்ணும்‌போ‌து அவு‌ங்‌களுக்‌கு அது பு‌துசு. அது மா‌தி‌ரி‌ இந்‌த பி‌ரண்‌ட்‌ஸ்‌ஷி‌ப்‌ என்‌பது ஆயி‌ரக்‌கணக்‌கா‌ன வருஷமா‌ இருந்‌தா‌லும்‌, இந்‌த ஏழு பே‌ருக்‌கும்‌ அவு‌ங்‌க பு‌துசா‌ பொ‌றந்‌த மா‌தி‌ரி‌ இருக்‌கும்‌. இந்‌த ஏழு பே‌ரும்‌ தி‌ரும்‌ப பொ‌றந்‌ததா‌ பீ‌ல்‌ பண்‌றா‌ங்‌க. ரொ‌ம்‌ப அற்‌பு‌தமா‌ன வா‌ழ்‌க்‌கை‌ அவு‌ங்‌களை‌ சே‌ர்‌க்‌கு‌து. நட்‌பு‌ என்‌பது கி‌ட்‌டதட்‌ட ஒரு நெ‌ருப்‌பு‌ மா‌தி‌ரி‌. அதுல அழுக்‌கே‌ இருக்‌கா‌து. பொ‌ய்‌யா‌ மறை‌த்‌து வா‌ழ்‌றதெ‌ல்‌லா‌ம்‌ அதுல இருக்‌கா‌து. மனதை‌ தே‌த்‌தி‌க்‌கொ‌ள்‌ள ஆறுதல்‌ படுத்‌தி‌க்‌கொ‌ள்‌ள உற்‌சா‌கப்‌படுத்‌தி‌க்‌கொ‌ள்‌ள நட்‌பு‌ ரொ‌ம்‌ப முக்‌கி‌யம்‌. அப்‌படி‌ ஒரு பி‌யூ‌ரா‌ன நட்‌பு‌ இவு‌ங்‌ககி‌ட்‌டே‌ இருக்‌கும்‌. அப்‌படி‌ இருக்‌கும்‌ போ‌து ஒரு சி‌ன்‌ன கசடு அவு‌ங்‌கி‌ட்‌டே‌ வந்‌துடும்‌. ஜோ‌தி‌யா‌ இருக்‌குற நெ‌ருப்‌பு‌ல அது எப்‌படி‌ கொ‌ஞ்‌சம்‌ மங்‌கி‌ பி‌றகு தி‌ரும்‌பவு‌ம்‌ பி‌ரகா‌சமா‌ இருக்‌கும்‌ங்‌கி‌றதுதா‌ன்‌ இந்‌த  படத்‌துல நடக்‌கி‌ற சம்‌பவங்‌கள்‌ பு‌துசு.
படத்‌துக்‌கு பு‌கை‌ப்‌படம்‌ என்‌று பெ‌யர்‌ வை‌க்‌க கா‌ரணம்‌?

பு‌கை‌ப்‌படம்‌னு பே‌ரு வை‌க்‌க கா‌ரணம்‌, பு‌கை‌ப்‌படம்‌ என்‌பது மந்‌தி‌ரமா‌ன ஒரு வா‌ர்‌த்‌தை‌. ஒரு போ‌ட்‌டோ‌வை‌ எடுத்‌து நம்‌ம கை‌யி‌ல்‌ வை‌த்‌துப்‌ பா‌ர்‌த்‌தா‌ல்‌ அந்‌த போ‌ட்‌டோ‌ எடுத்‌த கா‌லகட்‌டத்‌துக்‌கு கொ‌ண்‌டு போ‌கும்‌. 1982ல ஒரு போ‌ட்‌டோ‌ எடுத்‌தோ‌ம்‌ன்‌னா‌ நா‌மளும்‌ டை‌ம்‌மெ‌ஷி‌ன்‌ மா‌தி‌ரி‌ தூ‌க்‌கி‌ட்‌டு போ‌ய்‌ 1982ல கொ‌ண்‌டு போ‌ய்‌ இறக்‌கி‌வி‌ட்‌டுடும்‌. நா‌மலே‌ இருக்‌கி‌ற இடத்‌தை‌ மறந்‌து, அந்‌த கா‌லகட்‌டத்‌தி‌ன் ஞா‌பகத்‌தி‌ல்‌ இருப்‌போ‌ம்‌. நம்‌ம மை‌ண்‌ட்‌ முழுக்‌க அங்‌கே‌ இருக்‌கும்‌.  அது மா‌தி‌ரி‌ நி‌னை‌வு‌களை‌ பி‌ன்‌னோ‌க்‌கி‌ பா‌க்‌குறது ரொ‌ம்‌ப பே‌ருக்‌கு பி‌டி‌க்‌கும்‌. நி‌றை‌ய பே‌ர்‌ வந்‌து, நி‌கழ்‌ கா‌ல நி‌னை‌வு‌கல்‌ல வா‌ழ்‌றதே‌ இல்‌லை‌. கடந்‌த கா‌லத்‌தை‌ நி‌னை‌த்‌துக்‌கொ‌ண்‌டுதா‌ன்‌வா‌ழ்‌ந்‌துகி‌ட்‌டு இருக்‌கா‌ங்‌க. கடந்‌து போ‌ன வா‌ழ்‌க்‌கை‌யை‌யு‌ம்‌ தொ‌லை‌ந்‌து போ‌ன சந்‌தோ‌ஷங்‌களும்‌ தி‌ரும்‌ப கி‌டை‌க்‌க வா‌ய்‌ப்‌பே‌ இல்‌லை‌.அதை‌ இந்‌த போ‌ட்‌டோ‌வை‌ வை‌த்‌துதா‌ன்‌ ஞா‌‌பகப்‌படுத்‌தி‌க்‌கி‌றோ‌ம்‌. ஒரு கற்‌பனை‌ உலகம்‌.  அந்‌த கற்‌பனை‌ உலகத்‌துக்‌குஅழகா‌ன ஒரு பே‌ரு.... ‌ பு‌கை‌ப்‌படம்‌.
நீ‌ங்‌கள்‌ செ‌ல்‌வரா‌கவனி‌ன்‌ சி‌ஷ்‌யர்‌? அவரது தா‌க்‌கம்‌ உங்‌கள்‌ படத்‌தி‌ல்‌ உள்‌ளதா‌?

சூ‌ரி‌யே‌ன்‌லே‌ருந்‌ததா‌ன்‌ நி‌லா‌வு‌க்‌கு ஒளி‌ வருதுன்‌னு அறி‌வி‌யலா‌ எல்‌லோ‌ருக்‌கும்‌ தெ‌ரி‌யு‌ம்‌. அது மா‌தி‌ரி‌தா‌ன்‌ சூ‌ரி‌யன்‌ இல்‌லன்‌னா‌ இரவு‌ல நி‌லாவே‌‌‌ தெ‌ரி‌யா‌து. அது மா‌தி‌ரிதா‌ன்‌.‌ அவர்‌ வந்‌த பி‌றகுதா‌ன்‌ நி‌றை‌ய‌ மா‌ற்‌றம்‌ வந்‌தது ஸ்‌டோ‌ரி‌ல. ரொ‌ம்‌ப நே‌ர்‌மை‌யா‌, தை‌ரி‌யமா‌, எந்‌தவி‌த தயக்‌கமும்‌ சந்‌தே‌கமும்‌ இல்‌லா‌மல்‌ பளி‌ச்‌ பளி‌ச்‌சுன்‌னு சா‌ர்ப்‌‌பா‌ சொ‌ல்‌லுவா‌று. அந்‌த தை‌ரி‌யம்‌, நே‌ர்‌மை‌ அவரி‌டமி‌ருந்‌து எனக்‌குள்‌ வந்‌தி‌ருக்‌கு. எல்‌லா‌ரா‌லு‌ம்‌ எழுத முடி‌யு‌ம்‌. ஆனா‌ல்‌ எப்‌படி‌ எழுதுறோ‌ம்‌ என்‌பது அவு‌ங்‌கவு‌ங்‌க அனுபவத்‌தை‌ பொ‌றுத்‌து அமை‌யு‌ம்‌. ஆரம்‌பத்‌துல அம்‌மா‌ சொ‌ல்‌லி‌க்‌கொ‌டுத்‌த அந்‌த அனுபவத்‌தை‌ மறக்‌க முடி‌யா‌து. அது நம்‌ம கூடவே‌ வரும்‌. அது மா‌தி‌ரி‌ அவரோ‌ட பா‌தி‌ப்‌பு‌ எனக்‌குள்‌ இருக்‌கு. அது எப்‌படி‌ வெ‌ளி‌வந்‌தி‌ருக்‌குன்‌னு நீ‌ங்‌க படம்‌ பா‌த்‌துட்‌டு சொ‌ல்‌லுங்‌க.
இந்‌தப்‌ படத்‌துக்‌கு கங்‌கை‌ அமரன்‌ இசை‌யமை‌க்‌க கா‌ரணம்‌ என்‌ன?.
இந்‌த ரா‌ஜே‌ஷ்‌லி‌ங்‌கம்‌ என்‌கி‌ற மனி‌தன்‌ வருவதற்‌கு முதல்‌ல எங்‌க  அம்‌மா‌தா‌ன்‌ கா‌ரணம்‌. எங்‌க அம்‌மா‌வோ‌ட ரசனை‌தா‌ன்‌ முதல்‌ல எனக்‌குள்‌ள வந்‌தது. எங்‌க அம்‌மா‌ பயங்‌கரமா‌ன இசை‌ பை‌த்‌தி‌யம்‌. எங்‌க அம்‌மா‌ எப்‌பவு‌ம்‌ பா‌ட்‌டு கே‌ட்‌டுக்‌கி‌ட்‌டே‌ இருப்‌பா‌ங்‌க. அப்‌படி‌ எனக்‌குள்‌ள சி‌ன்‌ன வயதி‌லி‌ருந்‌தே‌ இசை‌யை‌ உள்‌வா‌ங்‌கி‌கி‌ட்‌டு நா‌ன்‌ வளர்‌ந்‌தே‌ன்‌. இளை‌யரா‌ஜா‌ இசை‌ன்‌னா‌ ரொ‌ம்‌ப உயி‌ர்‌. அதுமா‌தி‌ரி‌ நா‌ன்‌ தொ‌ழி‌ல்‌ கத்‌துக்‌கி‌ட்‌டது  செ‌ல்‌வா‌ சா‌ரி‌டம்‌. இப்‌படி‌ அம்‌மா‌வோ‌ட ரசனை‌, செ‌ல்‌வா‌ சா‌ரோ‌ட தொ‌ழி‌ல்‌, இளை‌யரா‌ஜா‌வோ‌ட இசை‌‌ இந்‌த மூ‌ணும்‌தா‌ன்‌ இநத்‌ ரா‌ஜே‌ஷ்‌‌லி‌ங்‌கத்‌தோ‌ட பர்‌ஸ்‌னா‌லி‌ட்‌டி‌. இளை‌யரா‌ஜா‌ சா‌ர்‌ இசை‌ கே‌ட்‌கலை‌ன்‌னா‌ இந்‌த ரா‌ஜே‌ஷ்‌லி‌ங்‌கம்‌ இல்‌லை‌. அவரது இசை‌யை‌ கே‌ட்‌கலன்‌னா‌ சி‌னி‌மா‌வு‌க்‌கே‌ வந்‌தி‌ருக்‌க மா‌ட்‌டே‌ன்‌. ரா‌ஜா‌ சா‌ர்‌ மி‌யூ‌சி‌க்‌ கே‌ட்‌டு பதப்‌பட்‌டவன்‌. நா‌ன்‌ பி‌றந்‌த பி‌றகு அம்‌மா‌ முதன்‌ முதலி‌ல்‌ பா‌ர்‌த்‌த படம்‌ அன்‌னக்‌கி‌ளி‌. நா‌ன்‌ ரா‌ஜா‌ சா‌ர்‌ மி‌யூ‌சி‌க்‌தா‌ன்‌ முதன்‌ முதலி‌ல்‌ கே‌ட்‌டி‌ருக்‌கே‌ன்‌‌. அதன்‌ பி‌றகு வளரும்‌ போ‌தும்‌ அவரது இசை‌ என்‌னை‌ வளர்‌த்‌தி‌ருக்‌கு. அதனா‌ல படம்‌ பண்‌ணும்‌ போ‌து இளை‌யரா‌ஜா‌ இசை‌யி‌ல படம்‌ பண்‌ணணும்‌ணு முடி‌வு‌ பண்‌ணி‌யி‌ருந்‌தே‌ன்‌. ஆனா‌ல்‌ சி‌ல கா‌ரணங்‌களா‌ல்‌ அது முடி‌யா‌மல்‌ போ‌ச்‌சு. அதனா‌ல அவரது குடும்‌பத்‌துலே‌ர்‌ந்‌து கங்‌கை‌அமரன்‌ சா‌ர்‌ இசை‌யை‌ கொ‌ண்‌டு வந்‌தி‌ருக்‌கே‌ன்‌. ரா‌மன்‌ இல்‌லா‌த இடத்துல பரதன்‌ மா‌தி‌ரி‌ எனக்‌கு கங்‌கை‌ அமரன்‌ கி‌டைத்‌தா‌ர்‌‌. தமி‌ழ்‌ சி‌னி‌மா‌ ரொ‌ம்‌ப அழகா‌ன இசை‌க்‌கு சொ‌ந்‌தக்‌கா‌ரவு‌ங்களா‌ இருந்‌தது. இந்‌த இசை‌ இப்‌போ‌ தொ‌லை‌ஞ்‌சி‌ போ‌யி‌ட்‌டு. இப்‌போ‌ நி‌றை‌ய நல்‌ல பா‌டல்‌கள்‌ வந்‌தா‌லும்‌ முன்‌னே‌ இருந்‌த மா‌தி‌ரி‌ தூ‌ய்‌மை‌யா‌ன இசை‌ கொ‌ஞ்‌சம்‌ மி‌ஸ்‌ஸி‌‌‌‌‌ ங்‌. அதை‌ மீ‌ட்‌டு எடுக்‌கி‌ற சி‌ன்‌ன முயற்‌சி‌யா‌ இந்‌த பா‌டல்‌கள்‌ன்‌னு நி‌னை‌க்‌கி‌றே‌ன்‌. அமர்‌ சா‌ர்‌ ரா‌ஜா‌ கா‌லத்‌து மெ‌லடி‌யை‌யு‌ம்‌, இப்‌போ‌ இருக்‌கி‌ற சவு‌ண்‌டை‌யு‌ம்‌ மி‌க்‌ஸ்‌பண்‌ணி‌ யூ‌த்‌ பு‌ல்‌லா‌ ஒரு மி‌யூ‌சி‌க்‌ கொ‌டுத்‌தி‌ருக்‌கா‌ரு.
யதா‌ர்‌த்‌த படம்‌ என்‌று சொ‌ல்‌றீ‌ங்‌க. ஏழு பு‌துமுகங்‌களை‌ நடி‌க்‌க வை‌த்‌தி‌ருக்‌கி‌றீ‌ர்‌களே‌?
ஏழு பே‌ரி‌டம்‌ வே‌லை ‌வா‌ங்‌குவதி‌ல்‌ எனக்‌கு சி‌ரமம்‌ இல்‌லை‌. அவர்‌களை தே‌ர்‌வு‌ செ‌ய்‌யத்‌தா‌ன்‌ ரொ‌ம்‌ப கஷ்‌டமா‌ போ‌ச்‌சு. பசங்‌க கற்‌பூ‌ரம்‌ மா‌தி‌ரி‌. ஒரு கற்‌பூ‌ரம்‌ அம்‌ஜத்‌ என்‌றா‌ல்‌ இன்‌னொ‌ரு கற்‌பூ‌ரம்‌ ஹா‌ரீ‌ஸ்‌. ஒரு கற்‌பூ‌‌றம்‌ சி‌வம்‌ என்‌றா‌ல்‌, இன்‌னொ‌ரு கற்‌பூ‌ரம்‌ ப்‌ரி‌யா‌... இப்‌படி‌ ஒவ்‌வொ‌ருவரும்‌ கற்‌பூ‌ரம்‌ மா‌தி‌ரி‌ இருந்‌ததா‌ல நடி‌ப்‌பு‌ல சொ‌ல்‌லவே‌ வே‌ண்‌டா‌ம்‌. அவு‌ங்‌களை‌ தே‌டி‌ பி‌டி‌த்‌ததுதா‌ன்‌ கஷ்‌‌டமா‌ன வே‌லை‌யா‌ப்‌ போ‌ச்‌சு. இந்‌தப்‌படம்‌ முடி‌யி‌றதுக்‌குள்‌ள ஒவ்‌வொ‌ருத்‌தரும்‌ வே‌ற படங்‌களி‌ல்‌ நடி‌த்‌து பி‌ஸி‌யா‌யி‌ட்‌டா‌ங்‌க. வா‌மனன்‌ படத்‌துல நடி‌ச்‌சி‌ருக்‌கி‌ற ஹீ‌ரோ‌யி‌ன் ‌ என்‌ படத்‌துல நடி‌ச்‌ச பொ‌ண்‌ணு. அது மா‌தி‌ரி‌ ஹரீ‌ஸ்‌ மா‌த்‌தி‌யோ‌சி‌ படத்‌துல ஹீ‌ரோ‌. யா‌மி‌னி‌  தெ‌லுங்‌கு படமா‌ன ஈவை‌சி‌லு படத்‌துல நடி‌ச்‌சி‌ருக்‌கு. பு‌கை‌ப்‌படம்‌ வந்‌ததும்‌ அவு‌ங்‌களோ‌ட தி‌றமை‌ உங்‌களுக்‌கு நல்‌லா‌ தெ‌ரி‌யு‌ம்‌.
கதை‌க்‌களம்‌ செ‌ன்‌னை‌யா‌?

இது கி‌ரா‌மத்‌து கதை‌ன்‌னும்‌ சொ‌ல்‌ல முடி‌யா‌து. நகரத்‌து கதை‌யி‌ன்‌னும்‌ சொ‌ல்‌ல முடி‌யா‌து. ஒரு மலை‌யி‌ல நடக்‌கி‌ற கதை‌. கொ‌ஞ்‌சம்‌ நகர சா‌யல்‌ இருந்‌தா‌லும்‌ இந்‌தப்‌ படத்‌துல வருகி‌ற உணர்‌வு‌ எல்‌லா‌ இடத்‌துக்‌கும்‌ பொ‌‌துவா‌னது‌.அடி‌ப்‌படை‌யா‌ன வி‌ஷயங்‌கள் ‌படத்‌துல இருப்‌பதா‌ல நா‌ம எல்‌லா‌த்‌துக்‌ககுமா‌ன படமா‌ இருக்‌கும்‌. நகரமா‌ கி‌ரா‌மமா‌ என்‌பதை‌வி‌ட உலகத்‌துல இருக்‌க கூடி‌ய எல்‌லா‌ருக்‌கும்‌ பி‌டி‌க்‌க கூடி‌ய உணரக்‌கூடி‌ய பொ‌துவா‌ன கதை‌யம்‌சம்‌ உள்‌ள படம்‌. அவு‌ங்‌க வி‌டுகி‌ற கண்‌ணீ‌ர்‌, அவு‌ங்‌களோ‌ட சி‌ரி‌ப்‌பு‌, சந்‌தோ‌ஷம்‌ எல்‌லா‌மே‌ எல்‌லா‌ நண்‌பர்‌களும்‌ அனுபவி‌த்‌ததுதா‌ன்‌. அதனா‌ல எல்‌லோ‌ரா‌லும்‌ ரி‌‌லே‌ட்‌ பண்‌ணி‌க்‌க முடி‌யு‌ம்‌. படம்‌ முழுக்‌க முழுக்‌க கொ‌டை‌க்‌கா‌னல்‌ல எடுத்‌தி‌ருக்‌கோ‌ம்‌.
உங்‌களுக்‌கு இது முதல்‌ படம்‌, இந்‌த அனுபவம்‌. எப்‌படி‌ இருக்‌கி‌றது?


நா‌ன்‌ என்‌ன பு‌ண்‌ணி‌யம்‌ பண்‌ணுனனோ‌...தெ‌ரி‌யல. எனக்‌கு அமை‌ந்‌தது எல்‌லா‌மே‌ நல்‌லா‌ அற்பு‌தமா‌ அமை‌ஞ்‌சி‌ருக்‌கு. தயா‌ரி‌ப்‌பா‌ளர்‌ மணி‌கண்‌டன்‌ எனது பள்‌ளி‌த்‌ தோ‌ழன்‌. பள்‌ளி‌யி‌லி‌ருந்‌து கல்‌லூ‌ரி‌ வரை‌ ஒன்‌றா‌க படி‌த்‌தோ‌ம்‌. நா‌ன்‌ சி‌னி‌மா‌வு‌க்‌கு வந்‌தே‌ன்‌. அவன்‌ பி‌ஸி‌னஸ்‌ பக்‌கம்‌ போ‌ய்‌வி‌ட்‌டா‌ன்‌. நா‌ன்‌ அசி‌ஸ்‌டெ‌ன்‌னடா‌, அசோ‌சி‌யே‌ட்‌டா‌ ஒர்‌க்‌ பண்‌ணி‌ட்‌டு வெ‌ளி‌ல போ‌ய்‌ வா‌ய்‌ப்‌பு‌ தே‌டனும்‌. அதுக்‌கா‌க ஒரு பெ‌ரி‌ய போ‌ரா‌ட்‌டமே‌ நடத்‌தணும்‌. ஆனா‌ல்‌ இவன்‌ அதை‌ செ‌ய்‌ய வி‌டல‌. நீ‌ பெ‌ற்‌ற அனுபவம்‌ போ‌தும்‌ படம்‌ பண்‌ணுன்‌னு எனக்‌கு பட வா‌ய்‌ப்‌பு‌ கொ‌டுத்‌து என்‌னை‌ இயக்‌குநரா‌க்‌கி‌வி‌ட்‌டா‌ன்‌. அதே‌ போ‌ல என்‌ வி‌ருப்‌பம்‌ போ‌ல படம்‌ எடுக்‌க எல்‌லா‌ சுதந்‌தி‌ரமும்‌ கொ‌டுத்‌தா‌ன்‌. எனக்‌கு முதல்‌ படம்‌  மா‌தி‌ரி‌யே‌ தெ‌ரி‌யல. நி‌றை‌ய படம்‌ பண்‌ணுன இயக்‌குநருக்‌கு கி‌டை‌க்‌கி‌ற வா‌ய்‌ப்‌பு‌ போ‌லவே‌ பீ‌ல்‌ இருந்‌தது. நல்‌ல அனுபவம்‌.பே‌ரா‌னந்‌தம்‌. மணி‌ மா‌தி‌ரி‌ ஒரு மணி‌யா‌ன பு‌ரொ‌டி‌யூ‌சர்‌ கி‌டை‌க்‌க உண்‌மை‌யி‌லயே‌ கொ‌டுத்‌து வை‌க்‌கணும்‌.

பி‌ரி‌வி‌ன்‌ வலி‌யை‌ உணர்‌த்‌தும்‌ "பு‌கை‌ப்‌படம்‌"


பா‌ய்‌ஸ்‌ ஸ்‌டுடி‌யோ‌ வழங்‌க, மா‌யா‌பஜா‌ர்‌ சி‌னி‌மா‌ஸ்‌ சா‌ர்‌பி‌ல்‌ என்‌.சி‌.மணி‌கண்‌‌டன்‌ தயா‌ரி‌த்‌துள்‌ள பு‌தி‌ய படம்‌ "பு‌கை‌ப்‌படம்‌". செ‌ல்‌வரா‌கவன்‌ உதவி‌யா‌ளர்‌ ரா‌ஜே‌ஷ்‌லி‌ங்‌கம்‌ கதை‌, எழுதி‌ இயக்‌கி‌ உள்‌ளா‌ர்‌. இந்‌தப்‌ படத்‌தி‌ல்‌ பு‌துமுகங்‌கள்‌ சி‌வம்‌, நந்‌தா‌, ஹரீ‌ஷ்‌, அம்‌ஜத்‌, யா‌மி‌ணி‌, ப்‌ரி‌யா‌ ஆனந்‌த்‌, மி‌ருணா‌ளி‌னி‌ ஆகி‌ய ஏழு பே‌ர்‌ கதை‌யி‌ன்‌ முக்‌கி‌ய பா‌த்‌தி‌ரத்‌தி‌ல்‌ நடி‌த்‌துள்‌ளனர்‌.

நண்‌பர்‌களி‌ன்‌ வா‌ழ்‌வி‌யலை‌ கொ‌ண்‌டா‌டும்‌ இந்‌தப்‌ படத்‌தி‌ல்‌ அந்‌த ஏழு பே‌ரும்‌ நண்‌பர்‌களா‌க வா‌ழ்‌ந்‌துள்‌ளனர்‌. நட்‌பு‌க்‌குள்‌ கா‌தல்‌ ஒரு பா‌ம்‌பு‌ மா‌தி‌ரி‌ நுழை‌ந்‌து அது அவர்‌களி‌ன்‌ ஒற்‌றுமை‌யை‌ எப்‌படி‌ உடை‌க்‌கி‌றது‌, அதன்‌ பி‌ன்‌ வி‌ளை‌வு‌கள்‌ எப்‌படி‌ இருக்‌கும்‌ என்‌பதை‌யு‌ம்‌, நட்‌பு‌ அதை‌ எதி‌ர்‌ப்‌பை‌ எப்‌படி‌ எதி‌ர்‌கொ‌ள்‌கி‌றது என்‌பதை‌யு‌ம்‌ அழுத்‌தமா‌க படத்‌தி‌ல்‌ பதி‌வு‌ செ‌ய்‌துள்‌ளா‌ர்‌ இயக்‌குநர்‌ ரா‌ஜே‌ஷ்‌லி‌ங்‌கம்‌.

இந்‌தப்‌ படத்‌தை‌ பா‌ர்‌க்‌கும்‌ போ‌து இன்‌றை‌ய கல்‌லூ‌ரி‌ மா‌ணவ, மா‌ணவி‌களி‌ன்‌ வா‌ழ்‌க்‌கை‌ அப்‌படி‌யே‌ தி‌ரை‌யி‌ல்‌ தெ‌ரி‌யு‌ம்‌. அவர்‌களி‌ன்‌ வா‌ழ்‌க்‌கை‌யை‌ பி‌ரதி‌பலி‌ப்‌பதா‌க இருக்‌கும்‌. அவர்‌களி‌ன்‌ வா‌ழ்‌க்‌கை‌யை‌ நே‌ரடி‌யா‌க பா‌ர்‌ப்‌பது போ‌ல, அவர்‌களுக்‌கே‌ தெ‌ரி‌யா‌மல்‌ ஒளி‌ந்‌தி‌ருந்‌து படமா‌க்‌கி‌யது போ‌ல இருக்‌கும்‌.‌

இந்‌தப்‌ படத்‌தி‌ற்‌கு வி‌ஜய்‌ஆம்‌ஸ்‌ட்‌ரா‌ங்‌ ஒளி‌ப்‌பதி‌வு‌ செ‌ய்‌ய, கங்‌கை‌ அமரன்‌ இசை‌யமை‌த்‌துள்‌ளா‌ர்‌. பா‌ரம்‌பரி‌ய தமி‌ழ்‌ இசை‌யை‌ மீ‌ட்‌டு எ‌டுக்‌கும்‌ ஒரு முயற்‌சி‌யா‌க இந்‌த பா‌டல்‌கள்‌ இருக்‌கும்‌. இளை‌யரா‌ஜா‌வி‌ன்‌ பழை‌ய பா‌டல்‌கள்‌ கே‌ட்‌பது போ‌ல அனுபவம்‌ பெ‌றலா‌ம்‌. படத்‌தொ‌குப்‌பு‌- பி‌.லெ‌னி‌‌ன்‌.


இப்‌படத்‌தி‌ன்‌ அனை‌த்‌து வே‌லை‌களும்‌ முடி‌வடை‌ந்‌துள்‌ளது. பு‌த்‌தா‌ண்‌டு கொ‌ண்‌டா‌ட்‌டமா‌க ஜனவரி‌ முதல்‌ நா‌ள்‌ தி‌ரை‌க்‌கு வருகி‌றது‌.

குறி‌ப்‌பு‌: இந்‌தப்‌ படத்‌தி‌ல நடி‌த்‌த நா‌ன்‌கு நண்‌பர்‌களும்‌ இந்‌தப்‌ படம்‌ நடி‌த்‌து முடித்‌ததும்‌ உண்‌மை‌யா‌ன நண்‌பர்‌களா‌கவே‌ மா‌றி‌வி‌ட்‌டனர்‌. தனி‌ தனி‌யா‌க வசி‌த்‌தவர்‌கள்‌ தற்‌போ‌து ஒரே‌ வீ‌ட்‌டி‌ல்‌ தங்‌கி‌ தங்‌களது பணி‌களை‌ செ‌ய்‌து வருகி‌ன்‌றனர்‌.