Saturday, November 21, 2009

காவலர் குடியிருப்பு படச்‌ செ‌ய்‌தி‌


யனைடு (குப்பி) படத்தின் மூலம் புகழ்பெற்ற .எம்.ஏர். ரமேஷ் அவர்கள் இயக்கும் புதிய படம் காவலர் குடியிருப்பு. இதன் அனைத்து பணிகளும் முடிந்து ரிலீசுக்குத் தயாராக உள்ளது.

நாட்டில் நடக்கும் கலவரங்கள் பல குடும்பங்களை சிதைத்திருக்கிறது. பல உயிர்களைப் பலிக்கொண்டு இருக்கிறது. பலரை சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் அனுப்பியிருக்கிறது. ஆனால் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது அதைத் தொடர்ந்து பெங்களூரில் நடந்த கலவரத்தில் அத்தனையும் நடந்தது. அத்தனையும் பத்திரிகையில் செய்தியாக வெளிவந்தது. ஆனால் இதே கலவரத்தில் இரு இளம் உள்ளங்கள் இணைந்தது யாரும் அறிந்திராத செய்தி.

 கலவரத்தில் இணைந்த அந்த உள்ளங்கள் கால வெள்ளத்தில எப்படியெல்லாம் இழுத்துச் செல்லப்பட்டனர் என்பது தான் காலவர் குடியிருப்பு படத்தின் கதைச் சுருக்கம். இணைந்த இரு உள்ளங்களும் காவலர் குடியிருப்பில் எதிரெதிர் வீடுகளில் வசித்தவர்கள் என்பது மட்டுமல்ல, மதம், ஜாதி, பொருளாதார ஏற்ற தாழ்வு என்பதைத் தாண்டி நெருக்கமான இரு குடும்பத்து ஜீவன்கள். காதல், தியாகம், தாய்பாசம், விசுவாசம், நன்றிக்கடன், இவை எல்லாவற்றுக்கும் தனது வாழ்க்கையை அர்த்தமாக்கிவிட்டுப் போன ஒரு தமிழ் இளைஞனின் செல்லுலாயிட் வடிவமே காவலர் குடியிருப்பு.

சுப்பிரமணியபுரம், பசங்க படங்களுக்கு இசை அமைத்த ஜேம்ஸ் வசந்தன் இசை அமைத்திருக்கிறார். படத்தில் ஐந்து பாடல்கள் இடம் பெற்றுள்ளது. இதில் நான்கு பாடல்கள் பின்னணியில் ஒலிக்க கதைக்கான காட்சிகள். பாடல் வரிகளுக்கேற்ப படமாக்கப்பட்டுள்ளது. அதாவது பாடலுக்கென்று அலங்காரமான தனிக் காட்சிகள் எதுவுமில்லை. பாடல்களை பார்க்கத் தவறினால்கதையில் தொடர்ச்சி பாதிக்கும் என்பது தான் இதன் சிறப்பம்சம். அதற்காக பாடல் காட்சி நேரத்தில் ரசிகர்கள் தியேட்டரை விட்டு எழுந்து வெளியே செல்லாத வகையில் அழகாகவும், அற்புதமாகவும் பாடல்கள் படமாக்கப்பட்டுள்ளது. பாடல்களைத் தனித்து பார்க்கும் போது அதன் உணர்வையும், அழகையும் ரசிக்க முடியும். ஒரே ஒரு பாடல் இளைஞர்கள் தங்களைப் பற்றி கூறும் பாடலாக அமைக்கப்பட்டிருக்கிறது. நான்கு பாடல்களை நா.முத்துக்குமார் அவர்களும், ஒரு பாடலை யுகபாரதி அவர்களும் எழுதி உள்ளார்கள்.

புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் துவாரகநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். கதை 1968, 1992, 2009 என மூன்று காலக்கட்டங்களில் நடப்பதால். அந்தந்த காலக்கட்டத்தை பிரித்துக் காட்ட மூன்று தனித்தனி வண்ணங்களில் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் துவா‌ரகநா‌த்‌. அந்தந்த காலக்கட்டத்தில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள், பொருட்கள், உடைகள் என ஒவ்வொன்றும் கவனமாக பார்த்து படமாக்கப்பட்டுள்ளது.

ஹீரோயிசமான சண்டைக் காட்சிகள் எதுவுமில்லை. ஆனால் கதைக்குத் தேவையான ஆக்‌ஷன் காட்சிகளை மிகையில்லாமல் யதார்த்தமாக செய்து கொடுத்திருக்கிறார் சண்டை இயக்குனர் தவசிராஜ். பெங்களுர் டி.வி.ஜி. ரோட்டில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது நடந்த கலவரத்தை அதே பகுதியில் அதே போன்று மீண்டும் செய்றகையாக நடத்தி படமாக்கப்பட்டுள்ளது. இதில் ஆயிரக்கணக்கான துணை நடிகர்கள் நடித்தனர். இந்தக் காட்சி படமாக்கப்படும்போது அதற்கு உரிய அனுமதி வழங்கியதோடு கர்நாடக போலீஸ் இருநூறு காவலர்களை பாதுகாப்புக்கு அனுப்பி உதவியது.

நிஜ சம்பவம் நிகழ்ந்த காவலர் குடியிருப்பிலேயே ஒரு மாதம் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தப்பட்டது. நிஜ சம்பவங்களை பார்த்திருந்த அந்த மக்கள் அதை சினிமாவாக படமாக்கியபோது அந்தக் காட்சிகளை கண்ணீருடன் பார்த்தார்கள். படப்பிடிப்பு நடக்கும் போதேஅவர்கள் சொன்ன சில சம்பவங்களும் படமாக்கப்பட்டு இணைக்கப்பட்டது. படத்தின் துவக்கத்தில் காவலர்களின் அணிவகுப்பு படமாக்கப்பட்டது. தங்கள் போலீஸ் குடும்பத்து கதை என்பதால் அவர்கள் அதிக ஒத்துழைப்பு கொடுத்தனர். பாபர் மசூதி இடிக்கப்பட்ட காட்சியும், அதை தொடர்ந்து நடந்த மதக் கலவரக் காட்சியும் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திடமிருந்து பெறப்பட்டு படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி படத்தில் வண்ணமும், ஒலியின் தரமும் மெருகேற்றப்பட்டுள்ளது.

நடி‌கர்‌ மற்‌றும்‌ தொழில்நுட்பக் கலைஞர்கள்:
நடிப்பு: அனீஷ் தேஜஸ்வர்(அறிமுகம்),ஸ்ருதி (அறிமுகம்), சரண்யா, திலீப்ராஜ், அவினாஷ் மற்றும் பலர், இசை: ஜேம்ஸ் வசந்தன், ஒளிப்பதிவு: துவாரகநாத், பாடல்கள்: நா.முத்துக்குமார்,யுகபாரதி, எடிட்டிங்: ஆண்டனி, ஆக்‌ஷன்: தவசிராஜ், நடனம்: வித்யா சங்கர், ஹர்ஷா‌,  மக்கள் தொடர்பு: ஜி.பாலன், மக்‌கள் தொ‌டர்‌பு உதவி  சுரே‌ஷ்
தயாரிப்பு நி‌றுவனம்‌: வஷிஸ்டா பிக்சர்ஸ், தயாரிப்பாளர்: இந்துமதி,
 கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: .எம்.ஆர்.ரமேஷ்,

கா‌வலர்‌ குடி‌யி‌ருப்‌பு‌ இயக்‌குநர்‌ ரமே‌ஷ்‌ பே‌ட்‌டி‌


தொ‌ண்‌ணூ‌று சதவீ‌தம்‌ படப்‌பி‌டி‌ப்‌பு‌ முடி‌ஞ்‌சி‌ட்‌டு. இன்‌னும்‌ பத்‌துநா‌ள்‌ சூ‌ட்‌டி‌ங்‌ இருக்‌கு. இப்‌போ‌ போ‌ய்‌கி‌ட்‌டு இருக்‌கு. நா‌லு பா‌ட்‌டு நா‌.முத்‌துக்‌குமா‌ர்‌ எழுதி‌ இருக்‌கா‌ரு. ஒரு பா‌ட்‌டு யு‌கபா‌ரதி‌ எழுதி‌யி‌ருக்‌கா‌ர்‌.எல்‌லா‌மே‌ பே‌க்‌ரவு‌ண்‌ட்‌ வருகி‌ற ஸா‌ங்‌ஸ தா‌ன்‌ , உதடு  எச்‌சரி‌க்‌கி‌றது ஒரு பா‌ட்‌டு  மட்‌டும்‌ தா‌ன்‌. அது தா‌ன்‌ இப்‌போ‌ சூ‌ட்‌டி‌ங்‌ போ‌ய்‌கி‌ட்‌டு இருக்‌கு.


எடுத்‌தவரை‌ பா‌ர்‌க்‌கி‌ற போ‌து படம்‌ எப்‌படி‌ இருக்‌கி‌றது?
ரொ‌ம்‌ப நல்‌லா‌ வந்‌தி‌ருக்‌கு. எடுத்‌தவரை‌ எடி‌ட்‌பண்‌ணி‌ மி‌யூ‌சி‌க்‌ டை‌ரக்‌டரி‌டம்‌ போ‌ட்‌டு கா‌ண்‌பி‌ச்‌சா‌ச்‌சு. படம்‌ பா‌த்‌துட்‌டு ரொ‌ம்‌ப நல்‌லா‌ வந்‌தி‌ருக்‌குன்‌னு ஆர்‌வத்‌தோ‌ட இசை‌யமை‌த்‌து கொ‌டுத்‌தா‌ர்‌. மக்‌களி‌டம்‌ போ‌ய்‌ சே‌ரும்‌ போ‌து தா‌ன்‌ அதோ‌ட ரி‌சலட்‌ தெ‌ரி‌யு‌ம்‌.

ரெ‌ண்‌டு மொழி‌யி‌ல எடுக்‌கும்‌ போ‌து பி‌ரச்‌சனை‌ இருந்‌தி‌ருக்‌குமே‌?

அதெ‌ல்‌லா‌ம்‌ ஒண்‌ணும்‌ இல்‌லை‌. தமி‌ழ்‌நா‌ட்‌டி‌லி‌ருந்‌து யூ‌னி‌ட்‌ எல்‌லா‌ம்‌ வந்‌ததா‌ல பி‌ரச்‌சனை‌ இல்‌லை‌.

உங்‌கள்‌ படங்‌கள்‌ பரபரப்‌பா‌ன சம்‌பவங்‌கள்‌ இருக்‌குமே‌?

இது உண்‌மை‌யா‌ன சம்‌பவம்‌. 1992 ல போ‌லி‌ஸ்‌ குவா‌ட்‌டர்‌ஸ்‌ல நடந்‌த சம்‌பவமா‌ இருப்‌பதா‌ல, நி‌றை‌ய பே‌ருக்‌கு தெ‌ரி‌யு‌ம்‌. சம்‌பவங்‌கள்‌ நடந்‌த இடத்‌துல எடுத்‌த போ‌து அங்‌கே‌ இருந்‌தவு‌ங்‌க பீ‌லி‌ங்‌ஸ்‌ நமக்‌கு தெ‌ரி‌யு‌து. அங்‌கே‌ இது நடந்‌தது. இங்‌கே‌ இது நடந்‌ததுன்‌னு சி‌லர்‌ சொ‌ல்‌லும்‌ போ‌து தெ‌ரி‌யு‌து. பசங்‌க என்‌ன பண்‌ணுவா‌ங்‌கன்‌னு லி‌யலஸ்‌டி‌க்‌கா‌க எடுத்‌தி‌ருக்‌கோ‌ம்‌. போ‌லி‌ஸ்‌ சை‌டுலே‌ர்‌ந்‌து எனக்‌கு நல்‌ல ஒத்‌துழை‌ப்‌பு‌ கி‌டை‌ச்‌சது.

நீ‌ங்‌கள்‌ போ‌லி‌ஸ்‌ ஸ்‌டோ‌ரி‌யா‌ எடுக்‌க கா‌ரணம்‌ என்‌ன?
 இந்‌த கதை‌ போ‌லி‌ஸ்‌ குவா‌ட்‌டர்‌ஸ்‌ல நடந்‌ததா‌ல தி‌ரும்‌ப போ‌லி‌ஸ்‌ ஸ்‌டோ‌ரி‌க்‌குள்‌ள போ‌க வே‌ண்‌டி‌யதா‌ இருநத்‌து. பா‌பர்‌மசூ‌தி‌ இடி‌ப்‌பு‌ சம்‌பவம்‌ நடந்‌த சமயத்‌துல நடந்‌த கா‌தல்‌ சம்‌பவம்‌. அதனா‌ல போ‌ிலுஸ்‌ குவா‌ர்‌ட்‌டர்‌ஸ்‌ நடந்‌ததுனா‌ல இதுல அது அடம்‌ பெ‌றுது.

ரெ‌ண்‌டா‌வது நா‌ன்‌ எடுக்‌கும்‌ போ‌ற வி‌ரப்‌பன்‌ படத்‌துலை‌யு‌ம்‌ போ‌லீ‌ஸ்‌ வரும்‌. அடுத்‌து பி‌ரபா‌கரன்‌ படம்‌ எடுக்‌கப்‌ போ‌றே‌ன்‌. எனக்‌கு வே‌ரெ‌ளா‌ரு வி‌த்‌தி‌யா‌சமா‌ன களம்‌ கி‌டை‌க்‌குது.  எதா‌ர்‌த்‌தமா‌ன படம்‌ எடுப்‌பதா‌ல நல்‌ல ஒரு வரவே‌ற்‌பு‌ இருக்‌கு. நி‌றை‌ய உண்‌மை‌யா‌ன சம்‌பவங்‌கள்‌ எடுப்‌பதா‌ல, அது தெ‌ரி‌ஞ்‌சவு‌ங்‌க நம்‌மகி‌ட்‌ட நி‌றை‌ய வி‌ஷயங்‌களை‌ பகி‌ர்‌ந்‌து கொ‌ள்‌வா‌ங்‌க.

பு‌துமுகங்‌களை‌ வை‌த்‌து யதா‌ர்‌த்‌த படம்‌ எடுக்‌கும்‌ போ‌து நி‌றை‌ய கஷ்‌டம்‌ வந்தி‌ருக்‌குமே‌?

இந்‌தப்‌ப படத்‌துதுல நடி‌த்‌த ஹீ‌ரோ‌ வந்‌து ஏற்‌கனவே‌ நா‌லு படம்‌ நடி‌ச்‌சி‌ருக்‌கா‌ரு. அது இன்‌னும்‌ ரி‌லி‌ஸ்‌ ஆகல. ஈசி‌யா‌ பண்‌ணுனா‌று. சோ‌னு என்‌கி‌ற கதா‌நா‌யகி‌ அவு‌ங்‌களும்‌ ரெ‌ண்‌டு படம்‌ பண்‌ணுனவு‌ங்‌க. அவு‌ங்‌க ஏற்‌கனவே‌ கே‌மி‌ரா‌வை‌ சந்‌தி‌த்‌தா‌ல படம்‌ இல்‌லா‌மல்‌ அந்‌த கே‌ரக்‌டரா‌ தெ‌ரி‌வா‌ங்‌க. சரண்‌யா‌ மே‌டம்‌ சொ‌ல்‌லவே‌ வே‌ண்‌டா‌ம்‌. அந்‌த அம்‌மா‌ கே‌ரகட்‌ரை‌ ரொ‌ம்‌ப நல்‌லா‌வே‌ பண்‌ணி‌ட்‌டு போ‌ய்‌ட்‌டா‌ங்‌க அதே‌ மா‌தி‌ரி‌ அவி‌னா‌ஸ்‌, தர்‌மா‌, தி‌லீ‌ப்‌ரா‌ஜ்‌ எல்‌லா‌ரும்‌ நல்‌லா‌ பண்‌ணி‌ருக்‌கா‌ங்‌க.

பி‌ரபா‌கரன்‌ படத்‌தை எடுக்‌க முடி‌வு‌ எடுத்‌ததி‌ன்‌ கா‌ரணம்‌?

எல்‌லா‌ருக்‌கும்‌ ஒரு சந்‌தே‌கம்‌. அவர்‌ இறந்‌துட்‌டா‌ரா‌ இல்‌லை‌யா‌ன்‌னு. ஆனா‌ல்‌ நா‌ன்‌ ரொ‌ம்‌ப நா‌ளா‌ அவரை‌ப்‌பத்‌தி‌ படம்‌ பண்‌ணனும்‌னு யோ‌சனை‌ பண்‌ணி‌க்‌கி‌ட்‌டே‌ இருந்‌தே‌ன்‌. இப்‌போ‌ அதுக்‌கு சரி‌யா‌ன டை‌ம்‌. இப்‌போ‌ தா‌ன்‌ சரி‌யா‌ன வா‌ய்‌ப்‌பு‌ வற்‌தி‌ருக்‌கு எனக்‌குன்‌னு பீ‌ல்‌ பண்‌றே‌ன்‌.

"குப்‌பி‌" படத்‌தி‌ல்‌ எந்‌த பக்‌கமும்‌ சா‌யா‌மல்‌ நடுநி‌லை‌யா‌டு எடுத்‌தீ‌ர்‌கள்‌? இந்‌த பி‌ரபா‌கரன்‌ படத்‌தி‌ல்‌?

இதுவு‌ம்‌ அதே‌ மா‌திரி‌ தா‌ன்‌ இருக்‌கும்‌. யா‌ரை‌யு‌ம்‌ பு‌ண்‌படுத்‌த மா‌ட்‌டே‌ன்‌. அவரும்‌ இருந்‌தா‌ரு. அரசா‌ங்‌கமும்‌ இருக்‌கு. யா‌ரும்‌ இல்‌லே‌ன்‌னு சொ‌ல்‌ல முடி‌யு‌மா‌? நா‌ன்‌ யா‌ரை‌யு‌ம்‌ குறை‌ சொ‌ல்‌லா‌மல்‌ படம்‌ எடுப்‌பே‌ன்‌. என்‌ன நடந்‌ததுன்‌னு மக்‌களுக்‌கு சொ‌ல்‌லா‌ம்‌. இது உமர்‌முக்‌தா‌ மாதி‌ரி‌யா‌ன படம்‌.

ஒரு வரலா‌று இருக்‌கும்‌. இது ரி‌யல்‌ இன்‌சி‌டெ‌ன்‌ட்‌ நி‌றை‌ய உள்‌ள படம்‌. அதை‌த்‌தா‌ன்‌ ஆரா‌ய்‌ச்‌சி‌ பண்‌ணி‌க்‌கி‌ட்‌டு இருக்‌கே‌ன்‌.

சமரசம்‌ செ‌ய்‌து படத்‌தை‌ எடுக்‌க முடி‌யு‌மா‌?
போ‌ரா‌ட்‌டம்‌ நடந்‌தது உண்‌மை‌தா‌ன்‌ அதி‌ல்‌  எந்‌த மா‌ற்‌றமும்‌ இல்‌லை‌. போ‌ரா‌ட்‌டம்‌ ஆரம்‌பி‌த்‌தது, தொ‌டர்‌ந்‌து எல்‌லா‌ம்‌ உண்‌மை‌தா‌ன்‌ அதுக்‌கு பி‌றகு என்‌ன நடந்‌தது. அது சரி‌யா‌ தவறா‌ என்‌பதெ‌ல்‌லா‌ம்‌ யா‌ரலயு‌ம்‌ சொ‌ல்‌ல முடி‌யா‌து. அவு‌ங்‌க உரி‌மை‌க்‌கா‌க போ‌ரா‌டி‌னா‌ங்‌கன்‌னு சொ‌ல்‌றா‌ங்‌க. இவு‌ங்‌க நம்‌ம நா‌ட்‌ல பி‌ரவு‌ வரக்‌கூடா‌துன்‌னு போ‌ரா‌டுறா‌ங்‌க நமக்‌கு எந்‌த பா‌தி‌ப்‌பு‌ம்‌ வரக்‌கூடா‌துன்‌னு நா‌ம போ‌ரா‌டுறோ‌ம்‌. எல்‌லா‌த்‌தை‌யு‌ம்‌ சொ‌ல்‌றது தா‌ன்‌ இந்‌தப்‌ படம்‌.எனக்‌கு இது சவா‌லா‌ன படம்‌.

பி‌றந்‌த நாள்‌ வா‌ழ்‌த்‌துக்‌கள்‌. நே‌த்‌து நா‌ன்‌ போ‌ன பி‌றகு சண்‌டை‌யா‌. அவு‌ங்‌க ரொ‌ம்‌ப கோ‌வமா‌ இருந்‌தா‌ங்‌க. என்‌ன ஆச்‌சு. நம்‌ம பி‌ரச்‌சனை‌யா‌? எனக்‌கு டெ‌ன்‌ஷனா‌ இருக்‌கு. பசங்‌களை‌ கடி‌ச்‌சி‌கி‌ட்‌டி‌ருந்‌தா‌ங்‌க.

நி‌ங்‌க கை‌ய கா‌ல வச்‌சுக்‌கி‌ட்‌டு சும்‌மா‌ இருக்‌க மா‌ட்‌டே‌ன்‌றி‌ங்‌க. எதா‌வது பா‌ர்‌த்‌துட்‌டுடா‌ங்‌களா‌ன்‌னு பயமா‌ இருக்‌கு.
 அப்‌படி‌யி‌ல்‌லன்‌னா‌ நி‌ங்‌க அவு‌ங்‌கள சமா‌தா‌ன படுத்‌துங்‌க ப்‌ளி‌ஸ்‌. என்‌ எதி‌ரே‌ அவு‌ங்‌கள கோ‌பப்‌பட்‌டு பே‌சா‌தி‌ங்‌க. அவு‌ங்‌க கோ‌பமா‌ இருந்‌தா‌ கூட நி‌ங்‌க கோ‌வ படா‌தி‌ங்‌க.ஸா‌ரி‌ப்‌பா‌ நா‌ன்‌ நே‌த்‌து கோ‌பமா‌ இருந்‌ததா‌னா‌ல  நி‌ங்‌க சமதா‌ன படுத்‌த போ‌ய்‌, அத பா‌ர்‌த்‌தி‌ருப்‌பா‌ங்‌களோ‌ அது தா‌ன்‌ அவு‌ங்‌க கோ‌வமா‌ ஆயி‌ட்‌டா‌ங்‌களோ‌. நா‌னும்‌ உங்‌களை‌ இம்‌சை‌ப்‌படுத்‌தி‌டே‌ன்‌ல. நீ‌ங்‌க வந்‌து சொ‌ல்‌ற வரை‌ என்‌ மை‌ண்‌ட்‌ கி‌ளி‌யரா‌கா‌து.மறுபடி‌யு‌ம்‌ நா‌ன்‌ வீ‌ட்‌டுக்‌கு போ‌ற சூ‌ழ்‌நி‌லை‌ வந்‌தி‌டுமோ‌ன்‌னு பயமா‌ இருக்‌கு.

காவலர் குடியிருப்பு படத்தின் பாடல் வெளியீட்டு விழா


சயனைடு குப்பி படத்தை தயாரித்து இயக்கிய ஏ.எம்.ஆர்.ரமேஷ், தற்போது இயக்கி உள்ள படம் காவலர் குடியிருப்பு. இப்படத்தில் புதுமுகங்கள் அனீஷ் தேஜஸ்வர்(அறிமுகம்), ஸ்ருதி (அறிமுகம்), சரண்யா, திலீப்ராஜ், அவினாஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். சுபிரமணியபுரம் படத்தின் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இப்படத்திற்கு இசையமைக்க, பாடல்களை கவிஞர் நா.முத்துக்குமார், யுகபாரதி ஆகியோர் எழுதி உள்ளனர். பாடல்களை சோனி ஆடியோ நிறுவனம் வெளியிட்டுள்ளது

இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள போர் பிரேம் திரையரங்கில் நடந்தது. சன் பிக்சர்ஸ் கூடுதல் செயல் அதிகாரி ஹன்சராஜ் சக்சேனா முதல் பாடல் சிடியை வெளியிட இயக்குநர்கள் அமீர், பாலாஜி சக்கிதவேல் இருவரும் பெற்றுக்கொண்டனர்.

விழாவுல் இயக்குநர் அமீர் பேசுகையில் "தமிழ்நாட்டில் நடந்த சம்பவங்களை படமாக்க இங்கே யாரும் முன்வராத நிலையில், கர்நாடகத்தை சேர்ந்த ஏ.எம்.ஆர்.ரமேஷ்தான் அதை வைத்து சயனைடு (குப்பி) என்ற படத்தைத் தந்தார்.

இப்போது பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது நடந்த கலவரத்தை மையமாக வைத்து, 'காவலர் குடியிருப்பு' படத்தை இயக்கி இருக்கிறார். உண்மை சம்பவங்களை படமாக்க ஒரு சிலர் மட்டும்தான் இருக்கிறார்கள். அதில், ஏ.எம்.ஆர்.ரமேசும் ஒருவர்.

தமிழ்நாட்டுக்கும், கர்நாடகத்துக்கும் இடையே எத்தனையோ பிரச்சினைகள் இருந்தாலும், 2 மாநிலங்களையும் இணைப்பது சினிமா மட்டும்தான். 2 மாநில மக்களுக்கும் இடையே பாலமாக இருப்பது சினிமாதான்...", என்றார்

பின்னர் பேசிய படத்தின் இயக்குநர் ஏஎம்ஆர் ரமேஷ், "நாட்டில் நடக்கும் கலவரங்கள் பல குடும்பங்களை சிதைத்துவிடுகின்றன. பல உயிர்களை பலிகொண்டுள்ளன. பலரை சிறைக்கு அனுப்பியிருக்கின்றன. பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, இவை அத்தனையும் பெங்களூரில் நடந்தது. இந்த கலவரத்தில் ஒருவர் 17 வருடங்களாக காணாமல் போனார். நிஜ சம்பவம்  நிகழ்ந்த காவலர் குடியிருப்பிலேயே ஒரு மாதம் தங்கி படப்பிடிப்பு நடத்தினோம். நிஜ சம்பவங்களை பார்த்த பொதுமக்கள், அதை சினிமாவாகப் படமாக்கியபோது, கலவர காட்சிகளை கண்ணீருடன் பார்த்தார்கள்...நல்ல கலைக்கும் கலைஞர்களுக்கும் மொழி பேதம் கிடையாது. அது மக்களுக்குத் தெரியும்” என்றார்

இயக்குநர் ஏ.எம்.ஆர்.ரமேஷ், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், ஒளிப்பதிவாளர் துவாரகநாத், கதாநாயகன் அனீஷ் தேஜஸ்வர், திலீப்ராஜ்,   ஆகியோர் தங்களுடைய பட அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.

முன்னதாக விழாவுக்கு வந்த அனைவரையும் மக்கள் தொடர்பாளர் பாலன் வரவேற்றார். விழா நிகழ்ச்சிகளை தஞ்சை அமலன் தொகுத்து வழங்கினார்.